PDA

View Full Version : படித்ததில் சிரித்தவை



er_sulthan
27-03-2012, 11:27 AM
http://1.bp.blogspot.com/_-5Cl9WHU-Uo/SfVd1hm3YOI/AAAAAAAAD2Y/3S2QZc3reC8/s1600/TamilJoke3.jpg
அந்த டாக்டர் ஆபரேஷன் பண்றப்ப கூட மயக்க மருந்து யூஸ்

பண்ண மாட்டாரு."

"அடடா, ஆச்சர்யமா இருக்கே!"

"ஆனா, முதல்லேயே ஃபீஸ் எவ்வளவு ஆகும்னு சொல்லிடுவாரு!"

**************
தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?

தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..

***************
பேஷன்ட்: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!
டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான். அதை நினச்சு சந்தோஷப்படுங்க..
*****************

கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?

ஏன்?

கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே...?

*****************

அதோ போறானே அவன்தான் என் குடியைக் கெடுத்தவன்…

அடப்பாவி, அப்படி என்ன செஞ்சான்?

பிராந்தியை கிளாஸ்ல ஊத்தி குடிக்கும் போது தட்டி விட்டுட்டான்…!

******************
காதலி : சுண்டல் கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்?
காதலன் : இது ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.!

******************
நேற்று பக்கத்துக்கு வீட்டு பாபுவை ''ஒன்றுக்கும் லாயக்கில்லைன்னு'' சொன்ன பிறகு எல்லோரும் மூக்கில விரல வைக்கும்படி ஒரு காரியம் செய்துட்டான்.

அப்படி என்ன காரியம் செய்தான்?

நம்ம தெரு செப்டிக் டாங் தொட்டியை குச்சியால கலக்கிட்டான்.

****************
"கேள்வி கேட்டதுக்காகவா மிஸ் உன்னை அடிச்சாங்க?"

"ஆமா, 'உங்களுக்கெல்லாம் யார் வேலை குடுத்தது?'ன்னு கேட்டேன்."

****************

"ஏன்டா திலீபன், உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?"

"எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...!"

*****************
"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."

"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!"

******************
"பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொன்னார்னு சொன்னியே

யாருக்கு என்னாச்சு?"

"டாக்டருக்குத்தான், இன்னிக்கு ஒரு ஆபரேஷன் கேஸ்கூட அவருக்கு கிடைக்கலையாம்?"
படித்து சிரித்தவன்,
Engr.Sulthan

sarcharan
28-03-2012, 09:34 AM
"கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது"-
இதை படிச்சதும் சிரிச்சுட்டேன்

arun
17-04-2012, 02:00 PM
எல்லா ஜோக்கும் அருமை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் ரசித்து படித்தேன் ..

கலைவேந்தன்
17-04-2012, 02:37 PM
சிரிக்கவைத்தன எல்லாமே.. பகிர்வுக்கு நன்றி சுல்தான்..!!