PDA

View Full Version : பணக்காரர்களின் மின்சாரம் (Solar)



அமீனுதீன்
25-03-2012, 05:01 AM
இன்னும் சில ஆண்டுகளில் சென்னை, கோவை, சேலம் போன்ற நகரங்களில் பெரும் பணக்காரர்கள், வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் தங்கள் வீட்டு மாடிகளில் சூரிய மின் பலகைகளைப் பொருத்தி வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தில் கணிசமான பகுதியைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும் ஏற்பாடு வந்து விடலாம்.

சூரிய மின் பலகைகள் (Solar Panels) சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றித் தருபவை. வீட்டில் இருந்தபடி ஆர்டர் கொடுத்தால் போதும். சில வாரங்களில் மாடி ’மின்சார நிலையம்’ நிறுவப்பட்டு விடும். இதை செயல்படுத்தித் தர இப்போது இந்தியாவில் பல தனியார் நிறுவனங்கள் உள்ளன.

http://1.bp.blogspot.com/-rC1BkWJ_P5A/TxjOS-cV0AI/AAAAAAAAAwI/VRhan9p5YAw/s1600/solar+power+roof+top+solar+panels.jpg (http://1.bp.blogspot.com/-rC1BkWJ_P5A/TxjOS-cV0AI/AAAAAAAAAwI/VRhan9p5YAw/s1600/solar+power+roof+top+solar+panels.jpg)வெளிநாட்டில் வீட்டுக் கூரை மீது
சூரிய மின் பலகைகள்அமெரிக்காவிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் வீடுகளில் ஏற்கெனவே இப்படியான மாடி மின் நிலையங்கள் வந்து விட்டன. வர்த்தக நிறுவனங்களின் கூரைகளிலும் சூரிய மின் பலகைகள் பொருத்தப்பட்டு அவையும் சொந்தமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள ஆரம்பித்துள்ளன.

http://2.bp.blogspot.com/-PZ8ueV94pNU/TxjOfYhoIKI/AAAAAAAAAwQ/o2LLccP4cQA/s1600/solar+power+factory+roof+top+panes.jpg (http://2.bp.blogspot.com/-PZ8ueV94pNU/TxjOfYhoIKI/AAAAAAAAAwQ/o2LLccP4cQA/s1600/solar+power+factory+roof+top+panes.jpg)பாக்ட்ரியின் கூரை மீதும்
சூரிய மின் பலகைகள்சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சிறிய சில்லுகள் 1954 ஆம் ஆண்டு வாக்கில் தான் முதல் தடவையாக உற்பத்தி செய்யப்படலாயின. ஆரம்ப நாட்களில் இவ்வித சில்லுகள் விளையாட்டு பொம்மைகள், கால்குலேட்டர்கள் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர் இத்தொழில்நுட்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அப்படியும் கூட இந்த முறையின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு மிக அதிகமாக இருந்தது. ஆகவே சூரிய மின் பலகைகளைப் பயன்படுத்தி கணிசமான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலாது என்ற நிலைமைதான் இருந்தது.

http://4.bp.blogspot.com/-6t6NVKb2_lU/TxjPz031qtI/AAAAAAAAAwY/be-J9bm3AwI/s320/solar-panels-satellites.gif (http://4.bp.blogspot.com/-6t6NVKb2_lU/TxjPz031qtI/AAAAAAAAAwY/be-J9bm3AwI/s1600/solar-panels-satellites.gif)செயற்கைக்கோளின் இரு புறங்களிலும்
சூரிய மின் பலகைகள்பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்களில் உள்ள கருவிகள் இயங்குவதற்கு மின்சாரம் தேவை என்பதால் -- செலவானாலும் பரவாயில்லை என்று சூரிய மின் பலகைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். 1958 ஆம் ஆண்டில் தான் முதல் தடவையாக அமெரிக்காவின் வான்கார்ட் (Vanguard) செயற்கைக்கோளில் சூரிய மின் பலகைகள் பயன்படுத்தப்பட்டன.

சூரிய மின் பலகைகள் மூலம் மின்சாரத்தைப் பெறுவதானால் ஒரு வாட் மின்சாரம் பெற 100 டாலர் செலவாகும் என்ற நிலைமைதான் 1971 ஆம் ஆண்டில் இருந்தது. பின்னர் பல நவீன முன்னேற்றங்கள் காரணமாக இது 10 டாலர் ஆகக் குறைந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் இது கிட்டத்தட்ட ஒரு டாலராகக் குறைந்து விட்டது.

http://2.bp.blogspot.com/-IFRQyhXF1T8/TxjX4dgoeXI/AAAAAAAAAwg/uOkQ80PiCG8/s320/solar+panels+big+scale+europe.jpg (http://2.bp.blogspot.com/-IFRQyhXF1T8/TxjX4dgoeXI/AAAAAAAAAwg/uOkQ80PiCG8/s1600/solar+panels+big+scale+europe.jpg)சூரிய மின்சார நிலையங்கள் நிறைய இடத்தை
அடைத்துக் கொள்பவைஎனினும் இந்தியாவில் வீட்டு மொட்டை மாடியில் பெரிய சூரிய மின் பலகைகளை வைத்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை உற்ப்த்தி செய்து கொள்வதானால் மின்சார உற்பத்திக்கான செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ 15 ஆக இருக்கும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. இது மின்சார வாரியம் மூலம் பெறும் மின்சாரத்துக்கு அளிக்கும் கட்டணத்தை விட மிக அதிகம்.

மேலை நாடுகளிலும் சரி, ஜப்பான் போன்ற நாடுகளிலும் சரி, தனியார் நிறுவனங்கள் தான் மின்சாரத்தை உற்பத்தி செய்து வினியோகிக்கின்றன. இவை வசூலிக்கும் கட்டணமும் வீட்டு மாடியில் சூரிய மின் பலகைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதற்கு ஆகும் செலவும் கிட்டத்தட்ட சம நிலையை எட்டுமானால் அப்போது நிறையப் பேர் சூரிய மின் பலகைகளுக்கு மாறுவர். இந்த சம நிலையானது Grid Parity என்று குறிப்பிடப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்த சம நிலை எட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. சீனாவில் இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த நிலை எட்டப்படலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது.

http://1.bp.blogspot.com/-XPk2QEaum60/TxjYsaH51ZI/AAAAAAAAAwo/6y7zJDv6Hog/s1600/solar+power+plants+US.jpg (http://1.bp.blogspot.com/-XPk2QEaum60/TxjYsaH51ZI/AAAAAAAAAwo/6y7zJDv6Hog/s1600/solar+power+plants+US.jpg)கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
சூரிய மின்பலகைகள்அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஜப்பான் ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த நிலை எட்டப்பட்டு விட்டது. ஹவாய் தீவுகளில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் அங்கு சூரிய மின் பலகைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வது ஆதாயமாக உள்ளது.

சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதானால் ஓரிடத்தில் ஆண்டில் சுமார் 300 நாட்கள் வெயில் அடிப்பதாக இருக்க வேண்டும். தவிர, வீடு, அல்லது அலுவலகத்தின் மின் தேவை முழுவதையும் சூரிய ஒளி மூலம் பெற முடியாது. ஏனெனில் பகலில் மட்டுமே மின் உற்பத்தி சாத்தியம். ஆகவே மொத்த மின் தேவையில் ஒரு பகுதியை மட்டுமே இந்த முறை மூலம் பெற முடியும். மீதித் தேவைக்கு பொது மின் இணைப்பு (Grid) மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

வீட்டு மாடியில் அல்லது அலுவலக மாடியில் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உறபத்தி செய்து கொள்வது என்பது அவரவர் செய்கின்ற முடிவாகும். அரசு அல்லது பெரிய மின் நிறுவனம் பெரிய அளவில் பல மெகாவாட்(Mega Watt) மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்பது வேறு விஷயம்.

பெரிய அளவில், அதாவது பல மெகாவாட் அளவில், மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் முன்னணியில் உள்ளன. குறிப்பாக ஜெர்மனி முதல் இடம் வகிக்கிறது. சூரிய மின்சாரத்திலும் இரண்டு வித முறை உள்ளது. முதல் முறையில் திறந்த வெளியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் எண்ணற்ற சூரிய மின் பலகைகள் நிறுவப்பட்டு நிறைய மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முறையில் சூரிய ஒளி நேரடியாக மின்சாரமாக மாற்றப்படுகிறது.

http://1.bp.blogspot.com/-xZEIlnEAkdI/TxjZTnTHxeI/AAAAAAAAAww/tJPH7_vGy6g/s320/solar+power+gemasolar+spain.jpg (http://1.bp.blogspot.com/-xZEIlnEAkdI/TxjZTnTHxeI/AAAAAAAAAww/tJPH7_vGy6g/s1600/solar+power+gemasolar+spain.jpg)சூரிய ஒளியை ஆடிகள் மூலம்
திருப்பி விட்டு மின் உற்பத்திஇரண்டாவது முறை சற்று வித்தியாசமானது. திறந்த வெளியில் ய்ரமான கோபுரம் நிறுவப்படுகிறது. அதன் உச்சியில் தண்ணீர் அல்லது வேறு திரவம் இருக்கும். கோபுரத்தைச் சுற்றித் தரையில் எண்ணற்ற ஆடிகள் (Mirrors) பொருத்தப்பட்டிருக்கும். இவை சூரிய ஒளியை கோபுர உச்சிக்குத் திருப்பும். இதனால் உச்சியில் உள்ள திரவம் கடுமையாகச் சூடேறும். இந்த சூடான திரவத்தைப் பயன்படுத்தி நீராவி உற்பத்தி செய்யப்படும். இந்த நீராவி (அனல் மின் நிலையத்தில் நடைபெறுவது போல்) மின் உற்பத்திக்கான ஜெனரேட்டர்களை இயக்கும்.

இந்த இரண்டு முறைகளிலுமே நிறைய நிலம் தேவை. உதாரணமாக சுமார் 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதானால் 600 ஏக்கர் நிலம் தேவை. தவிர, பகல் நேரங்களில் மட்டுமே மின் உற்பத்தி சாத்தியம். ஆனால் அண்மையில் இரண்டாவது முறையில் மேலும் முன்னேற்றம் புகுத்தப்பட்டுள்ளது. கோபுரத்தின் உச்சியில் உப்பு வைக்கப்படுகிறது. இது சூடேறி கொதிக்கும் உப்புக் குழம்பாக மாறுகிறது. இதில் ஒரு பகுதி நிலத்துக்கு அடியில் சேமித்து வைக்கப்படுகிறது. அதைக் கொண்டு இரவிலும் மின் உற்பத்தி சாத்தியமாக்கப்பட்டுள்ளது (காண்க சூரியன் மூலம் 24 மணி நேர மின் உற்பத்தி (http://www.ariviyal.in/2011/10/24.html)).

மேலே குறிப்பிடப்பட்ட முதல் முறை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது இப்போது இந்தியாவில் ஆரம்ப நிலையில் உள்ளது. தனியார் நிறுவனங்கள் சூரிய மின் நிலையங்களை நிறுவுவதை இந்திய அரசு ஊக்குவிக்கிறது. இதற்கான பல சலுகைகளை அளிக்கிறது. ஆகவே பல நிறுவனங்கள் இதில் இப்போது தீவிரமாக முனைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அரசின் தேசிய மின்சார நிறுவனம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு உள்ளது. இந்த ஏற்பாட்டில் ஒரு யூனிட் மின்சாரம் எட்டு ரூபாய் என்ற விலையில் வாங்கிக் கொள்ளப்படும் என்று ஒரு தகவல் கூறுகிறது.

சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைப் பெறுவதில் இந்தியாவில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. முதலாவதாக இந்தியாவில் மேலே குறிப்பிடப்பட்ட Grid Parity ஏற்பட நீண்ட காலம் ஆகலாம். தவிர, சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் ஏக்கர் கணக்கில் நிலத்தை விழுங்குபவை. மக்கள் அடர்த்தி அதிகமுள்ள இந்தியாவில் இது ஒரு பிரச்சினையே.

மானிலங்களின் மின் வாரியத்திடமிருந்து தேவையான மின்சாரத்தைப் பெற முடியாத நிலையில் அதிகச் செலவில் டீசல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள வேண்டியுள்ள தனியார் நிறுவனங்கள் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்கிக் கொள்ள முன்வரலாம்.

சூரிய ஒளி வற்றாதது. என்றும் கிடைப்பது. ஆகவே சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது வரவேற்கத்தக்கதே. ஆனாலும் உலகில் எந்த ஒரு சூரிய மின் நிலையமும் பொதுவில் 100 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை. சீனாவில் இப்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள சூரிய மின்சார நிலையம் தான் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இருக்கிறது.

சூரிய மின் நிலையத்திலிருந்து இரவு பகல் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வழியில்லை. காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் பிரச்சினை உள்ளது. ஒரு மானிலத்தில் பல காற்றாலைகள் சேர்ந்து மொத்தம் 3000 மெகாவாட் மின்சாரத்தை அளிக்கலாம். ஆனால் மறு நாளே உற்பத்தி 400 மெகாவாட்டாக ஒரேயடியாகக் குறைந்து விடலாம். காற்றை நம்ப முடியாது.

இந்தியாவின் மொத்த மின்சார உபயோகத்தில் சுமார் 70 சதவிகிதம் அனல் மின் நிலையங்கள் மூலம் பெறப்படுகிறது. சூரிய மின்சாரமோ காற்றாலை மின்சாரமோ அனல் மின் நிலையத்துக்கு மாற்றாக இருப்பது சந்தேகம். ஆனால் எதிர்காலத்தில் அணுமின் நிலையங்கள் மாற்றாக விளங்கலாம்.

அணுமின் நிலைய யூனிட் ஒன்று 1400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஒரே இடத்தில் மூன்று அல்லது நான்கு யூனிட்டுகளை அமைக்கும் போது குறைந்தது 4000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அதுவும் பிரச்சினை இன்றி தொடர்ந்து இரவு பகல் 24 மணி நேரமும் கிடைக்கும்.

http://3.bp.blogspot.com/-DuKx0OgrcT8/Txjbqzra6mI/AAAAAAAAAw4/Z9j4n4splwc/s1600/kashiwazaki+nuclear+power+plant.jpg (http://3.bp.blogspot.com/-DuKx0OgrcT8/Txjbqzra6mI/AAAAAAAAAw4/Z9j4n4splwc/s1600/kashiwazaki+nuclear+power+plant.jpg)ஜப்பானில் உள்ள காஷிவாசாகி-கரிமா
அணுமின் நிலையம்உதாரணமாக ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மொத்தம் சுமார் 8000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதுவே உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையமாகும். அதற்கு அடுத்தபடியாக கனடாவில் உள்ள புரூஸ் அணுமின் நிலையம் 6000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. திட்டமிட்டபடி அனைத்து யூனிட்டுகளும் கட்டி முடிக்கப்பட்டால் கூடங்குளம் அணுமின் நிலையம் உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்து விடலாம்.

மத்திய அமைச்சர் ஒருவர் அண்மையில் கூறுகையில் அணு மின்சாரம் தான் மிகவும் விலை குறைந்தது என்றார்.மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளும் இதைக் காட்டுகின்றன. எனினும் இதில் இரண்டு விதக் கருத்து உண்டு - அணுமின்சாரம் குறைந்த விலையிலான மின்சாரம் அல்ல என்று கூறி புள்ளி விவரம் அளிப்பவர்களும் உள்ளனர். எது எப்படியோ சூரிய மின்சாரத்தை விட அணுமின்சாரம் நிச்சயம் விலை குறைவு என்ப்தை யாரும் மறுக்க மாட்டார்கள். அணுமின்சாரத்தை ஏழைகளின் மின்சாரம் என்று யாரும் கூற மாட்டார்கள் என்றாலும் சூரிய மின்சாரம் இன்றைய நிலையில் பணக்காரர்களின் மின்சாரமே.

Thanks: www.ariviyal.in (http://www.ariviyal.in)

ஓவியன்
25-03-2012, 10:42 AM
சூரிய கலத்தினை உபயோகத்தி மின்சாரத்தை உற்ப்பத்தி செய்வதை பணக்காரர்களின் மின்சாரமென்பதை என்னால் ஏற்க முடியாது....

ஏனென்றால் சூரிய கலங்களுக்கான ஆரம்ப முதலீட்டுக்கே அதிக பணம் தேவைப்படும், பின்னர் பராமரிப்புச் செலவு மிகக் குறைவே. ஆகவே நீண்ட நோக்கில் பார்த்தால் சூரிய கலத்திலான மின்சாரம் செலவு குறைவானதென்பதே என் கணிப்பு.

அத்துடன் சூரிய கலங்கள் மூலம், பெரியளவிலான மின்சார உற்பத்திக்கு வேண்டுமானால் பெரிய இட வசதியும் அதிக பணமும் தேவைப்படலாம் ஆனால் ஒரு வீட்டின் தேவைக்கான மின்சார வசதிக்கு அந்த வீட்டின் கூரையில் பொருத்தப்பட்ட சூரிய கலங்களே போதுமானது. வெளி நாடுகளில் தனித்தனி வீடுகளில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை அந்த வீட்டுக்கு தேவையானது போக மீதியை மின் வாரியத்துக்கு விற்க கூடிய வசதி இருக்கின்றது.

சிவா.ஜி
25-03-2012, 06:41 PM
தமிழகத்திலும் இப்போது இது பரவலாக்கப்படுமென்றே தோன்றுகிறது. மானியமும் கிடைக்கும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இப்போது இதனை நிறுவி வருகிறார்கள் அரசு மானியத்துடன்.

கூடுதல் தகவல்களுக்கு நன்றி அமினுதீன்.

aren
26-03-2012, 02:02 AM
இதன்மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றே எதிர்பார்க்கிறேன்.

அன்புரசிகன்
26-03-2012, 02:42 AM
அண்மையில் இங்கு ஒரு வானொலியில் ஒரு மாநில அமைச்சர் பேசியது...
இப்போதைக்கு மக்களுக்கு சூரிய ஒளி மின்சாரத்திற்கான மானியம் வழங்கப்படமாட்டாது. காரணம் அதன் தற்போதய உற்பத்திச்செலவு.

ஆனால் 2020 காலப்பகுதிக்குள் இந்தியா தனது மக்களுக்காக அதனை தயாரிக்கும் சீனாவும் அந்த வேலையில் இறங்கும். அப்போது அவர்களிடமிருந்து குறைந்தவிலையில் இறக்குமதி செய்திடலாம் என்றார்... (காரணம் இங்கு மனித மணித்தியாலத்தின் பெறுமதியிலும் இந்தியா சீனா போன்ற நாடுகளில் கணிசமான அளவு குறைவு) பாரிய அளவில் உற்பத்தி செய்யும் போது நிச்சயம் விலை குறையும்.

ஒருகாலத்தில் பணக்காரவர்கத்திற்கு சொந்தமாக இருந்த அலைபேசி மற்றும் கணினிகள் இன்று ஏழைகளுக்கு எட்டக்கூடிய கனியாக மாறவி்ல்லையா. அவ்வாறு இதுவும் வரும். ஆகவே இது பணக்காரர்களின் மின்சாரம் என்பது ஏற்கக்கூடிய சொற்பதம் அல்ல...