PDA

View Full Version : செறிவிழந்த இரவும் காமமும் தனிமையும்...



ஆதி
22-03-2012, 06:59 AM
செறிவிழந்த ஒரு இரவின் இருளில்
ஊளையிடும் வேட்டைமிருகமென
அலைகிறது காமம்

அது
என் உடற்காட்டின் எல்லா மூலைவிரையிலும்
தன் ஈரநாவினை ஒரு சர்ப்பமென நெளியவிட்டு
என் பரப்பெங்கும் மூட்டுகிறது
மெலிந்த உஸ்ணத்தை

அறை விளக்கின் வெளிச்சத்தில்
ஊடிய நிலா ஒளியாய்
அது என்னை தன்னுள் கரைக்க ஆரம்பித்த
தருணத்தில்
என் அறைக்கதவை திறந்து கொண்டு நுழைகிறார்கள்
இதுகாறும் நான் சந்தித்தப் பெண்டீர் யாவரும்.

இந்த காமத்தின் வேட்டைமிருகத்துக்கு
அவர்கள் உவப்பளிப்பவர்களாக இல்லாததால்
யாவரையும் நிராகரித்து
என்னையே இன்னும் குரூரமாய் புசிக்கிறது அது

என் பலம் முற்றையும் இழந்து
அதனுள் நான் அடங்கி ஓடுங்குகையில்
ஒரு மதயானையென மூர்கமாய் என்னை
தனிமையின் மேய்ச்சல் நிலத்தில் எறிந்து
மேலும் என்னை வேட்டையாடுகிறது

என் அறைக்குள் நுழைந்த பெண்டீர்
இன்னும் போகாமலேயே இருக்கிறார்கள்
அவர்கள் யாவருக்கும் விடைக்கொடுத்து
அறை கதவை சார்த்த மனமற்றிருக்கும் வேளையில்
இன்னும் கடப்பதற்கு சாத்தியம்மற்ற நெடுந்தொலைவோடு இருக்கிறது
செறிவிழந்த இரவும்
அதன் காமமும்
தனிமையும்...

ஆதவா
22-03-2012, 06:20 PM
இந்த கவிதையை (நான் பார்க்கும் கோணத்தில்) பண்பட்டவர் பகுதிக்கு நகர்த்திவிடலாம் என்று நினைக்கிறேன்.

இந்த காமமே அப்படித்தானுங்க ஆதி...
நெருங்கி பிணைந்து முத்தமிட்டு இறுக்கி கொன்று மீண்டும் உயிர்ப்பித்து நெருங்கி பிணைந்து முத்தமிட்டு.....
சமயத்தில் ஒற்றைப் பாலிலும், இருபாலிலும்

வெளிப்படையாக சொல்லமுடியாவிட்டாலும் தனிமையும், காமத்தின் கொடூரமும் மனவன்புணர்வும் ஒரு கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுவிடுகிறது. வேறு வழியின்றி அதை ”கையாளவேண்டியிருக்கிறது”

பாராட்டுக்கள்!

கவிதைக்கு சார்பான இன்னொரு கவிதை (http://tamilmantram.com/vb/showthread.php?t=28458)....

செல்வா
22-03-2012, 07:21 PM
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

அமரன்
22-03-2012, 11:20 PM
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

கொஞ்சக் காலத்தில் ஆதன் இதை இன்னொருவருக்குச் சொல்வார்..

நாகரா
05-05-2012, 07:44 AM
செறிவிழந்த ஒரு இரவின் இருளில்
ஊளையிடும் வேட்டைமிருகமென
அலைகிறது காமம்

அது
என் உடற்காட்டின் எல்லா மூலைவிரையிலும்
தன் ஈரநாவினை ஒரு சர்ப்பமென நெளியவிட்டு
என் பரப்பெங்கும் மூட்டுகிறது
மெலிந்த உஸ்ணத்தை

அறை விளக்கின் வெளிச்சத்தில்
ஊடிய நிலா ஒளியாய்
அது என்னை தன்னுள் கரைக்க ஆரம்பித்த
தருணத்தில்
என் அறைக்கதவை திறந்து கொண்டு நுழைகிறார்கள்
இதுகாறும் நான் சந்தித்தப் பெண்டீர் யாவரும்.

இந்த காமத்தின் வேட்டைமிருகத்துக்கு
அவர்கள் உவப்பளிப்பவர்களாக இல்லாததால்
யாவரையும் நிராகரித்து
என்னையே இன்னும் குரூரமாய் புசிக்கிறது அது

என் பலம் முற்றையும் இழந்து
அதனுள் நான் அடங்கி ஓடுங்குகையில்
ஒரு மதயானையென மூர்கமாய் என்னை
தனிமையின் மேய்ச்சல் நிலத்தில் எறிந்து
மேலும் என்னை வேட்டையாடுகிறது

என் அறைக்குள் நுழைந்த பெண்டீர்
இன்னும் போகாமலேயே இருக்கிறார்கள்
அவர்கள் யாவருக்கும் விடைக்கொடுத்து
அறை கதவை சார்த்த மனமற்றிருக்கும் வேளையில்
இன்னும் கடப்பதற்கு சாத்தியம்மற்ற நெடுந்தொலைவோடு இருக்கிறது
செறிவிழந்த இரவும்
அதன் காமமும்
தனிமையும்...
காமாந்தகாரத்தில்
ஜீவாமிழ்தமாய்
ஓயாமல் இழிந்து கொண்டிருக்கிறது
மார்பைப் பிளந்து இருதய நேர்மையாம்
காதல்

தேகாந்தகாரத்தின்
மூலை முடுக்குகளிலெல்லாம்
ஊடுருவிப் புறத்தே
பீறிட்டுத் தோல் மேல் விபூதிப்
பூச்சாய் வெளிப்பட்டுப்
பூரணமாய் ஒளிர்கிறது
காரண காரியச் சங்கிலி உருக்கும்
காதல்

ஞாலாந்தகாரத்தில்
யாவுந் தழுவிக் கழுவி
நேசாதாரத் தன்*மெய்(மை) பூசித்
தூசதுந் தூய்மையாக
பூச்சியும் பூவென மணக்க
பேரற்புத இரசவாதம் எவ்வித
ஆரவாரமும் இன்றி அமைதியாய்ச் செய்கிறது
காதல்

காமப் பரபரப்பையும்
ஏகாபரப் பரப்பாக்கி
நாக ராவை விழுங்கி
ஞான பூரண விடியலாய்
பூமியில் பூரணமாய்ப் படிகிறது
காதல்

காம ஆணி இருதயத்தில் இறக்கி
காதலின் ஆளுமையை எனக்கு
உணர்த்திய உம் அற்புதக் கவிக்கு வாழ்த்துக்களும் நன்றியும் ஆதன்.

ஆதி
24-05-2012, 11:12 AM
பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி

நாகரா ஐயாவின் ஞானக் கவிதைக்கு சிறப்பு நன்றிகள்