PDA

View Full Version : உன் காதல் கடிதங்களில்



ஆதி
21-03-2012, 12:37 PM
உன் காதல் கடிதங்களில் இருந்து
விரிகிற எனக்கான புல்வெளியால்
நிரம்பிவிடுகிறது எனது அறை

சாயம் போகாத
ஒரு மயிலின் நடனத்தில் துளிர்க்கும்
மழைநாளின் சில்லிப்பையும்
தலைவருடலுக்கு ஏங்கும்
நாய்க்குட்டியின் குழைவையும்
உண்டாகும் உன் வார்த்தைகள்
உறுஞ்சி குடிக்கின்றன*
என் சிறிது நேர தனிமையை...

அழுத்தமாய் நீ பதித்தனுப்பும்
உன் வண்ண இதழ்களின் சுவடிலிருந்து ஊறும்
எச்சில் காயாத முத்தங்களில்
ஈரம் ஆறாமல் இருக்கிறது
யுகயுகங்களாய் தனியாத உன் பேரன்பு..

ஆதவா
22-03-2012, 04:19 AM
கிளாஸ்!!!

காதலைக் கரைத்து குடித்துவிட்டது போல இருக்கிறது!
வாழ்த்துகள்

மதி
22-03-2012, 04:33 AM
தனியாத?

அண்ணன் எதோ லவ் மூட்ல இருக்கீங்கன்னு மட்டும் தெரியுது..!

வாழ்த்துக்கள்.

ஆதி
22-03-2012, 04:39 AM
கிளாஸ்!!!

காதலைக் கரைத்து குடித்துவிட்டது போல இருக்கிறது!
வாழ்த்துகள்

கலாய்க்கிறீங்களா ???

பின்னூட்டத்துக்கு நன்றி ஆத*வா....


தனியாத?

அண்ணன் எதோ லவ் மூட்ல இருக்கீங்கன்னு மட்டும் தெரியுது..!

வாழ்த்துக்கள்.

ஹி.. ஹி..

சாருவின் எக்ஸைல் படிச்சிக்கிட்டு இருக்கேன் அதான், உதயாவின் பாணியில் ஒரு கவிதை...

நன்றி மதி..

செல்வா
22-03-2012, 07:40 PM
கிளாஸ்!!!

காதலைக் கரைத்து குடித்துவிட்டது போல இருக்கிறது!
வாழ்த்துகள்

உண்மைய சொல்லுங்க கிளாஸ்ல கலக்கிக் கரைத்து குடித்தது போல இருக்கு நு தானே சொல்ல வந்தீங்க

சிவா.ஜி
22-03-2012, 08:36 PM
உண்மைய சொல்லுங்க கிளாஸ்ல கலக்கிக் கரைத்து குடித்தது போல இருக்கு நு தானே சொல்ல வந்தீங்க

இதையெல்லாம் சபையில சொல்லலாமா...

ஆதவா சொன்னதைப்போல கவிதையை முழுதாய் ரசிக்க முடிகிறது ஆதன். ஆதனின் தமிழில் காதலை வாசிக்க....இன்பமாய் இருக்கிறது.

வாழ்த்துக்கள் ஆதன்.

arun
24-03-2012, 12:35 PM
ரசிக்க முடிந்த கவிதை ! மிக அருமையாக வடிவமைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்

பாலன்
14-04-2012, 09:58 AM
அழகிய கவிரசனை கவிஞரே!!


தலைவருடலுக்கு ஏங்கும்..
யதார்தத்தில் இருக்கும் இடைவெளி எழுத்தில் எதற்கென்று இருந்துவிட்டீரோ?!:)