PDA

View Full Version : USE AND THROW



M.Jagadeesan
18-03-2012, 01:21 PM
என்நண்பர் பஜாரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் கடை வைத்திருந்தார். கடைக்கு USE AND THROW என்று பெயர் வைத்திருந்தார். நண்பரைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. எனவே அவரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டேன்.

நண்பருடைய பெயர் ஆராவமுதன். என்னைப் பார்த்தவுடன் முகமலர்ச்சியுடன் வரவேற்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது ஒரு வாடிக்கையாளர் வந்தார்.

" சார்! இந்த Mother board ல் Display வரவில்லை .கொஞ்சம் சர்வீஸ் செய்து தரமுடியுமா?" என்று அவர் கேட்டார்.

நண்பர் அந்த மதர்போர்டை வாங்கிப் பார்த்தார். " சார்! வாரண்டி பீரியட் இருந்ததுன்னா , வாங்குன கடையில பில்லைக் கொடுத்து வேற ஒரு மதர்போர்டு வாங்கிடுங்க; இல்லைன்னா புதுசா ஒன்னு வாங்குறதுதான் நல்லது.இத சர்வீஸ் பண்றது வேஸ்ட் சார்!.இது ரொம்ப பழைய மதர்போர்டு சார். இப்ப டெக்னாலஜி ரொம்பவும் மாறிடிச்சி சார்! எல்லாமே இன்பில்ட்டா வந்துடிச்சி; எனவே இதக் கடாசி எறிஞ்சிட்டு வேற ஒன்னு புதுசா வாங்கிடுங்க! எலக்ட்ரானிக்ஸ் ஐட்டம் எல்லாமே USE AND THROW Concept தான் சார்! கெட்டுப் போச்சுன்னா வேற ஒன்னு வாங்குறதுதான் நல்லது. அதனாலதான் என் கடைக்குக் கூட USE AND THROW ன்னு பேர் வச்சிருக்கேன்."

வாடிக்கையாளர் சென்றுவிட்டார். நான் நண்பரைப் பார்த்து," அமுதன் சார்! அப்ப நான் போயிட்டு வரேன். அப்பா அம்மாவைக் கேட்டதா சொல்லுங்க.அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா?" என்று கேட்டேன்.

அதற்கு நண்பர்," அவங்களப் பார்த்து ஆறு மாசம் ஆச்சு! " என்றார்.

நான் பதட்டத்துடன் , " ஏன்? என்ன ஆச்சு ?" என்று கேட்க

," என் மனைவிக்கும் , என் பெற்றோர்களுக்கும் ஒத்து வரவில்லை; அதனால அவங்கள முதியோர் இல்லத்துல சேத்துட்டேன்." என்று நண்பர் பதில் சொன்னார்.

இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

நண்பரைப் பார்த்து, " அமுதன்! தப்பு பண்ணிட்டீங்க! உங்களப் பெத்து வளர்த்து ஆளாக்கி இந்த நிலைக்குக் கொண்டு வந்தவங்கள சர்வ சாதரணமா தூக்கி எறிஞ்சிட்டீங்க! உங்க USE AND THROW concept ஐ உங்களுடைய பெற்றோர்கள் விஷயத்திலும் காட்டிட்டீங்க! நாளைக்கு உங்க பையனும் இதே USE AND THROW Cocept-ஐ உங்க கிட்ட காட்டுவான் " என்றேன்

நான் கூறியதைக்கேட்ட நண்பர், தலை நிமிர்ந்து பார்க்காமலேயே எனக்கு விடை கொடுத்தார்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
18-03-2012, 02:15 PM
மிகவும் நன்று ஐயா :)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=28696

கீதம்
19-03-2012, 01:03 AM
பெற்றவர்களை உபயோகம் முடிந்ததும் தூர எறிபவர்கள் அதே போல் தன்னலமற்ற அன்பைத் தரும் இன்னொரு பெற்றோரைத் தனக்கெனக் கொள்ளமுடியுமா? யோசிக்கவேண்டும்.

நல்ல கருத்துள்ள கதை. இத்தகைய மனநிலையில் உள்ளவர்கள் சிலர் மனம் மாறினாலும் கதைக்குக் கிடைத்த வெற்றி. பாராட்டுகள் ஐயா.

செல்வா
19-03-2012, 02:07 AM
பெருகி வரும் முதியோர் இல்லங்கள். நாளை நமக்கும் இதே கதி வந்தால் ..? என்ற எண்ணத்தை உணர வைத்துச் சுட்டிய கதை.
பகிர்வுக்கு நன்றி ஐயா.

M.Jagadeesan
19-03-2012, 02:19 AM
கீதம், செல்வா ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி

ஓவியன்
19-03-2012, 06:08 AM
எல்லோரும் இப்படியில்லை,
இப்படியானோரும் இல்லாமலில்லை...!!

திருந்தாதோர், திருந்த வேண்டும், அதற்கு விதையிட்ட கதைக்கு என் பாராட்டுகளும்..!! :)

M.Jagadeesan
19-03-2012, 06:22 AM
நண்பர் ஓவியன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி

aren
19-03-2012, 06:23 AM
இந்த மாதிரியான விஷயங்களை நாம் எதிர்பார்க்கவேண்டியதுதான். நாம் நம் பெற்றோர்களைப் பார்த்துக்கொண்டோம் ஆனால் நம் பிள்ளைகளும் நம்மை பார்த்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆகையால் நமக்கே இது நாளைக்கு நடந்தாலும் நாம் ஆச்சர்யப்படக்கூடாது.

இது ஒரு நல்ல படிப்பினையுள்ள கதி.

சூரியன்
19-03-2012, 01:46 PM
நல்ல கருத்தை முன்வைத்து எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

ஆதவா
19-03-2012, 02:16 PM
நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க....
ச்சிலசமயம் தவறு பெற்றோர்களின் மீதும் இருக்கலாம். என்றாலும் பெற்றவர்கள் எப்பொழுதும் பெற்றவர்களே

M.Jagadeesan
19-03-2012, 03:58 PM
பாராட்டுக்கள் நல்கிய ஆரென், ஆதவா, சூரியன் ஆகியோருக்கு நன்றி!

த.ஜார்ஜ்
19-03-2012, 04:50 PM
அதன் பிறகு நண்பர், USE AND THROW Cocept-ஐ உங்களிடமும் காட்டியிருப்பாரே.

M.Jagadeesan
19-03-2012, 05:04 PM
அதன் பிறகு நண்பர், USE AND THROW Cocept-ஐ உங்களிடமும் காட்டியிருப்பாரே.

நண்பர் எனக்குக் காட்டுவதற்கு முன்பாக , நான் அவருக்குக் காட்டிவிட்டேன்.

அன்புரசிகன்
20-03-2012, 02:38 AM
ஓவியனின் கருத்து தான்... எங்கும் இவ்வாறில்லை. ஆனால் நடந்தேறியவண்ணமே உள்ளது...

முதலில் இந்த அன்னையர் தந்தையர் மகளீர் போன்ற தினங்களை ஒழிக்க வேண்டும். காரணம் அந்த நாட்க்களில் மட்டும் தான் அவர்களை நினைக்கவேண்டும் என்ற எண்ணம் இன்றய சமுதாயத்தில் எழுந்துவிடும். பெற்றோரின் பிறந்ததினம் திருமணதினம் தெரியாத மடையருக்கு ஏனிந்த தினங்கள் தெரிய வேண்டும்....

இவ்வகை நட்புக்களையும் நீங்கள் எறிந்துவிடவேண்டியது தான். :D

அழகான கதை ஐயா

M.Jagadeesan
20-03-2012, 04:31 AM
அன்புரசிகனின் பாராட்டுக்கு நன்றி.