PDA

View Full Version : ஓரு நிமிடக்கதை.....நல்ல...எண்ணெய்...!!



சிவா.ஜி
13-03-2012, 09:26 PM
”ஆச்சா....பலகாரமெல்லாம் செஞ்சு முடிச்சாச்சா?”

கேட்டவரைப் பார்த்து....

“ஆச்சுங்க ஐயா....ஒவ்வொரு முறையும் பலகாரம் செஞ்சு முடிக்கும்போது தவறாம இங்க வந்து நிக்கறீங்களே ஏங்கையா...எங்க மேல நம்பிக்கையில்லையா?”

“அட பைத்தியக்காரா....என்கிட்ட வேலை செய்யறவங்கள நம்பாம வேற யாரை நம்புவேன்....எங்க என் மேல இருக்கிற விசுவாசத்துல....எனக்கு நஷ்டம் ஏற்பட்டுடக்கூடாதேன்னு தப்பு செஞ்சிடப்போறீங்களோன்னுதான் நானே வந்து நிக்கறேன்”

“என்னய்யா சொல்றீங்க நாங்க தப்பு செய்வோமா?”

“டே கொழந்த....அப்படி செய்யறது உன்னைப் பொருத்தவரைக்கும் தப்பில்ல....எஜமான விசுவாசம்....ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும்....தப்புதான்....அத நீங்க செஞ்சாலும் நான் செஞ்ச மாதிரிதான்....சரி...சரி....அந்த எண்ணையையெல்லாம் ஒரு டப்பாவுலக் கொட்டி...எடுத்துட்டுப் போய் முனிசிபாலிட்டிக் குப்பைக் கொட்டுற இடத்துலக் கொட்டிட்டு வந்துடுங்க”

“ஐயா அடிக்கடி சொல்றதுதான்....தப்பா நினைச்சுக்காதீங்க....ஒருமுறை உபயோகப்படுத்திய எண்ணையை.....இன்னொருமுறை உபயோகப்படுத்தக்கூடாதுன்னு அப்படியே குப்பையிலக் கொட்றதுக்கு....மனசு கேக்கலைங்க....இன்னும் ஒரு தடவையாவது உபயோகப்படுத்தலாமே....லாபம் கிடைக்குமில்லைய்யா?”

“கொழந்த...எனக்கு என் பாட்டன் முப்பாட்டன் சேத்துவெச்ச சொத்தே ஏராளமா இருக்கு. ஆனா உக்காந்து திண்ணா.....உள்ளதெல்லாம் போயிடும்....அதனாலத்தான்.....லாபக் கணக்குப் பாக்காம...முதலுக்கு வியாபாரம் பண்றேன்....இதை ஏன் அண்ணதானமா செய்யக்கூடாதுன்னு கேப்ப.....ஓசியாக் கொடுத்தா....அதுக்கு மதிப்பில்லடா....அதுக்குதான் ஒரு விலை....எல்லாருக்கும் கட்டுப்படியாகிற விலை.....இந்த ஓட்டலுக்குப் போனா....ஆரோக்கியமான சாப்பாடு.....அடக்கவிலையில கிடைக்கும்ன்னு மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கு அதக் கெடுத்து நான் இன்னும் பணக்காரனா ஆக விரும்பல”

“உங்க நல்ல மனசுய்யா....ஆனா...இதே எண்ணையை நாம உபயோகிக்காம வேற ஓட்டல்காரங்களுக்குக் கொடுத்தா.....அவங்களுக்கும் மலிவா கிடைக்கும், நமக்கும் கொஞ்சம் பணம் கிடைக்குமேய்யா?”

“அப்ப இங்க சாப்பிடறவங்க நல்லாருக்கனும், நம்ம எண்ணையை...மறுபடி, மறுபடி உபயோகிச்சு செய்யுற பலகாரத்த வேற ஓட்டல்ல திண்ணுட்டு வியாதி வர்ட்டுன்னு சொல்றியா....அப்ப நாம நல்லது செய்யனுன்னு நினைக்கறதோட அடிப்படையே அடிபட்டுப் போயிடுதேடா....நல்லெண்ணை தயாரிச்சு விக்கறவங்களே இதயம் தயாரிப்புன்னு சொல்லும்போது....அந்த எண்ணையை உபயோகப்படுத்திப் பலகாரம் செய்யுற நாம ஏன் இதை இதயத்தோட தயாரிக்கக்கூடாது?.......மூளை ஆயிரம் சொல்லும்....ஆனா இதயம் ஒண்ணுதான் சொல்லும்......அதுலதான் நல்ல மனுஷன் இருக்கிறான்......எதுல வேணுன்னாலும் ஏமாத்தலாண்டா....ஆனா வயித்துக்கு சாப்பிடற சாப்பாட்டுல ஏமாத்துனா......அவன் மனுஷனே இல்ல.....நான் மனுஷனா இருக்க விரும்பறேன்...”

“பசின்னு வர்றவங்களோட பாக்கெட்டப் பாக்காம...பசியைப் பாக்குற, ஆரோக்கியத்தப் பாக்குற இந்த ஓட்டலோட ஓனர் நல்லா இருக்கனும்ப்பா”

தர்மலிங்கத்தின் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டுப் போகும் சிலரின் வார்த்தைகள் குழந்தைசாமியின் காதுகளில் விழுந்தது. உபயோகித்த எண்ணையைக் குப்பையில் கொட்டினான்......நிமிர்ந்துபார்த்து தர்மலிங்கத்தைக் கும்பிட்டான்.

கீதம்
13-03-2012, 09:44 PM
மனிதாபிமானம், தர்மசிந்தனை, விழிப்புணர்வு , அன்னதானம் என்ற பெயரில் மக்களைச் சோம்பலுக்காளாக்காத நல்லெண்ணம் என்று எல்லாத் தரப்பிலும் நியாயம் பேசும் நல்லதொரு கதைக்குப் பாராட்டுகள் அண்ணா.

வீட்டிலேயே சிலர் இதுபோல் செய்ய முன்வருவதில்லை. உபயோகித்த எண்ணெயையே மறுபடி மறுபடி உபயோகித்த்தால் புற்றுநோய் வரக்கூடும் என்பதை அறியாமல், சிக்கனம் பார்க்கிறேன் என்று ஆரோக்கியக் கேட்டை விளைவித்து, அதன்பின் கணக்கில்லாமல் மருத்துவத்துக்கு செலவழிக்கிறார்கள்.

தெருவோரக்கடைகளில் வாங்கித்தின்னுமுன் யோசிக்கவேண்டிய விஷயம் ஆரோக்கியம். அவர்கள் இல்லாதவர்கள். அவர்களால் இப்படி நினைக்க முடியாது. ஆனால் பணம் இருப்பவர்கள் தாராளமாய் நல்ல தரமான ஆரோக்கியமான உணவை எளியவர்களும் உண்ணும் வண்ணம் இப்படித் தரலாமே. ஆக்கபூர்வ சிந்தனையை மறுபடியும் பாராட்டுகிறேன் அண்ணா.

சிவா.ஜி
13-03-2012, 09:50 PM
உண்மைத்தான் தங்கையே....வீட்டிலும் பலர் இப்படித்தான் அறியாமையிலும், சிக்கனத்துக்காகவும் செய்கிறார்கள். அதை தவிர்ப்பதே நல்லது.

அதேபோல பணத்தோடு பணத்தைச் சேர்க்க மிகப்பெரிய உணவகங்களும் இதைத்தான் செய்கின்றன.....அதிக லாப நோக்கில்லாமல்....இதனை சேவையாய் செய்யக்கூடிய பெரும்பணக்காரர்கள் இருந்தால் அவர்களுக்கு என் முதல் வணக்கம்.

நன்றி தங்கையே.

Hega
13-03-2012, 10:07 PM
ஆஹா

ஒரு நிமிடக் கதை என்றாலும் ஆயிரம் அர்த்தங்களும் படிப்பினையும் கொண்ட கதை. நாங்கள் எங்கள் ஹேகாஸ் கேட்டரிங்கினூடாக செய்யும் உணவுகள் சுவையாக் இருப்பதற்கு காரணமே இந்த பழைய எண்ணெய் பாவிக்காதது தான்.

ஒரு தடவை சமையலுக்கு என பாவித்த எண்ணெய் எக்காரணம் கொண்டும் மீண்டும் பாவிப்பதில்லை அங்கேயே வீசி விடுவோம். கொஞ்சம் நஷ்டம் தான் எனிலும் சிற்றுண்டி, உணவுகளின் சுவை நிலைத்து தொடர்வதால் ஆர்டர்கள் தொடர்கிறது.

கதையின் சொல்லபட்ட விடயமான அதிக லாபமில்லாமல் முதலுக்கும் நஷ்டமில்லாமல் விற்பனை என்பதும் நாம் பின்பற்றுவதே..

ஓசியாகொடுத்தா அதுக்கு மதிப்பில்லடா என நச்சுன்னு தலையில் கொட்டி சும்மா கிடைக்கும் எந்த பொருளுக்கும் மதிப்பில்லைன்னு உணர்த்தி விட்டீர்கள்.பாராட்டுகள் சிவா அண்ணா..

கதைக்குள் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை கொடுத்தமைக்காய் நன்றி அண்ணா.

jayanth
14-03-2012, 02:43 AM
நல்ல...எண்ணை...ஒரு நல்ல எண்ணக் கதை!!!

இராஜேஸ்வரன்
14-03-2012, 08:59 AM
அதனாலத்தான்.....லாபக் கணக்குப் பாக்காம...முதலுக்கு வியாபாரம் பண்றேன்....இதை ஏன் அண்ணதானமா செய்யக்கூடாதுன்னு கேப்ப.....ஓசியாக் கொடுத்தா....அதுக்கு மதிப்பில்லடா....அதுக்குதான் ஒரு விலை....எல்லாருக்கும் கட்டுப்படியாகிற விலை.....இந்த ஓட்டலுக்குப் போனா....ஆரோக்கியமான சாப்பாடு.....அடக்கவிலையில கிடைக்கும்ன்னு மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கு அதக் கெடுத்து நான் இன்னும் பணக்காரனா ஆக விரும்பல”

ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வு கதையில் ஒரு அற்புதமான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

aren
14-03-2012, 09:36 AM
நல்ல படிப்பினை சிவாஜி!!! ஆனால் இது உண்மையில் நடக்கிறதா? கொஞ்சம் சந்தேகம்தான்.

இன்னும் நிறைய கொடுங்கள்.

M.Jagadeesan
14-03-2012, 10:31 AM
குழம்பை சுண்ட வைத்து பல நாட்களுக்குப் பயன்படுத்து கின்ற தாய்மார்கள், இதற்கு ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

Hega
14-03-2012, 12:49 PM
நல்ல படிப்பினை சிவாஜி!!! ஆனால் இது உண்மையில் நடக்கிறதா? கொஞ்சம் சந்தேகம்தான்.

இன்னும் நிறைய கொடுங்கள்.



நாங்கள் நடத்துகிறோம். எங்கள் பிசினஸ் மந்திரமே குறைந்த லாபம் நிறைந்த ஆர்டர் என்பதுதான்.

ஐந்து பேரிடம் இரண்டு ரூபாய் லாபம் என பத்து ரூபாய் சேமிப்பை நல்ல சுவையான் தரமான உடனடி பொருட்களை பாவித்து பத்துபேரிடம் ஒரு ரூபாய் லாபம் பார்க்கிறோம்.

இணையதள, தொலைக்காட்சி விளம்பரங்கள் இன்றியே நிலைத்து தொடர்கிறோம் ஆரோன் அவர்களே..

கலையரசி
14-03-2012, 12:55 PM
கீதம் சொல்வது போல் வீட்டிலேயே பலர் இதைச் செய்வதில்லை. காய்ச்சிய எண்ணெயைத் திரும்பத் திரும்பக் காய்ச்சி பயன்படுத்துவது உடல் நலத்துக்குப் பெரும் கேடு விளைவிக்கும்.
ஓசியில் கிடைக்கும் பொருளுக்கு மதிப்பில்லை, வயித்துக்குப் போடுற சாப்பாட்டுல ஏமாத்துனா அவன் மனுஷனே இல்லை, மூளை ஆயிரம் சொல்லும் ஆனா இதயம் ஒன்னு தான் சொல்லும் போன்ற நல்ல பல கருத்துக்களைச் சொல்லி ஆரோக்கியம் பற்றிய நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குட்டிக் கதை.பாராட்டுக்கள் சிவாஜி சார்!

aren
14-03-2012, 01:33 PM
நாங்கள் நடத்துகிறோம். எங்கள் பிசினஸ் மந்திரமே குறைந்த லாபம் நிறைந்த ஆர்டர் என்பதுதான்.

ஐந்து பேரிடம் இரண்டு ரூபாய் லாபம் என பத்து ரூபாய் சேமிப்பை நல்ல சுவையான் தரமான உடனடி பொருட்களை பாவித்து பத்துபேரிடம் ஒரு ரூபாய் லாபம் பார்க்கிறோம்.

இணையதள, தொலைக்காட்சி விளம்பரங்கள் இன்றியே நிலைத்து தொடர்கிறோம் ஆரோன் அவர்களே..

பாராட்டுக்கள் ஹேகா!!! இன்னும் நிறைய செய்யுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

நீங்கள் செய்வதைப் பார்த்தால் நிகழ்காலத்திலும் இது சாத்தியமே. அதனால் என்னுடைய எழுத்தை நான் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.

செல்வா
14-03-2012, 04:41 PM
சக்கரவர்த்தித் திருமகள் திரைப்படம் என நினைக்கிறேன் அதில் ஒரு பாடல் கலைவாணரும் , சீர்காழியும் பாடியிருப்பார்கள். திரையில் கலைவாணரும் , எம்.ஜி. இராமச்சந்திரனும் நடித்திருப்பார்கள். கேள்வி பதில் வடிவிலான போட்டிப் பாடல். இடையிலே இப்படி வரும்.

அன்ன சத்திரம் இருப்பது எதனாலே

பல திண்ணை தூங்கிப் பசங்கள் இருப்பதாலே


பரதேசியாய் திரிவதெதனாலே
அவன் பத்து வீட்டு சோத்து ருசி பாத்ததாலே...

இலவசங்கள் சோம்பேறித்தனைத்தை வளர்க்கும் என்பது ஆணித்தரமான வாதம். இதை அருமையாகக் குட்டியிருக்கிறார்.

அதோடு இப்போது பல நிறுவனங்களும் நாங்கள் ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மறுமுறை உபயோகிப்பதில்லை என்று வெளியே சொல்லிவிட்டு அந்த எண்ணெயை பிற சிறு கடைகளுக்குக் கொடுத்து லாபம் பார்த்து விடுகின்றன. இதையும் கண்டறிந்து குட்டியிருப்பது. சிவா அண்ணாவின் சமூகத்தின் மீதான கூர்நோக்குப் பார்வையைக் காட்டுகிறது.

காலத்திற்கேற்ற கதை...!
வாழ்த்துக்கள் அண்ணா... தொடர்ந்து படையுங்கள்.

செல்வா
14-03-2012, 04:44 PM
நாங்கள் நடத்துகிறோம். எங்கள் பிசினஸ் மந்திரமே குறைந்த லாபம் நிறைந்த ஆர்டர் என்பதுதான்.

ஐந்து பேரிடம் இரண்டு ரூபாய் லாபம் என பத்து ரூபாய் சேமிப்பை நல்ல சுவையான் தரமான உடனடி பொருட்களை பாவித்து பத்துபேரிடம் ஒரு ரூபாய் லாபம் பார்க்கிறோம்.

இணையதள, தொலைக்காட்சி விளம்பரங்கள் இன்றியே நிலைத்து தொடர்கிறோம்.

வியாபாரம் மற்றும் தொழில் என்றாலே மனசாட்சியை கழற்றி வைத்துவிடுவது என்று மாறிவிட்ட இந்த நாளிலும் மனசாட்சியுடன் தொழில் நடத்துபவர்கள் உண்மையிலேயே போற்றப் படவேண்டியவர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.

தொடர்ந்து இதே பாதையில் வெற்றி நடைபோட இறைவனை வேண்டுகிறேன்.

ஆதவா
14-03-2012, 04:45 PM
அண்ணே.. நீங்க அநியாயத்திற்கு நல்லவரா இருக்கீங்க!!!

சிவா.ஜி
14-03-2012, 08:50 PM
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் இதயப்பூர்வ நன்றி......

இதயம் ஒன்றுதான் சொல்லும்.....!!! நன்றி

ஹேகாவின் தொழில் நேர்மை மிகப்பெரிது என்றால்.....தன் சொல்லைப் பின் வாங்கிய அன்பின் ஆரெனின் சொல்....மிக...மிகப்பெரியது.

செல்வா....உங்கள் அன்புக்கு நன்றி.

ஜெயந்த், ராஜேஸ்வரன், கலையரசி மேடம், ஜெகதீசன் அவர்கள், ஆரென், ஆதவா.....அனைத்து அன்புள்ளங்களுக்கும்....மனமார்ந்த நன்றிகள்.

அன்புரசிகன்
15-03-2012, 01:51 AM
தேனீர்க்கோப்பையையே கழுவின நீரில் கழுவுறாங்க... இதுல எண்ணெய விட்டுவைப்பாங்களா....
ஆனால் இங்க எனக்குத்தெரிஞ்ச கடையில் மட்டர் ரோல் பொரித்த எண்ணெயில் சிக்கன் ரோல் பொரிக்க மாட்டார். கேட்டால் வாசம் கெட்டுவிடும் என்பார்....
பல படிப்பினைகள் கூறும் கதை...
(உங்களது கதாபாத்திரங்கள் போல் சிலரை சந்தித்திருக்கிறேன். அடுத்தசமயம் நிச்சயம் உங்கள் பெயரை சொல்லி அவர்களுக்கு ஒரு கும்பிடு போடுறேன். :D ...)

redblack
15-03-2012, 05:45 AM
எண்ணையை பத்தி மட்டும்தன சொல்லுறீங்க இன்னும் சில கடையில மிஞ்சுன பரோட்டா சப்பாத்தி சாதம் சாம்பார் சட்டினி எல்லம் போடராங்களே அவங்க லாபம் சம்பாதிக்குறாங்களா இல்லை பாவத்த சம்பாதிக்கிறாஙளா

பூமகள்
15-03-2012, 07:07 AM
நல்ல உணவு வழங்கும் உணவக முதலாளி மனதை வெல்லுகிறார்.. நல்ல படிப்பினைக் கதை அண்ணா...

வீட்டில் நாங்க இருமுறைக்கு மேல் எண்ணையை பயன்படுத்துவதில்லை.. அது கூட முடிந்த மட்டும் தவிர்க்கவே செய்கிறோம்.. அளவாக பயன்படுத்தி கொட்டி விடுவது வழக்கம். :)

நேசம்
15-03-2012, 08:37 AM
ஒரு நிமிட கதை தான் ஆனால் பல படிப்பினை தருகிறது.

aren
15-03-2012, 08:53 AM
வீட்டில் நாங்க இருமுறைக்கு மேல் எண்ணையை பயன்படுத்துவதில்லை.. அது கூட முடிந்த மட்டும் தவிர்க்கவே செய்கிறோம்.. அளவாக பயன்படுத்தி கொட்டி விடுவது வழக்கம். :)

எண்ணையைக் கொட்டிவிடுவீர்களா இல்லை சாப்பாட்டையேவா? உங்கள் சமையல் எப்படி?

sarcharan
15-03-2012, 09:07 AM
எண்ணெயை இவுங்க கொட்டீடுவாங்க. இவர்கள் செய்த சாப்பாட்டை ______________ .

ஹீ.. ஹீ... கோடிட்ட இடங்களை ஆரேன் அண்ணா நிரப்புவார். :p;)

பி. கு: பதிப்புக்கும் அவதார் படத்துக்கும் சம்பந்தம் இல்லை. :D

Dr.சுந்தரராஜ் தயாளன்
15-03-2012, 09:23 AM
விரைவில் படித்தேன்...வெகு நேரம் சிந்திக்க வைத்துவிட்டது ...நன்றி:)

சிவா.ஜி
15-03-2012, 02:25 PM
ரொம்ப நன்றி ரெட்ப்ளாக்......நீங்க சொன்ன ஓட்டல்காரங்க......எந்தமுறையில திருந்துவாங்க.....அடிபட்டா....இல்ல.....அனுபவித்தா.....!!!

சிவா.ஜி
15-03-2012, 02:26 PM
மிக்க நன்றி அன்பு. நீங்கள் சொல்வதைப்போல சிலர் இருக்குக்கத்தான் செய்கிறார்கள்.

சிவா.ஜி
15-03-2012, 02:28 PM
ரொம்ப நன்றி பூம்மா. ஆரோக்கியம் பேணும் உங்க நடவடிக்கை....ஆனந்தப்படுத்துகிறது. நல்ல பழக்கத்தை.....தொடர்ந்து கடைப்பிடிக்கனும். வாழ்த்துக்கள் தங்கையே.

சிவா.ஜி
15-03-2012, 02:53 PM
ரொம்ப நன்றி நேசம்.

சிவா.ஜி
15-03-2012, 02:53 PM
நன்றி சர்சரண்.

சிவா.ஜி
15-03-2012, 02:54 PM
மிக்க நன்றி டாக்டர் ஐயா.

Hega
16-03-2012, 09:41 AM
பாராட்டுக்கள் ஹேகா!!! இன்னும் நிறைய செய்யுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

நீங்கள் செய்வதைப் பார்த்தால் நிகழ்காலத்திலும் இது சாத்தியமே. அதனால் என்னுடைய எழுத்தை நான் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.


புரிதலுக்காக நன்றி ஆரேன் சார்.

பெரும்பாலும் உணவு பிசினஸில் இருப்பவர்கள் நல்ல நோக்கத்தோடு ஆரம்பித்தாலும் காலப்போக்கில் அதை நடைமுறைபடுத்தாமல் பணம்சம்பாதிப்பதிலேயே குறியாயிருப்பதைகண்டிருக்கிறேன்.

பழைய உணவு, கழுவிய நீரிலேயே மீண்டும் கழுவுதல், அழுகிய காய்கறிகளை மிக மலிவாக வாங்கி சமைத்தல்,காய்கறிக்கடைகாரர் மீந்துபோன அழுகிய காய்கறிகளை வீசாமல் இருப்பதற்காகவே உணவு விடுதி ஆரம்பிப்பதும் மலிவு விலையில் விற்பதும் உண்டு. காலாவதியான உணவுகளை பயன் படுத்தல் என பல வகைகளில் பணத்தினை மட்டுமே சம்பாதிக்க அலைவர். .

அவர்களை இனம் கண்டு நாம் தான் ஜாக்கிரதையாக் இருக்க வேண்டும். கொஞ்சம் விலை அதிகமாயிருந்தாலும் நல்ல தரமான, சுத்தமான உணவு விடுதிகளை தேடி பயன் படுத்த வேண்டும்.

Hega
16-03-2012, 09:53 AM
வியாபாரம் மற்றும் தொழில் என்றாலே மனசாட்சியை கழற்றி வைத்துவிடுவது என்று மாறிவிட்ட இந்த நாளிலும் மனசாட்சியுடன் தொழில் நடத்துபவர்கள் உண்மையிலேயே போற்றப் படவேண்டியவர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.

தொடர்ந்து இதே பாதையில் வெற்றி நடைபோட இறைவனை வேண்டுகிறேன்.



வாழ்த்துக்கு நன்றி செல்வா, அக்கா என்று அழைத்ததால் பெயரிட்டு அழைத்தேன் தவறெனில் மன்னிக்கவும்.


பொதுவாக உணவின் சுவை அதை சமைக்க பயன் படுத்தும் எண்ணெயிலும் அதிகமாகும்.

எண்ணெய்களிலும் அதிக சூடு படுத்தாமல் பாவிக்க வேண்டியது, ஒரே தடவையில் பாவிக்க வேண்டியது,, ஓரிருதடவை பாவிக்க கூடியது என அதன் அடத்தி தன்மைக்கேற்ப வித்தியாசம் உண்டு. அதை புரிந்து அதன் தயாரிப்புக்கேற்ப பயன் படுத்த தெரிய வேண்டும்.

முக்கியமாக பாவித்த எண்ணெய்களை அழுக்கு நீர் செல்லும் கால்வாய்க்குள் கொட்ட கூடாது. நம் வீட்டு குழாயும் பாதிக்கபடும்.

பெரிய, சிறிய உணவு விடுதிகள், தனியார் வீடுகளில் பாவித்த எணணெயையும் சேகரித்து இங்கே ரிசைக்கிளின் முறைமூலம் வாகன கராஜ்களில் பயன்படுத்துகிறார்கள்.

சிவா.ஜி
16-03-2012, 01:46 PM
ஆஹா....தங்கையின் தொழில்தர்மம்....மனதை நெகிழ்த்துகிறது.....இப்படி சிலரேனும் இருந்தால்....நல்ல ஆரோக்கியமான உணவு கிட்டுமே....நன்றிம்மா ஹேகா.

arun
16-03-2012, 09:25 PM
கதையில் வருபவர் ஆயிரத்தில் ஒருவரா அல்லது பத்தாயிரத்தில் ஒருவரா !

உண்மையாகவே இப்படி யாரேனும் நினைத்தால் எந்த வியாதியும் வர வாய்ப்புகள் குறைவு நல்ல விழிப்புணர்ச்சி கதை

அமரன்
16-03-2012, 10:31 PM
இப்படி இருக்க வேண்டும் என்று இருந்து காட்டுவது ஒருவகை..

இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி வைப்பது இன்னொருவகை.

கதாபாத்திரம் மூலம் சொல்லி வைத்த சிவாண்ணாவையும், வழ்ந்து கொண்டிருக்கும் ஹேஹா அவர்களையும் வெளிப்படுத்திய கதை.. மிகவும் தேவை.

சிவா.ஜி
20-03-2012, 06:48 PM
ஆமாம் அருண்....பத்தாயிரத்தில் ஒருவர் இருந்தாலும் போதுமே.....இதோ இங்கேயே ஹேகா இருக்கிறாரே....நல்லவை என்றுமே வாழ்ந்துகொண்டுதானிருக்கும். நன்றி அருண்.

சிவா.ஜி
20-03-2012, 06:49 PM
ஆமாம்....பாஸ்...இப்படி வாழுங்கள் என சொல்லும் கதையை...இதோ வாழ்கிறேன் எனச் சொல்லும் ஹேகா மிஞ்சிவிடுகிறார்.

நன்றி பாஸ்.

Hega
20-03-2012, 08:34 PM
அட, அடடா....

ஹைய்ய்ய்ய்யா சிவா அண்ணாவின் கதைக்குள் என் கதை ஓடுதா.. ரெம்ப சந்தோஷமாக இருக்கிறது.

நன்றி நன்றிகள் அனைவருக்கும்.