PDA

View Full Version : ஐபோன் 4s நிறைகள், குறைகள் என்ன? தெரிவிக்கவும்இராசகுமாரன்
13-03-2012, 08:29 AM
நண்பர்களே,

நான் 12 வருடங்களாக உண்மையான "நோக்கியா" விசுவாசியாக அவர்கள் கைபேசியையே உபயோகித்து வருகிறேன். "ஒன்றுக்கு மேல் எப்போதும் வேண்டாம்" (கைபேசியைத் தான் சொன்னேன்) என்ற பாலிசியால் வேறு கைபேசிகளை நாடவில்லை.

ஆனால், சமீப மாறுதல்களால் என் "நோக்கியா"விற்கு "டாட்டா" காட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என நினைக்கிறேன். இப்போது கைபேசி கடைகளிலும் எங்கு பார்த்தாலும் "சாம்சங்" மயமாகி வருகிறது. இது தவிர "ஐஃபோன்" மற்றும் "ப்ளாக் பெர்ரி"-யின் ஆதிக்கங்களும் கூடிவருகிறது.

சாம்சங்க், ப்ளாக் பர்ரி, ஐஃபோன் என்று மூன்றுடனும் தொட்டுப் பிடித்து விளையாடியதில், ஐஃபோன் வென்றுள்ளது.

உழைத்த பணத்தை கொடுத்து வாங்கு முன், ஊரில் நாலு பேரிடம் கேட்பது நல்லதில்லையா.. அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன் சாமியோவ்... கொஞ்சம் உங்க கருத்துக்களை கொட்டி எனக்கு ஒரு நல்லதொரு வழி காட்டுங்க சாமியோவ்....

வணக்கங்க... வர்றேங்க...

அன்புரசிகன்
13-03-2012, 11:06 AM
நானறிந்தவற்றை சொல்கிறேன். உதவினால் மகிழ்ச்சி....

ஆரம்பத்தில் பல குறைகள் இருந்தன. ஆனால் அண்மைய இயங்குதள புதுப்பித்தலுடன் அவை நிவர்த்தி செய்யப்பட்டன...

மின்கல பிரச்சனை, photostream 3G data off, மின்னஞ்சல் push notification போன்றன பிரச்சனையாக இருந்தது. அவை தற்சமயம் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டன....


தங்களது தேவைகளைப்பொறுத்து இந்த பிரச்சனைகள் வேறுபடும்.

எனது நண்பர் ஒருவர் கூறியது... வாகனங்களில் ஓட்டிக்கொண்டு பேசுவதில் இந்த அப்பிள் ஐபோன்கள் பிரச்சனை தரும் என்பது. ஆனால் அப்படி பேசுவது தவறு தானே...

voice mail button kepad ற்கு அருகில் இருப்பதால் தவறுதாலாக அடிக்கடி அதனை அழுத்திவிடுவீர்கள்...

http://images.brighthub.com/12/0/120e121620adda052c96b781c12247efafd0aaf9_large.jpg
எந்த தகவல்களையும் itune களினால் மட்டுமே நீங்கள் பகிரமுடியும் என்பது ஒரு பிரச்சனை.

இரண்டாவது ஒன்றிக்கு மேற்பட்ட கணினிகளை பாவிக்கும் போது நீங்கள் முதலில் பதிவேற்றிய தகவல்கள் இரண்டாவது கணினியுடன் சேர்க்கும் போது நீக்கிவிடும்.

appstore இலிருந்து app களை பதிவிறக்கும் போது 20MB ற்கும் அதிகமான கோப்புக்களை wifi தேவை...

samsung galaxy note பற்றி பார்த்தீர்களா??? அண்மையில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாமே....

ஓவியன்
13-03-2012, 11:45 AM
அன்பு என் நண்பர் ஒருவர் அண்மையில் ஐ-4 S வாங்கினார், அவருக்கு நல்ல திருப்தி கிடைத்துள்ளது, ஒரு விடயத்தைத் தவிர - அதாவது மின்கல பிரச்சினை...

ஒவ்வொரு நாளும் `சார்ஜ்` செய்ய வேண்டியுள்ளதே என வருத்தப்பட்டார் அவர்...

ஸாம்சூங்கின் கலக்ஸி சீரிசில் இரு அலைபேசிகளைப் பாவித்துள்ள எனக்கும் இதே பிரச்சினை இருந்தது / இருக்கின்றது. :icon_ush:


samsung galaxy note பற்றி பார்த்தீர்களா??? அண்மையில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாமே....

galaxy note ஐ போனை விட அளவில் பெரிதாக இருக்கிறதென நினைக்கின்றேன்...

மேலதிக ஒப்பீட்டிற்கு இந்த (http://www.compare-cellphones.org/Apple-iPhone-4S-vs-Samsung-GALAXY-Note) திரியை சுட்டவும்.

அன்புரசிகன்
13-03-2012, 11:47 AM
iOS 5.1 update ன் பின்னர் மின்கலபிரச்சனை தீர்ந்தருக்கும் என்று நினைக்கிறேன்.

இராசகுமாரன்
13-03-2012, 01:54 PM
அன்புரசிகன், ஓவியன்,

நீங்கள் கொடுத்த தகவல்களுக்கு மிக்க நன்றி. அவை நல்ல உபயோகமான தகவல்கள்.


samsung galaxy note பற்றி பார்த்தீர்களா??? அண்மையில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாமே....

ஆம் கடைகளில் சென்று இதையும் சோதித்துப் பார்த்தேன். எங்கள் வட்டார மொழியில் கூறுவதாய் இருந்தால், இது ஒரு "இரண்டாங்கெட்டான்".... அளவில் தான்.

அதாவது இதன் "சைஸ்", ஃபோன்களுக்கான சைஸை விட கொஞ்சம் மேலே, டேப்லாயிடு சைஸுக்கு கொஞ்சம் கீழே. நமது பாக்கெட்டுக்குள் எளிதில் போகாது.

சாம்சங் ஃபோன் வாங்குவதாய் இருந்தால் என்னுடைய சாய்ஸ் "Samsung Galaxy S II" தான். ஆனால், அதுவே ஐபோனை ஒத்த விலையில் இருக்கும் போது, ஏன் ஐபோனையே வாங்கக் கூடாது என்று தான் முடிவெடுத்தேன்.

அன்புரசிகன்
13-03-2012, 11:07 PM
இன்னொன்று...

இது குறையா நிறையா தெரியவில்லை... உங்களிடம் ஏற்கனவே apple id (இது இருந்தால் மட்டுமே நீங்கள் app களை பதிவிறக்க முடியும்) இருந்தால் பிரச்சனை இல்லை. இல்லாவிட்டால் நீங்கள் இதனை பெறுவதற்கு ஏதாவது credit card தேவை. (ஆனால் apple id பெறுவது முற்றிலும் இலவசம்.) ஆனால் இதை ஒரு ஒருமுறையால் நிவர்த்திசெய்யலாம். முதலில் நேரடியாக apple id பெறாது ஏதாவது ஒரு + அடையாளம் கொண்ட app ஐ தெரிவுசெய்ய வேண்டும். (இந்த + அடையாளம் ipad and iphone compatible ஐ குறிக்கிறது) பின்னர் apple id தயாரிக்க சொல்லும் போது credit card என்ற இடத்தில் none என்ற தெரிவு இருக்கும். சாதாரணமான பதிவுமுறையில் இருக்காது... நீங்கள் itune மென்பொருள் மூலம் ஏலவே இதை தயாரித்தீர்கள் என்றால் பிரச்சனை இல்லை.... (இதுபற்றி ஏற்கனவே தெரிந்திருந்தால் மன்னிக்க....)

அமரன்
13-03-2012, 11:17 PM
இணயவேகம், இணைப்பு வேகம் என சில முக்கிய விடயங்களில் மேம்பட்டு நிற்பது என்னவோ சாம்சங்தான். ஆனாலும் அளவிலும் அழகிலும் அடக்கத்திலும் அதிகம் கவர்ந்து என்னுடன் இருப்பது ஐபோனே..

அன்புரசிகன்
14-03-2012, 05:00 AM
இணயவேகம், இணைப்பு வேகம் என சில முக்கிய விடயங்களில் மேம்பட்டு நிற்பது என்னவோ சாம்சங்தான். ஆனாலும் அளவிலும் அழகிலும் அடக்கத்திலும் அதிகம் கவர்ந்து என்னுடன் இருப்பது ஐபோனே..
அமரா... அது உங்களது 3G இன் வேகம் மற்றும் wifi இன் வேகத்தில் தான் தங்கியுள்ளது.

அலைபேசியின் வேகங்கள் பொறுத்தமட்டில் சாம்சங் இலும் அப்பிளே அதிகம் என்பேன்.... அது தான் அப்பிளின் தனித்தன்மை என்றே சொல்கிறார்கள்.

வீட்டிலுள்ள Samsung G2 அடிக்கடி தானாக மென்பொருட்களை நிறுத்திவிடும். அப்பிளிடம் அவ்வாறு நேர்வது மிக குறைவு என்பேன்...

iOS5.01 இல் பிரச்சனை கொடுத்தது என்னமோ உண்மை தான். ஆனால் 5.1 இன் பின்னர் வேகமாக இயங்குகிறது 4s... (பழைய 4 உம் கூட....)

aren
14-03-2012, 07:54 AM
எனக்குத் தெரிந்து ஒரே பிரச்சனை தினமும் சார்ஜ் செய்யவேண்டியிருக்கும். காரணம் ஸ்க்ரீன் அனைத்து பாட்டரியையும் காலிசெய்துவிடுகிறது.

மற்றபடி வண்டி ஓட்டும்போது எடுத்து பேச கொஞ்சம் வசதி குறைவாக இருக்கும்.

எனக்குத் தெரிந்து இப்போது இருக்கும் கைபேசிகளில் இதுதான் சிறந்தது.

ஓவியன்
15-03-2012, 07:00 PM
அண்மையில் வெளி வந்த Sony Xperia S அழகாகவும் அசத்தலாகவும் இருக்கிறது, ஒரு முறை பரீசீலனை செய்து பார்க்கலாமே...!! :)

இராசகுமாரன்
07-04-2012, 06:14 AM
எனக்குத் தெரிந்து இப்போது இருக்கும் கைபேசிகளில் இதுதான் சிறந்தது.

நண்பர் ஆரன் கூறிவிட்டார் அல்லவா, அதனால் வாங்கிவிட்டேன். கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

பேட்டரி சீக்கிரம் தீர்ந்து விடுவதற்கு 3G நெட்வொர்க் தான் காரணம் என்கிறார்கள், அதனால் தேவையில்லாத போது 3G-யை நிறுத்தி வைத்தால் பேட்டரியின் சக்தியை நிறைய சேமிக்கலாம் என்கிறார்கள்.

இப்போ வாங்கியாச்சில்ல, இனி சோதிச்சிப் பார்த்திடுவோம்.

அமரன்
07-04-2012, 06:51 AM
உண்மை.. மின்கலச் சக்தி விரயத்துக்கு மூல காரணம் 3G தான். இப்போ 4G சோதனையில் உள்ளது இங்கே. முன்பை விட மின்கலம் விரைவாக சோர்வடைகிறது.*

தூயவன்
14-04-2012, 07:22 AM
நான் எனது ஐபோனின் IOS சை 5.0 இல் இருந்து 5.0.1 கு upadte செய்ய இருக்கிறேன். எனது ஐபோனின் baseband 4.11.08 . இந்த baseband மாறாமல் upadte செய்யவது எப்படி? யாரவது விளக்க முடியுமா ?

ரங்கராஜன்
14-04-2012, 04:42 PM
நானும் ஐ போன் 4எஸ் தான் உபயோகிக்கிறேன்...... கடந்த இரண்டு மாதங்களாக..... ஒரு எழவும் புரியவில்லை. புரிந்த வரை இது வேண்டாம்........ காரணம் ப்ளூடீத் கிடையாது (அதாவது மற்ற போன்களுக்கு), ரிங் ட்யூன் 12 சென்ட்களுக்கு மேல் வைக்க முடியாது, எதுவாக இருந்தாலும் ஆப்பிள் கடைக்காரனிடம் தான் கேட்க வேண்டும், ஆரேஞ் கடைக்காரன் கிட்ட (வேறு தளத்திற்கு) போக முடியாது. சென்னையில் நான் உபயோகிக்கும் ஏர்செல் நிறுவனத்திற்கே என்னுடைய இணையதள வசதியை போனில் எப்படி கொண்டு வருவது என்று தெரியவில்லை....... தெரியவில்லையா இல்லை சொல்ல மறுக்கிறார்களா என்று பிடிபடவில்லை. காரணம் நான் ஐபோன் 4 எஸ் ஐ அவர்களிடம் வாங்க வில்லை.....ஹா ஹா தொப்பி தொப்பி.........

Mano.G.
14-04-2012, 05:23 PM
நானும் ஐபோன் 4ஸ் தான் உபயோகிக்கிரேன், பார்ப்போம் அதன் உபயோகம்எப்படி என்று