PDA

View Full Version : "புகழ்" "புகழ்" "புகழ்"



"பொத்தனூர்"பிரபு
09-03-2012, 01:02 PM
புகழ்
_____________________________

மயக்கும் விழிகொண்ட
மாது தராத போதை..

மானிட்டர் முதலான
மது(க்)கள் தராத போதை..

மழையாய் அல்ல வெறும்
சாரலாய் வந்து விழுந்த
வார்த்தைகளில் கிட்டிய போதை..

எல்லோருக்கும் உள்ள போதை..
எனக்கும் இருக்கும் போதை..
"புகழ்" "புகழ்" "புகழ்"

_____________________________

பிரியமுடன் பிரபு ...

http://priyamudan-prabu.blogspot.com/2012/02/blog-post.html

தாமரை
14-03-2012, 01:30 AM
இவ்வளவு நீங்க சொன்ன பின்னாடி உங்களை எப்படீங்க புகழ்வது..?? அதான் யாருமே பின்னூட்டம் போடலை போல.. :D:D:D

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, அதாங்க தகவல் தொழில் நுட்பம் இருக்கே அது எப்போ ஆரம்பிச்சது தெரியுமா?

முதல் உயிரி உண்டான போது.

அதாங்க உயிரியின் தகவல்கள் குரோமோசொம்களில் பதியப்பட்டு அது பல பிரதிகள் எடுக்கப்பட்டதல்லவா? அப்போது.

நம்மையே எடுத்துக்குங்க.. தாய் தந்தையரின் குரோமோசோம்களில் இருந்து வந்த தகவல்களால் தானே உருவானோம். அதையே கொண்டு பல செல்களால் பிரதியெடுத்து வளர்ந்தோம். சந்ததிகளை உண்டாக்கினோம். இறந்ததும் வெறும் தகவல்களாகவே ஆகி விடுகிறோம். தேவையுள்ள தகவல் என்றால் வரலாற்றில் பதிவாகிறோம். தேவையற்ற தகவல் என்றால் குப்பைக்குப் போய்விடுகிறோம்.

இறைவனையே புகழ்ந்தால் காரியம் சாதிக்கலாம் என்ற அளவிற்கு புக்ழின் போதை ஏறிக்கிடக்கிறது. என்னதான் செய்ய?

"பொத்தனூர்"பிரபு
14-03-2012, 06:58 AM
இறைவனையே புகழ்ந்தால் காரியம் சாதிக்கலாம் என்ற அளவிற்கு புக்ழின் போதை ஏறிக்கிடக்கிறது. என்னதான் செய்ய?///


Yes it's true

ஆதவா
14-03-2012, 03:22 PM
எல்லாமே அளவுக்கு மீறினா அது போதைங்க.. \
மத்தபடி “புகழ்” ஒரு நல்ல சொல், நல்ல செயலுக்குப் பின் வரும் புகழ் தேவையானது... ஒரு புகழ் நல்ல செயலுக்கும் வழி வகுக்கும்!!


தோன்றின் புகழொடு தோன்றுக
வள்ளுவர் அன்றே சொல்லிட்டாருங்க... ;)

சிவா.ஜி
14-03-2012, 09:14 PM
புகழ்....போதையாகக்கூடாதுங்க.....அப்புறம் ஒத்த பின்னூட்டம்கூட கிடைக்காது....ஹி...ஹி..

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-03-2012, 10:10 AM
நீங்கள் சொல்லவந்தது 'புகழ்ச்சி' அல்லவா? தற்புகழ்ச்சி!!

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை ( பாரதியார்)