PDA

View Full Version : நட்பின் மீள்வரவு....!!சிவா.ஜி
08-03-2012, 10:02 PM
நேற்று முகப்புத்தகத்தில்(ஃபேஸ்புக்) என் பள்ளித்தோழர்களைத்தேடினேன். ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் மேநிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள்.....1978ல் பத்தாம் வகுப்பை முடித்தவர்கள் எனத் தேடியதில் இருவர் கிடைத்தார்கள்.(அதற்கு முன்பே தேடாமல் கிடைத்த செல்வமாய் கலைவேந்தன் கிடைத்தது தனிக்கதை)

ஒருவர் பெயர் ஜெகதீசன். அவரது அலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்ததால், அவரை அழைத்தேன். ஹலோ என்று சொல்லிவிட்டு

“நான் சிவசுப்ரமணியன் பேசுகிறேன்....நீங்கள் பத்தாம் வகுப்பில் படித்த அதே ஆண்டில்தான் நானும் அதே பள்ளியில் படித்தேன்” என்றவுடன்...

“கிருஷ்ணகிரியிலிருந்து வந்து படித்தீர்களே அவரா என்றார்”

இவ்வளவிற்கும் அவர் என் வகுப்பல்ல...நான் பத்தாம் கிளாஸ் எஃப் அவர் ஏ....

ஆனந்த அதிர்ச்சி.

“எப்படி...எப்படி...34 வருடங்களுக்குப் பிறகும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்?”

என ஆச்சர்யத்துடன் கேட்டதும்,

“அன்று பள்ளியில் உங்கள் பெயரில் நீங்கள் மட்டுமே இருந்தீர்கள்....அதுவுமில்லாம......சிறந்த மாணவனாய் சான்றிதழ் பெற்றீர்கள்....அதனால் அந்தப் பெயரைக் கேட்டவுடன் உடனே நினைவுக்கு வந்தது”

என்றார்.

பழையக் கதைகளெல்லாம் பேசியதும், இந்தியா வந்ததும், என்னை அழையுங்கள் சந்திக்க விரும்புகிறேன் என சொல்லியதும்.......மனது....சந்தோஷக் குதியாட்டம் போட்டது. இத்தனை வருடங்கள் கழிந்தும் ஒரு நட்பு உயிரோடு இருக்கிறதென்றால்....நான் கொடுத்து வைத்தவன்....ஆண்டவன்...என் மீது கருணை வைத்திருக்கிறான் என மகிழ்ந்தேன்.

அடுத்துக் கிடைத்த இன்னொருவர் என் வகுப்புத்தோழன் நாராயணன்...எனது...நன்றியோடு திரும்பிப் பார்க்கிறேன் தொடரில் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த என் வகுப்புத் தோழன். என் குரலைக் கேட்டு, பிறகு என் பெயரைக் கேட்டதும், மிக மிக அந்நியோன்யத்துடன்....டே ரேங்க்ஹோல்டர்...எப்படி இருக்கே? எனக் கேட்டானே.....அந்த நொடி...நான் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகியது.

34 வருடங்களுக்குப் பிறகும்....முகம் பரிச்சையமில்லாதபோதிலும்...பெயரே அந்த பழம் நினைவுகளை மீட்டுக்கொண்டு வருமென்பதைக் கண்ட போது......பெருமிதப்பட்டேன். எங்கள் நட்பின் மேல் சற்றே கர்வமும் பட்டேன். தொடர்ந்த பேச்சில், அவன் என்னை முந்த நினைத்ததும் விட்டுக்கொடுக்காமல்...நான் முதலிடத்தைதக்க வைத்துக்கொண்டதும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டோம்.

இன்று எனக்கு கலையோடு சேர்த்து மூன்று பள்ளித் தோழர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதோடு....எங்கள் தலைமையாசிரியர் பி.எம்.மகாதேவன் சாரும் கிடைத்திருக்கிறார், நான் பாக்கியசாலி. இன்றையதினம் நான் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறேன். மஞ்சுபாஷினி அவர்களோடு உரையாடுகையில் இதனைப் பகிர்ந்துகொண்டேன். கலையின் தோழி....என் மன மகிழ்வைப் புரிந்துகொண்டு...அவரும் மகிழ்ந்தார்.

பள்ளித் தோழமை....யுகங்கள் கடந்தும்.....உயிர்ப்பாய் உவகை கொள்ள வைக்கும் திறனுள்ளவை என்பதை எனக்குணர்த்திட்ட இந்த நாளை என்றும் நான் மறக்க மாட்டேன்.

அன்புரசிகன்
08-03-2012, 11:14 PM
எந்தவித எதிர்பார்ப்புமின்றி தொடரும் உறவு என்றால் அது நட்பு தான். அவை மீள துளிர்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறேன். 6-7 வருடங்களிற்கு பின்னர் சந்தித்ததிலேயே அவ்வளவு என்றால் நீங்கள் 34 வருடங்கள் கழித்து புதுப்பித்துள்ளீர்கள் என்பதில் எவ்வளவு இருக்கும் என்று எடைபோடமுடிகிறது.

aren
09-03-2012, 12:57 AM
“சிறந்த மாணவனாய் சான்றிதழ் பெற்றீர்கள்.... .

டே ரேங்க்ஹோல்டர்...

.

இது பொய்தானே!!!!

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மாதிரியான சந்தர்பங்களில் மனது ஆடும் ஆட்டத்தை எழுத்தில் கொண்டுவருவது மிகவும் கடினம்.

சிவா.ஜி
09-03-2012, 07:17 AM
உண்மைதான் அன்பு. 34 வருடங்களுக்குப் பிறகு மீளக்கிடைத்த நட்பு கொடுக்கும் மகிழ்ச்சியின் வீச்சை சந்தோஷமாய் அனுபவிக்கிறேன்.

சிவா.ஜி
09-03-2012, 07:20 AM
மெய்யாலுமேங்க ஆரென்...அந்த சான்றிதழை இப்போதும் வைத்திருக்கிறேன். ஒரு காலத்தில் மிகவும் நல்லப் பையனாக இருந்தேன் என்பதற்கு அது ஒன்றுதான் சாட்சி...ஹி...ஹி...

அப்புறம் ரேங்க் ஹோல்டர்.....6ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்புவரை முதல் ரேங்க் தான். நெசமாங்க....!!!

நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி. அந்த மகிழ்ச்சியை முழுவதுமாய் எழுத்தில் கொண்டு வர இயலவில்லை. நன்றி ஆரென்.

aren
09-03-2012, 07:25 AM
நானும் என்னுடைய சில நண்பர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். இதுவரை எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அன்புரசிகன்
09-03-2012, 11:35 AM
நானும் என்னுடைய சில நண்பர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். இதுவரை எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அவங்க உங்களுக்கு பயந்து ஓடி ஒழிக்கிற கஷ்டம் அவுங்களுக்கு தான் வெளிச்சம். :D

மதி
09-03-2012, 12:09 PM
மிக்க சந்தோஷமான செய்தி...3 வருஷம் நண்பர்களுடன் கழிச்சு பேசும் போதே அவ்வளவு சந்தோஷமாய் இருக்கும். 34 வருஷம்னா சும்மாவா.. சந்தடி சாக்கில் உங்க வயச தெரியபடுத்திட்டீங்களே?

சிவா.ஜி
09-03-2012, 12:28 PM
ஹா...ஹா...நம்ம வயசுதான் இங்க எல்லோருக்கும் தெரிஞ்ச சங்கதியாச்சே மதி....

ஆனா உண்மையிலேயே...ரொம்ப சந்தோஷமா இருந்தது. என்னைவிட அந்தப்பக்கம் அதிகம். ஐ.எஸ்.டி கால்ன்னு கூட பாக்காம...இன்னைக்கு நாராயணன் என்னை அழைத்தான். அவனால் சந்தோஷத்தை தாங்க முடியவில்லை......

நட்பைவிட உன்னதம் வேறெதில் இருக்கிறது?

அமரன்
09-03-2012, 08:12 PM
மீளும் நட்புக் காலங்கள் வாழுங் காலங்களை மகிழ்ச்சியால் நிரப்புகின்றன. மட்டுமல்லது சமயங்களில் நம்மை மீட்டுத் தருவனவும் அவைதான்.. நாராயணன் அவர்களின் அன்பில் தெரிவதென்னவோ உங்கள் பழகும் குணம்தான் பாஸ்..

ஆதவா
10-03-2012, 05:15 AM
ஃபேஸ்புக்குக்கு நன்றி சொல்லுங்க... அதான் நிறைய பேரை இப்படி “பண்ணுது”

எனக்கு இதுவரைக்கும் இப்படி ஆனதில்ல... இருந்தாலும் நிறைய பேரைக் காணோம். பிடிக்கணும்....

சிவா.ஜி
10-03-2012, 07:58 AM
மீளும் நட்புக் காலங்கள் வாழுங் காலங்களை மகிழ்ச்சியால் நிரப்புகின்றன. மட்டுமல்லது சமயங்களில் நம்மை மீட்டுத் தருவனவும் அவைதான்.. ..

சரியாச் சொன்னீங்க பாஸ். இந்த இரண்டு மூன்று நாட்களாகவே நான் பழைய அரை ட்ரவுசர் காலத்துக்கு போய் வந்துகொண்டிருக்கிறேன்.

சிவா.ஜி
10-03-2012, 07:59 AM
ஆமா ஆதவா....சில சமயம் தொழில்நுட்ப முன்னேற்றம் இதைப்போல மனதுக்கு இதமான செண்ட்டிமெண்ட் வேலையையும் செய்துவிடுகிறது. முகநூலுக்கு நன்றி.

கலையரசி
11-03-2012, 10:59 AM
ஆகா! கேட்கவே ஆனந்தமாயிருக்கிறது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்து நட்பைத் தொடருவது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தருவது தான்.
மீண்டும் பள்ளி நாட்களுக்குப் போய் வர ஒரு வாய்ப்பு! வாழ்த்துக்கள் சிவாஜி சார்!

சிவா.ஜி
11-03-2012, 05:43 PM
ஆமாங்க மேடம். நிஜமாகவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி மேடம்.

Hega
11-03-2012, 06:04 PM
தேடலில் கிடைத்த நட்பினால் மலரும் நினைவுகளால் மூழ்கி மகிழும் சிவா அண்ணாவுக்கு வாழ்த்துகள்.

சந்தோஷமா இருக்கிறது. தேசம் விட்டு தேசம் நட்பு கொடிபடரட்டும்.

சிவா.ஜி
11-03-2012, 06:10 PM
ரொம்ப நன்றிம்மா தங்கையே.

aren
12-03-2012, 04:02 AM
ஃபேஸ்புக்குக்கு நன்றி சொல்லுங்க... அதான் நிறைய பேரை இப்படி “பண்ணுது”

எனக்கு இதுவரைக்கும் இப்படி ஆனதில்ல... இருந்தாலும் நிறைய பேரைக் காணோம். பிடிக்கணும்....

உங்க பேரைச் சொன்னால் ஓட மாட்டார்களா? அப்படின்னா நீங்கள் மிகவும் நல்லவர்.

நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் ஆனால் இதுவரை ஒருவரும் மாட்டவில்லை.

என்னோட விஷயத்தில் என்னவென்றால் என்னுடைய சொந்தக்காரர்களையே நான் இப்போழுதுதான் தேடிக்கொண்டிருக்கிறேன். பலர் என்னைப் பற்றி இப்பொழுதுதான் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். நான் யார் என்று தெரியும் எப்படிப்பட்டவன் என்று இப்பொழுதுதான் தெரிந்திருக்கிறது அவர்களுக்கு (இவ்வளவு நல்ல பையன் நான் என்று). என்னுடைய நிலமையை நினைத்துப்பாருங்கள்.

நேசம்
12-03-2012, 12:25 PM
முகநூலில் நன்மையும் இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்

சூரியன்
12-03-2012, 01:09 PM
மிகவும் மகிழ்ச்சியான செய்தி அண்ணா.:)

சிவா.ஜி
12-03-2012, 06:03 PM
ஆரென்.....உங்க நிலமைக்கென்ன....நீங்கள் எப்போதும் நீங்கள்தான்...உங்க சொந்தக்காரங்கதான் தெரிஞ்சுக்கனும்....தெரிஞ்சா தேடி வருவாங்க....அந்த வரவு தொல்லையா....இல்லையா என்பது அனுபவத்தில் தெரியும்...ஹி...ஹி...!!!

சிவா.ஜி
12-03-2012, 06:04 PM
மிக்க நன்றிப்பா தம்பி நேசம்.

சிவா.ஜி
12-03-2012, 06:05 PM
ரொம்ப நன்றி சூரியன் தம்பி.

செல்வா
13-03-2012, 02:04 AM
ஆரென்.....உங்க நிலமைக்கென்ன....நீங்கள் எப்போதும் நீங்கள்தான்...உங்க சொந்தக்காரங்கதான் தெரிஞ்சுக்கனும்....தெரிஞ்சா தேடி வருவாங்க....அந்த வரவு தொல்லையா....இல்லையா என்பது அனுபவத்தில் தெரியும்...ஹி...ஹி...!!!

ஹா...ஹா.... அண்ணாச்சிக்கு அதில ரொம்ப அனுபவமா? :lachen001::lachen001:

மீண்டும் பள்ளி நட்புகளுடன் உரையாடுவது... நம் பால்யத்திற்குத் திரும்பும் நிகழ்வே.

வாழ்த்துக்கள் அண்ணா...!

arun
13-03-2012, 02:23 PM
நட்பு எப்போதும் பசுமையானது !

எத்தனை ஆண்டுகள் கழித்து பழைய நண்பர்களை பார்த்தாலும் பசுமையான நினைவுகளும் பழைய கலாட்டாக்களும் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாதது அந்த விதத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியே !

சிவா.ஜி
13-03-2012, 08:05 PM
ஆமா செல்வா....சட்டென்று மனது சிறுகுழந்தையாகிவிடுகிறது....எத்த்னைக் கோடி கொடுத்தாலும்....இதை விலைக்கு வாங்க முடியாது. நன்றி செல்வா.

சிவா.ஜி
13-03-2012, 08:06 PM
மிக உண்மை அருண். எத்தனை ஆண்டுகள் ஆனாலும்...அந்த பசுமை மாறுவதேயில்லை....அதிசயமான அனுபவங்கள். நன்றி அருண்.

கீதம்
13-03-2012, 10:05 PM
பள்ளி நண்பர்களைச் சந்தித்ததால் உண்டான குதூகலம் உங்கள் எழுத்திலேயே தெரிகிறது அண்ணா. வாழ்த்துக்கள்.

சில சமயங்களில் நாம் அந்தப் பழைய நட்பையே எதிர்பார்த்திருக்க, காலமும் சூழலும் அவர்களின் குணங்களை அடியோடு மாற்றிவிட்டிருப்பதை அறியும்போது, ஏன்தான் சந்தித்தோமோ என்றும் எண்ண வைத்துவிடுகிறது. பழைய நினைவுகளையே அசைபோட்டுக்கொண்டிருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

அப்புறம்... அந்த எட்டாம் வகுப்புத் தோழி பற்றி ஏதும் தெரிந்ததா? :)

jayanth
14-03-2012, 02:53 AM
நேற்று முகப்புத்தகத்தில்(ஃபேஸ்புக்) என் பள்ளித்தோழர்களைத்தேடினேன். ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் மேநிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள்.....1978ல் பத்தாம் வகுப்பை முடித்தவர்கள் எனத் தேடியதில் இருவர் கிடைத்தார்கள்.(அதற்கு முன்பே தேடாமல் கிடைத்த செல்வமாய் கலைவேந்தன் கிடைத்தது தனிக்கதை)

.

நானும் பத்தாம் வகுப்பு (முதல் பத்தாம் வகுப்பு S.S.L.C )தான். ஒன்றாகப் படிக்கவில்லை என்றாலும் ஒரு சமகால நண்பர் கிடைத்ததில் மகிழ்ச்சி!!!

சிவா.ஜி
14-03-2012, 09:24 PM
பள்ளி நண்பர்களைச் சந்தித்ததால் உண்டான குதூகலம் உங்கள் எழுத்திலேயே தெரிகிறது அண்ணா. வாழ்த்துக்கள்.

சில சமயங்களில் நாம் அந்தப் பழைய நட்பையே எதிர்பார்த்திருக்க, காலமும் சூழலும் அவர்களின் குணங்களை அடியோடு மாற்றிவிட்டிருப்பதை அறியும்போது, ஏன்தான் சந்தித்தோமோ என்றும் எண்ண வைத்துவிடுகிறது. பழைய நினைவுகளையே அசைபோட்டுக்கொண்டிருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

அப்புறம்... அந்த எட்டாம் வகுப்புத் தோழி பற்றி ஏதும் தெரிந்ததா? :)
ஆமாம்மா....சில சமயம் அப்படியும் நேர்ந்துவிடுவதுண்டு. ஆனால்....நல்லவேளையாய் எனக்கு அது நேரவில்லை. 34 ஆண்டுகள் கழித்துக் கிடைத்த இந்த நட்பு என்னை மனம் மகிழச் செய்தது என்பதில் சற்றும் பொய்யில்லை.

என் எட்டாம் வகுப்புத் தோழி....இன்னும் கிடைக்கவில்லை தங்கையே...அந்த விஜி....எங்கிருக்கிறார்(ள் அல்ல....ர்....காரணம்....வயதும், குடும்பத்தலைவி என்ற அந்தஸ்தும்) என்ற எந்த தகவலும் இல்லை. முகநூல் உதவிடுமா....தினமும் முயற்சிக்கிறேன். என் மனைவியும் முயற்சிக்கிறார். கிடைத்தால்....பெருமகிழ்ச்சி. நன்றிம்மா கீதம்.

சிவா.ஜி
14-03-2012, 09:25 PM
நானும் பத்தாம் வகுப்பு (முதல் பத்தாம் வகுப்பு S.S.L.C )தான். ஒன்றாகப் படிக்கவில்லை என்றாலும் ஒரு சமகால நண்பர் கிடைத்ததில் மகிழ்ச்சி!!!

ஆஹா...நீங்களும் என்னுடைய செட்டா.....ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிங்க ஜெயந்த்.

பூமகள்
15-03-2012, 03:22 AM
கொடுத்து வைத்தவர் அண்ணா நீங்கள்..

என் பள்ளி கால உயிர்த் தோழியை வழியில் பார்த்து அலைபேசி எண் கொடுத்தாலும் அழைக்கவே இல்லை நான் வரும் வரையில்.. நான் மட்டும் ஆவலோடு அவள் வருகைக்காய் காத்திருந்தேன்..

நட்பு மணம் மனம் நிறைக்கிறது.. வாழ்த்துகள்.. உங்களோடு மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.:)

aren
15-03-2012, 05:25 AM
என் பள்ளி கால உயிர்த் தோழியை வழியில் பார்த்து அலைபேசி எண் கொடுத்தாலும் அழைக்கவே இல்லை நான் வரும் வரையில்.. நான் மட்டும் ஆவலோடு அவள் வருகைக்காய் காத்திருந்தேன்..

.:)

ஏன் அவர்களுடைய அலைபேசி எண் உங்களிடம் இல்லையா? நீங்கள் கூப்பிட்டிருக்கலாமே?

aren
15-03-2012, 05:31 AM
அப்புறம்... அந்த எட்டாம் வகுப்புத் தோழி பற்றி ஏதும் தெரிந்ததா? :)

கரெக்டா பிடிச்சுட்டீங்களே?

ஆமாம் சிவாஜி, அவங்களைப் பற்றி ஏதாவது விவரம் தெரியுமா?

aren
15-03-2012, 05:34 AM
நானும் பத்தாம் வகுப்பு (முதல் பத்தாம் வகுப்பு S.S.L.C )தான். ஒன்றாகப் படிக்கவில்லை என்றாலும் ஒரு சமகால நண்பர் கிடைத்ததில் மகிழ்ச்சி!!!

நீங்க அந்த குரூப்பா? இன்னொரு வருஷம் ஸ்கூல்லேயே படிச்சு சீனியர்ஸை திட்டி தீர்த்தீர்களே, அந்த குரூப்பா?

நான் கடைசி 11 வது எஸ்.எஸ்.எல்.சி மற்றும் கடைசி பி.யூ.சி.

jayanth
15-03-2012, 05:39 AM
நீங்க அந்த குரூப்பா? இன்னொரு வருஷம் ஸ்கூல்லேயே படிச்சு சீனியர்ஸை திட்டி தீர்த்தீர்களே, அந்த குரூப்பா?

நான் கடைசி 11 வது எஸ்.எஸ்.எல்.சி மற்றும் கடைசி பி.யூ.சி.

சமகால நண்பர்களின் எழுத்துக்களை படிக்கும்போதே இந்த ஆனந்தம் என்றால் நண்பர்களை காணும்போது .........:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

பூமகள்
15-03-2012, 06:35 AM
ஏன் அவர்களுடைய அலைபேசி எண் உங்களிடம் இல்லையா? நீங்கள் கூப்பிட்டிருக்கலாமே?

கூப்பிடாமலா இருந்திருப்பேன் அண்ணா... அவள் ரொம்ப பிசி.... பெண்கள் நட்பு எல்லாரும் சொல்வது போல் திருமணத்துக்கு பின் தொடர அநேகம் பேர் விரும்புவதும் இல்லை.. சூழல் காரணமாகவும் இருக்கலாம்..

இன்றும் யார் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நான் இன்னும் என் தோழிகளுக்கு அழைத்துக் கொண்டே தான் இருக்கிறேன்.. :)

சிவா.ஜி
15-03-2012, 04:00 PM

அதாம்மா...தங்கையின் உள்ளம்....அண்ணனும் தங்கயும் ஒரே வழியில்.....நட்பைநாடி...

சிவா.ஜி
15-03-2012, 04:01 PM
நீங்க அந்த குரூப்பா? இன்னொரு வருஷம் ஸ்கூல்லேயே படிச்சு சீனியர்ஸை திட்டி தீர்த்தீர்களே, அந்த குரூப்பா?

நான் கடைசி 11 வது எஸ்.எஸ்.எல்.சி மற்றும் கடைசி பி.யூ.சி.

ஆஹா....எங்க அக்காவும் இதே குரூப்தான். ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆரென்.

சிவா.ஜி
15-03-2012, 04:03 PM
கரெக்டா பிடிச்சுட்டீங்களே?

ஆமாம் சிவாஜி, அவங்களைப் பற்றி ஏதாவது விவரம் தெரியுமா?

இன்னும் தெரியல ஆரென்....முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கேன்....பல விஜயலஷ்மிமிங்க தெரியறாங்க.... ஆனா அவங்கதான் இதுன்னு குழப்பமா இருக்கு.

சிவா.ஜி
01-06-2012, 08:41 AM
இந்தமுறை ஊருக்குப் போனபோது சென்னைக்கு குடும்பத்தோடு போனேன். நாராயணனை அழைத்தேன். நான் வீட்டுக்கு வரவா என்றதும், உனக்கு வழி கண்டுபிடிக்க சிரமமாய் இருக்கும்...நானே வருகிறேன் என வடபழனியிலிருந்து நுங்கம்பாக்கத்துக்கு எங்களைப் பார்க்க வந்திருந்தான். சந்தித்தோம். இருவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். என் மனைவிக்கும், மகளுக்கும் கூட லேசாய் கண்கள் கலங்கிவிட்டன.(அப்புறம் என்னை இரண்டுபேரும் ஓட்டியது வேறுவிஷயம்...என் பொண்ணைப் பத்தி சொல்லனுமா....டாடி செம ஃபீலிங்ஸா...என பயங்கரமாய் ஓட்டிவிட்டாள்)

அடுத்தமுறை குடும்பத்தோடு அவனை என் வீட்டுக்கு அழைத்திருக்கிறேன்....34 வருடங்களுக்கு முன் பிரிந்த நட்பின் பயணம்...மீண்டும் தொடங்கியுள்ளதைப் பார்க்கும்போது...ரொம்ப சந்தோஷமா இருக்கு.