PDA

View Full Version : iPAD 3 மற்றும் iOS5.1 வெளியிடப்பட்டது.



அன்புரசிகன்
07-03-2012, 11:22 PM
இன்று iPAD3 மற்றும் iOS5.1 இயங்குதளம் அப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

iPAD3 4G வசதியுள்ளதையும் வெளியிட்டுள்ளார்கள்.


ஏற்கனவே அப்பிள் பொருட்களை வைத்திருப்போர் பலர் iOS5 இயங்குதளம் நிறுவிய பின்னர் சில அசௌகரியங்களை பார்த்திருப்பீர்கள். மிக முக்கியமாக மின்கலப்பிரச்சனை மற்றும் photostream. இவற்றை நிவர்த்தி செய்துள்ளதாக கூறியுள்ளார்கள். photostream இல் உள்ளவற்றை இப்போது தனித்தனியாக நீக்கலாம்.

அமரன்
08-03-2012, 12:34 PM
மின்கலப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்தது. சும்மா இருந்தாலும் மாலையில் சக்தி இழந்து அப்பிள்பேசி தூங்கிடும். அந்த நேரத்தில கூப்பிட்டுப் பார்த்துவிட்டு, கடுப்பாகிப் பிறகு நடக்கும் பாருங்கோ சங்காபிஷேகம்... இந்த மென்பொருள் குறைநீக்கியதாக இருந்தால் மெத்த நல்லது..*

பாரதி
09-03-2012, 12:35 AM
தகவலுக்கு நன்றி அன்பு.
அண்ட்ராய்டும் வளர்ந்து, விரிந்து வருவதாக தோன்றுகிறதே!

அன்புரசிகன்
16-03-2012, 12:57 AM
தகவலுக்கு நன்றி அன்பு.
அண்ட்ராய்டும் வளர்ந்து, விரிந்து வருவதாக தோன்றுகிறதே!

அது என்னமோ உண்மை தான். ஆனால் ஆன்ரொய்ட் சில பெரிய விடையங்களை கையாளப்போய் சிறிய விடையங்களில் கோட்டை விட்டுவிடுகிறது.

1. வேகம்.
2. ஒருங்குக்குறி
3. மின்கலப்பாவனைக்காலம்
4. வாடிக்கையாளர் உதவி
5. மென்பொருட்கள் உருவாக்கம் மற்றும் அபிவிருத்தி

HTC & Samsung என்று கூடி உழைத்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிறார்களோ அன்று நிச்சயம் ஒரு நல்ல விளைவு கிட்டும்.


Tablet உலகில் iPad வளர்ந்தஅளவு samsung galaxy tab வளரவில்லை. அடிக்கடி struck ஆவது பெரும் தொல்லை. அதற்கான இயங்குதளம் சரியாக சீரமைக்கப்படவில்லை. Customer care ற்கு அழைத்தால் பழைய பல்லவி பாடி அது இது என்றுவிட்டு இறுதியில் அதுவாக இருக்கும். இதை செய்து பாருங்கள் என்று விட்டு இணைப்பை அவர்களே துண்டித்துவிடுவார்கள். ஆனால் அப்பிள் அவ்வாறில்லை. நீங்களாக துண்டிக்கும் வரை அவர்கள் காத்திருப்பார்கள். அழைத்தஉடனேயே உங்களுக்கு என்று ஒரு case number தருவார்கள். அதை சொல்லியே பிற்காலத்தில் நீங்கள் உரையாடலாம்.