PDA

View Full Version : நம்முடைய நாடறி நீ நன்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-03-2012, 03:22 PM
நம்முடைய நாடறி நீ நன்கு
[நேரிசை வெண்பா]
தாய்நாடாம், தாய்வீடாம், தாய்மொழியாம் என்றுபல
வாய்நாமும் வாழ்த்துகிறோம் மங்கையரை – ஏய்ப்பதுவே
என்பேன்நான், எல்லாமே ஏதம்தான், பெண்ணியத்தில்
நன்றாக இல்லையெநம் நாடு
[இன்னிசை கலிவெண்பா]
ஆண்குழந்தை வேண்டுமென்ற ஆசையிலே நம்நாட்டில்
வீண்கொலைகள் செய்கின்றார் வீணர்கள் பெண்சிசுவை
சொல்கிறதே ஐநாவின் தூற்றுகின்ற ஓரறிக்கை
“கொல்வதுவோ ராயிரமேல்க் கூடுமென்றார் ஒர்நாளும்”
பெண்பிள்ளை வந்துதித்தால் பெற்றோர்கள் பேரிடியால்
மண்ணிடிந்து வீழ்ந்திட்ட மாளிகைபோ லாகிடுவர்
கள்ளிப்பால் ஊட்டிவிட்டுக் கல்நெஞ்சாய் நெல்மணியை
உள்வாயில் தூவிவிட்டே ஓருயிரைத் மாய்த்திடுவர்
இப்படியே செய்வதினால் இங்கோஈர் பால்விகிதம்*
தப்பிதமாய் தான்குறைந்தே தாறுமாறாய் போனதுபார்
சின்னதிலே கல்யாணம் செய்தவளைத் தள்ளிடுவர்
சொன்னபடித் தட்சனையைத் துன்முகமாய்த் தந்திடுவர்
தப்பிதமாய்த் தன்கணவன் தற்செயலாய் மாண்டுவிட்டால்
எப்போதும் கைம்பெண்ணாய் ஏதிலிபோல் வைத்திடுவர்
மும்பையிலும் கொல்கத்தா முன்வளர்ந்த வூர்களிலும்
தம்முடலைத் தந்தலையும் சாக்கடையாய் லட்சம்மேல்
நம்முடைய நாடறிநீ நன்கு
ஈர் பால்விகிதம்* = Male/Female Sex Ratio
-----சுந்தரராஜ் தயாளன்

சிவா.ஜி
07-03-2012, 07:47 PM
இந்தியாவை உலக நாடுகள்முன் தலைகுனிய வைக்கும் செயல் பெண்சிசுக்கொலை....அதே சமயம்....எங்கும் எல்லோரிலும் சுதந்திரம் நாடும் அமெரிக்காவிலும் இன்னும் பெண் அதிபர்...ஆளவில்லை....இந்தியாவுக்கே அந்தப் பெருமை.

கற்பில் சிறந்தவளைக் கை கூப்புவதும், காமத்தில் கண்ணகியையும் கைப்பிடித்திழுப்பதும்....முரணான....இந்நாடு....இதிலும் முன்னிலையில்.

கருத்தான ஆக்கத்துக்கு அன்பான வாழ்த்துக்கள் ஐயா.

அமரன்
08-03-2012, 07:17 PM
பெண்கள் தினத்தில் இக்கவிதைகளைப் படிக்கிறேன்..

எளிதான சொற்களில் கருத்தூன்றிய மரபுப் பாக்கள்.

போற்றுல் தூற்றல் என்ற இரு துருவங்களைக் கொண்டுள்ள உலகம் இந்தியா..

தொடர்ந்து அசத்துங்கள் ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
09-03-2012, 04:47 AM
இந்தியாவை உலக நாடுகள்முன் தலைகுனிய வைக்கும் செயல் பெண்சிசுக்கொலை....அதே சமயம்....எங்கும் எல்லோரிலும் சுதந்திரம் நாடும் அமெரிக்காவிலும் இன்னும் பெண் அதிபர்...ஆளவில்லை....இந்தியாவுக்கே அந்தப் பெருமை.

கற்பில் சிறந்தவளைக் கை கூப்புவதும், காமத்தில் கண்ணகியையும் கைப்பிடித்திழுப்பதும்....முரணான....இந்நாடு....இதிலும் முன்னிலையில்.

கருத்தான ஆக்கத்துக்கு அன்பான வாழ்த்துக்கள் ஐயா.
தங்களின் இந்த முதல் பின்னுட்டத்திற்கும், தந்துள்ள கருத்துக்களுக்கும் ஏன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்:)

M.Jagadeesan
09-03-2012, 06:20 AM
இந்தியாவில் பெண்களின் நிலை இதுதான்! அழகிய மரபுச் செய்யுளால் ஆக்கப்பட்ட கவிதைக்கு நன்றி!

Dr.சுந்தரராஜ் தயாளன்
10-03-2012, 10:06 AM
பெண்கள் தினத்தில் இக்கவிதைகளைப் படிக்கிறேன்..

எளிதான சொற்களில் கருத்தூன்றிய மரபுப் பாக்கள்.

போற்றுல் தூற்றல் என்ற இரு துருவங்களைக் கொண்டுள்ள உலகம் இந்தியா..

தொடர்ந்து அசத்துங்கள் ஐயா.

மிகவும் நன்றி அமரன் அவர்களே :)

Dr.சுந்தரராஜ் தயாளன்
10-03-2012, 04:09 PM
இந்தியாவில் பெண்களின் நிலை இதுதான்! அழகிய மரபுச் செய்யுளால் ஆக்கப்பட்ட கவிதைக்கு நன்றி!

தங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி ஜெகதீசன் ஐயா :)

கீதம்
19-03-2012, 12:38 AM
அழகிய தமிழ்ப்பாவால் பாரதப் பாவையர் நிலை எடுத்துரைத்தீர்.

மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் தங்களுக்கு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-03-2012, 04:46 PM
அழகிய தமிழ்ப்பாவால் பாரதப் பாவையர் நிலை எடுத்துரைத்தீர்.

மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் தங்களுக்கு.
மிகவும் நன்றி கீதம் அவர்களே. பின்னுட்டமிட்ட முதல் பாவையர் நீங்கள் தான் என்பதில் மிகவும் மகிழ்ச்சி. நிறைய பாவையர்கள் வருவார்கள், கருத்துக்களைத் தருவார்கள் என்று எதிர்பார்த்தேன் :redface:

Dr.சுந்தரராஜ் தயாளன்
20-03-2012, 03:36 PM
பெண்ணியம், பெண்ணடிமைத்தனம், பெண்சிசுக்கொலை, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற சமூக அவலங்களைக் குறித்து இந்த கவிதை எழுதப்பட்டது. இதுவரை ஒரே ஒரு பெண்தான் வந்து பின்னுட்டம் இட்டுள்ளார் என்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒருவேளை, நமது மன்றத்தில் பெண் உறுப்பினர்கள் மிகவும் குறைவோ? ஒருவேளை பின்னால் வருவார்களோ??:redface::sprachlos020:

கலைவேந்தன்
22-04-2012, 03:51 PM
முதற்கண் என் பாராட்டுகளைப் பிடியுங்கள் தயாளன்..! கலிவெண்பாவில் அசத்தியுள்ளீர்கள்.

விரிவான விமர்சனம் இன்னும் சற்று நேரத்தில்...

கலைவேந்தன்
22-04-2012, 03:59 PM
மரபுப்பாக்களைக் காண்பது அருகிவரும் நேரத்தில் காய்ச்சீரில் நேர் முன்னதாகக்கொண்டு வெண்சீர்வெண்டளைகளில் கலிவெண்பா பாடுதல் என்பது வெகுசிலருக்கு மாத்திரமே சாத்தியம். நான் கூட இதுவரை கலிவெண்பாவில் எழுதியதில்லை. அனைத்து விதிகளையும் அறிந்திருந்தபோதிலும்.

காரணம் சற்றே கவனம் பிசகிடில் கலிவெண்பா கொலைவெண்பாவாக மாறிவிடும் அபாயம். இதில் நீங்கள் புகுந்து விளையாடி இருப்பது உங்கள் தேர்ந்த புலமைக்கு மேலுமொரு சான்றே..

பாடல் எழுத எடுத்துக்கொண்ட கருத்துக்களம் மிக மிக அருமை. தமிழகத்தின் ஏன் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே சவாலாக இருக்கின்ற பெண்சிசுக்கொலையையும் அதனால் நேரிடும் விபரீதங்களையும் வெகுவாகச்சொல்லி அருமையாக பாடம் கற்பித்துள்ளீர்கள். அதற்கு பிரத்தியேகமான பாராட்டுகள்.

நான் ரசித்த வரிகளை அடுக்கலாம் என முயன்றபோது தோல்விகண்டேன். காரணம்..? கரும்பென்றால் அடிக்கரும்பு நுனிக்கரும்பென்று தரம் பிரித்து சுவை பிரித்திடலாம்.

தேன்குடுவையில் எச்சொட்டை இனிமை என்றும் எத்துளிகளை இனிமையில்லை எனவும் வகைபிரிக்க இயலும்..?

உன்னதமானதோர் கவிதையில் பெண்ணியம் பேசிய இக்கவிதை நாளெல்லாம் சிறக்கும். காலம் கடந்து நிலைக்கும்..!!

மனமார்ந்த பாராட்டுகள் ஐயா..!

ஆதி
24-04-2012, 09:54 AM
பெண்களை நாம் தெய்வங்களாக பாடியதே அவர்களை கொல்லத்தான் போலும்

இந்த சமூகம் பெண்களுக்கு இழைக்கும் கொடுமை சிசுவில் இருந்தே ஆரம்பித்துவிடுகிறது

இலக்கணத்தில் இன்னிசை இருந்தாலும், பெண்களின் நிலை கிலியாகத்தான் இருக்கிறது

Dr.சுந்தரராஜ் தயாளன்
18-05-2012, 01:14 PM
முதற்கண் என் பாராட்டுகளைப் பிடியுங்கள் தயாளன்..! கலிவெண்பாவில் அசத்தியுள்ளீர்கள்.

விரிவான விமர்சனம் இன்னும் சற்று நேரத்தில்...
மிகவும் நன்றி கலைவேந்தன் :)

vasikaran.g
20-05-2012, 11:56 AM
மரபுப்
பாக்கள்
உமது
உறவு
பூக்கள் !
அடிக்கடி
பூத்து
எமக்கு
பருக
தருது
கிண்ணம்
நிறைய
புதுக் கள்..
நிறைய
வாழ்த்துக் கள்..

Dr.சுந்தரராஜ் தயாளன்
24-06-2012, 10:26 AM
மரபுப்பாக்களைக் காண்பது அருகிவரும் நேரத்தில் காய்ச்சீரில் நேர் முன்னதாகக்கொண்டு வெண்சீர்வெண்டளைகளில் கலிவெண்பா பாடுதல் என்பது வெகுசிலருக்கு மாத்திரமே சாத்தியம். நான் கூட இதுவரை கலிவெண்பாவில் எழுதியதில்லை. அனைத்து விதிகளையும் அறிந்திருந்தபோதிலும்.

காரணம் சற்றே கவனம் பிசகிடில் கலிவெண்பா கொலைவெண்பாவாக மாறிவிடும் அபாயம். இதில் நீங்கள் புகுந்து விளையாடி இருப்பது உங்கள் தேர்ந்த புலமைக்கு மேலுமொரு சான்றே..

பாடல் எழுத எடுத்துக்கொண்ட கருத்துக்களம் மிக மிக அருமை. தமிழகத்தின் ஏன் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே சவாலாக இருக்கின்ற பெண்சிசுக்கொலையையும் அதனால் நேரிடும் விபரீதங்களையும் வெகுவாகச்சொல்லி அருமையாக பாடம் கற்பித்துள்ளீர்கள். அதற்கு பிரத்தியேகமான பாராட்டுகள்.

நான் ரசித்த வரிகளை அடுக்கலாம் என முயன்றபோது தோல்விகண்டேன். காரணம்..? கரும்பென்றால் அடிக்கரும்பு நுனிக்கரும்பென்று தரம் பிரித்து சுவை பிரித்திடலாம்.

தேன்குடுவையில் எச்சொட்டை இனிமை என்றும் எத்துளிகளை இனிமையில்லை எனவும் வகைபிரிக்க இயலும்..?

உன்னதமானதோர் கவிதையில் பெண்ணியம் பேசிய இக்கவிதை நாளெல்லாம் சிறக்கும். காலம் கடந்து நிலைக்கும்..!!

மனமார்ந்த பாராட்டுகள் ஐயா..!
மிகவும் நன்றி கலைவேந்தன் அவர்களே. உங்களின் பாராட்டை மனமார என்றுக்கொண்டு உங்களை வாழ்த்துகிறேன்.:aktion033::aktion033: