PDA

View Full Version : ஒரு தாயின் புலம்பல்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
05-03-2012, 06:05 AM
ஒரு தாயின் புலம்பல்கள்
[இன்னிசை கலிவெண்பா]
வந்தாரை நம்நாட்டில் வாழவைப்போம், நம்முயிரைத்
தந்தோரை வீட்டைவிட்டே தள்ளிவிடும் வன்கொடுமை
நொந்தாரே பெற்றோர்கள் நோயொடுமூ தில்லமதில்
சிந்தாமல் ஒர்துளிநீர் சிற்றறிவால் பிள்ளைகளும்
இங்கிவரைப் பெற்றெடுத்து இன்னலுடன் தான்வளர்த்து
மங்கியதோர் கண்களுடன் மண்ணுடனே போராடி*
பொங்கிவரும் பொங்கலிட்டுப் போற்றியவர் இப்பொழுதோ
தங்குகிறார் யாருமின்றித் தான்முதியோர் இல்லமதில்
பொல்லாத இந்நிலையில் புண்ணான தாய்சொல்வாள்:
“கல்யாணம் செய்துவைத்தோம் கட்டழகைப் கைபிடித்தான்
இல்லாது சொல்லிஎம்மை இங்கிருக்க வைத்துவிட்டாள்
கல்லாதார் நாங்கள்தான் கற்கின்றோம் காலம்போய்
நல்லவனே முன்பொருகால் நன்றியினைத் தான்மறந்தான்”
“தாய்போதும் என்கின்றான் தந்தையரோ வேண்டாமாம்
நாய்எனவே ஓடிவந்தே நானிருப்பேன் தாதியைப்போல்
நோய்பெருத்த தந்தையர்க்கோ நோக்கிடமூ தோரில்லம்
பேய்க்குணமே உள்ளவனாய்ப் பெற்றேன்பார் என்மகனை”
“என்னிடத்தைச் சுற்றிவந்தே என்பேத்தி ஆடுகின்றாள்
தன்னிடத்தில் தாவிவந்தே தட்டிவிழும் என்பேரன்
சொன்னதையே என்மகனும் சொன்னபடி செய்கின்றான்
என்கனவில் எப்போதும் எல்லோரும் என்னிடமே”
“வேரதனை விட்டகன்ற வேர்விழுதே நீகேளாய்
ஊரதனில் உள்ளோர்கள் உன்னைநகை யாடிடுவார்
பாரிதைநீ இவ்விடத்துன் பையனுனைச் சேர்க்கவந்தே
பேரேட்டில் பேர்பதிப்பான் போ”

மண்ணுடனே போராடி* = விவசாயம் செய்தல் எனக்கொள்க
---Dr. சுந்தரராஜ் தயாளன்

சிவா.ஜி
13-03-2012, 09:42 PM
இரணமூட்டும் வரிகள். வாசிக்கையில் வலிக்கிறது. தாதி வேலை செய்யத் தாய் போதும், தள்ளாத வயதில் தகப்பனெதற்குச் சுமையாய் எனத் தள்ளிவைக்கும் மகன்கள்....நாளை இதே விழுதுகள்தான் வேராகும்.....அதன் வேர்கள் விழுதுகளாய் இவற்றைப் புறந்தள்ளுமென அறியா அறிவீலிகள்.

நல்ல தமிழில் சொல்ல வந்தக் கருத்தை தெள்ளத் தெளிவாய் உரைத்திட்டக் கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா.

கீதம்
13-03-2012, 09:57 PM
முதுமையில் ஒருவருக்கொருவர் ஆறுதலாயும் ஆதரவாகவும் இருக்கவேண்டிய நிலையில் இப்படி தன்னலம் பார்த்து தாயையும் தந்தையையும் பிரிப்பது கொடுமை.

அதிலும் உடல்நலம் உள்ளவரை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு முடியாதவரைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளையை நினைத்தால் நமக்கே மனம் கொதிக்கிறது. பெற்றவளுக்கு எப்படி இருக்கும்? வேதனை மிக்க வரிகள்!

Dr.சுந்தரராஜ் தயாளன்
14-03-2012, 06:09 PM
இரணமூட்டும் வரிகள். வாசிக்கையில் வலிக்கிறது. தாதி வேலை செய்யத் தாய் போதும், தள்ளாத வயதில் தகப்பனெதற்குச் சுமையாய் எனத் தள்ளிவைக்கும் மகன்கள்....நாளை இதே விழுதுகள்தான் வேராகும்.....அதன் வேர்கள் விழுதுகளாய் இவற்றைப் புறந்தள்ளுமென அறியா அறிவீலிகள்.

நல்ல தமிழில் சொல்ல வந்தக் கருத்தை தெள்ளத் தெளிவாய் உரைத்திட்டக் கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா.
மிகவும் நன்றி...சிவா.ஜி அவர்களே :)

நேசம்
15-03-2012, 08:50 AM
நாம் எப்படி பெற்றொர்களை நடத்துகிறொமோ அப்படிதான் நாளை நம்முடைய பிள்ளைகளும் நடத்துவர்கள் என்பதை அறியாதன் விளைவுதான் இப்படி இவர்களை செய்ய தூண்டிகிறது,பெற்றொர்களின் அருமை நாம் முதியவர்களாக ஆகும் போது தான் தெரியும்

Hega
16-03-2012, 10:03 AM
முதுமையில் தனிமையும், வறுமையும் மிக மிக கொடியது. அதை விட மகா கொடியது தாய் தந்தையை பாகம் பிரித்து அல்லாட விடுவது.

காவோலை விழ குருத்தோலை சிரிக்கும் போது தானும் ஒரு நாள் காவோலையாவோம் என என்றுதான் நினைக்குமோ...

சிந்திக்க தூண்டிய பா வரிகள். அருமையான வார்த்தை கோர்ப்புகள்.

மனமார்ந்த நன்றிகள் ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
17-03-2012, 06:25 AM
முதுமையில் ஒருவருக்கொருவர் ஆறுதலாயும் ஆதரவாகவும் இருக்கவேண்டிய நிலையில் இப்படி தன்னலம் பார்த்து தாயையும் தந்தையையும் பிரிப்பது கொடுமை.

அதிலும் உடல்நலம் உள்ளவரை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு முடியாதவரைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளையை நினைத்தால் நமக்கே மனம் கொதிக்கிறது. பெற்றவளுக்கு எப்படி இருக்கும்? வேதனை மிக்க வரிகள்!

மிகவும் நன்றி கீதம் அவர்களே :):aktion033:

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-03-2012, 02:48 AM
நாம் எப்படி பெற்றொர்களை நடத்துகிறொமோ அப்படிதான் நாளை நம்முடைய பிள்ளைகளும் நடத்துவர்கள் என்பதை அறியாதன் விளைவுதான் இப்படி இவர்களை செய்ய தூண்டிகிறது,பெற்றொர்களின் அருமை நாம் முதியவர்களாக ஆகும் போது தான் தெரியும்

மிகவும் உண்மை நேசம் அவர்களே...தங்களின் பின்னுட்டத்திற்கு நன்றி :)

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-03-2012, 04:49 PM
முதுமையில் தனிமையும், வறுமையும் மிக மிக கொடியது. அதை விட மகா கொடியது தாய் தந்தையை பாகம் பிரித்து அல்லாட விடுவது.

காவோலை விழ குருத்தோலை சிரிக்கும் போது தானும் ஒரு நாள் காவோலையாவோம் என என்றுதான் நினைக்குமோ...

சிந்திக்க தூண்டிய பா வரிகள். அருமையான வார்த்தை கோர்ப்புகள்.

மனமார்ந்த நன்றிகள் ஐயா.

மிகவும் நன்றாகச் சொன்னீர்கள் ஹெகா அவர்களே. நன்றி :)

Dr.சுந்தரராஜ் தயாளன்
24-03-2012, 10:51 AM
இந்தக் கவிதையை எழுதி இருபது நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை 101 பேர் வந்து பார்த்துச் சென்றுள்ளனர் என்று புள்ளிவிபரம் சொல்கிறது. ஆயினும் பின்னுட்டம் இட்டவர்கள் வெறும் நான்கே நான்கு பேர் மட்டுமே:redface: மகாகவி பாரதியாரின் படத்தையும், தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலையையும் தாங்கி, " எண்திசையும் தமிழ் முழங்கிடச் செய்வோம் ....என்ற முழக்கத்தோடு உள்ள நமது தமிழ் மன்றத்தில் மரபுக் கவிதைகளுக்கு மதிப்பு இருக்கும் என்று நினைத்தேன்/நம்பினேன் . அது பொய்யாகி விட்டது. மரபு தெரிந்தவர்களும், வெண்பா எழுதுபவர்களும் கூட பின்னுட்டம் இட வர வில்லை/ விரும்பவில்லை என்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது:sprachlos020::eek: பின்னுட்டமிட்ட அந்த நால்வருக்கும் நான் தலை வணங்குகிறேன் :icon_03::icon_03::icon_03::icon_03:

சிவா.ஜி
24-03-2012, 12:32 PM
மனம் தளராதீர்கள் ஐயா. பொதுவாகவே இப்போது நிறைய உறுப்பினர்களின் வருகை குறைவாகவே இருக்கிறது. சிலருக்கு வாசிக்க மட்டுமே நேரமிருக்கலாம்.

நல்ல எழுத்து காலம் கடந்தும் வாசிக்கப்படும்....நினைக்கப்படும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 04:46 PM
மிக, மிக நன்றி சிவா.ஜி அவர்களே. நான் மனம் தளர்ந்துபோய் விடவில்லை. இன்னும் நம் மன்ற உறவுகள் மேல் நம்பிக்கை உள்ளது. வருவார்கள்.நிச்சயம் வருவார்கள். காத்திருப்பேன். உங்களின் ஊக்குவித்தலுக்கு நன்றி மீண்டும் மீண்டும் :) :redface:

கலைவேந்தன்
09-07-2012, 04:38 AM
மன்னியுங்கள் ஐயா.. மன்றத்தில் எத்தனையோ பொக்கிஷங்கள் இதுபோல அமிழ்ந்துபோய் முகம் காட்டாமல் இருக்கின்றன. அவற்றை எல்லாம் தேடிப்பிடித்து வாசிக்க தேவையான நேரம் குறைவாகி இருப்பதால் வந்து சில பதிவுகள் இட்டுச் சென்றுவிடுகிறேன். இடையில் இரண்டு மாத விடுமுறையில் தமிழ்கம் சென்றமையால் என் வரத்தும் குறைவாய் இருந்தது.

மேலும் மரபுக்கவிதைகளும் செந்தமிழ்ப்பாக்களும் நாம் எதிர்பார்த்ததுபோல் சிலாகிக்கப்படமாட்டாது என்பதனை எனது எத்தனையோ மரபுக்கவிதைகள் சீந்துவாரின்றி காட்டி நிற்கின்றன. நம் கடன் படைப்பது. நாலு பேர் வாசித்தாலும் அது வெற்றியே எனக் கொள்ளல் வேண்டும்.

தங்களின் கவித்திறமைக்கு நான் கட்டியம் கூறவேண்டுமென்பதில்லை. தங்களின் படைப்புகளே அவற்றைப் பறைசாற்றி நிற்கும்.

தாம் ஈன்ற மக்கள் தம்மைப் புறந்தள்ளிக் கதவைச்சாத்தும் நிலைமை எவருக்குமே ஏற்படலாகாது. அக்கொடுமைதனை அழகான கலிவெண்பாவில் அள்ளிக்குவித்திட்ட தங்கள் கவித்திறமையை வணங்குகின்றேன்.

சொல்நயம் பொருள் நயம் எதுகை மோனை நயம் என மிகச்சீர்பெற்று விளங்கும் தங்கள் பாவுக்கு மனமுவந்த பாராட்டுகள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-12-2012, 04:14 PM

மிகவும் நன்றி...கலை. காலம் கடந்த பதிலுக்காக மன்னிக்கவும்.

ஜான்
08-12-2012, 04:58 AM
ஒரு தாயின் புலம்பல்கள்
[இன்னிசை கலிவெண்பா]
][/I]
“வேரதனை விட்டகன்ற வேர்விழுதே நீகேளாய் ஊரதனில் உள்ளோர்கள் உன்னைநகை யாடிடுவார்
[COLOR="DarkSlateGray"][I]மண்ணுடனே போராடி* = விவசாயம் செய்தல் எனக்கொள்க
---Dr. சுந்தரராஜ் தயாளன்

இவ்வரிகள் நீண்ட நாள் நினைவிருக்கும் கவிஞரே