PDA

View Full Version : தப்பான ஓப்பீடு

Hega
02-03-2012, 09:30 PM
ஒப்பீடு தப்பென்று
செப்பேடு சொன்னாலும்
தப்போடு தான் பார்ப்போம்
தப்பென்று நாம் உணரோம்
சப்பென்ற வாழ்க்கைக்கு
ஒப்பீடும் தப்பென்று
செப்புவோர் சொல்கூட
தப்பாக போய்விடும.

சிப்பிக்குள் நல்முத்துப்
போல் சிறப்புகள்
மறைவிலே...
நிகரில்லை எவருமே
உனக்கினி உலகிலே
உணர்ந்தபின் செப்பாதே
அடுத்ததே உயர்வென்று.

அமரன்
02-03-2012, 09:36 PM
ஒப்பீடு தப்பு..
தலைப்போ
தப்பான ஒப்பீடு..

தப்பான தலைப்போ
தப்பாமல் நீ போ..
எனச் செப்ப,
வந்தேன்... படித்தேன்...
வாழ்க்கையின் ஒரு படி!

Hega
02-03-2012, 09:43 PM
தப்பான ஓப்பிடு என்றதனால் தான் இந்த பக்கம் எட்டிபார்க்க தோன்றியதல்லவா..

அதனால்தான் அப்படி தலைப்பிட்டேன்னு வைத்துக்கங்களேன்..

இப்ப உங்களுக்கே தலைப்போடு, கருத்தையும் ஒப்பிட்டு பார்க்க தோணுதில்லையா..
அப்ப அது தப்பான ஓப்பீடா.. ஒப்பீட்டில் தப்பா...:nature-smiley-006:

ஜானகி
02-03-2012, 11:32 PM
போட்டாயே ஒரு போடு....! ஒப்பீடே இல்லை....

ஓவியன்
03-03-2012, 06:50 AM
ஓப்பீடில்லா உன் வாழ்க்கை உயர்ந்ததென உணரவைத்த இந்த கவிதைக்கேது ஒப்பீடு..!!

மனம் நிறைந்த பாராட்டுக்கள் Hega..!! :)

M.Jagadeesan
03-03-2012, 12:43 PM
உன்னுடைய ஊதியத்தைப் பிள்ளையின் கல்வியை
கொண்டவளின் நற்குணத்தைப் பேரழகை -என்றுமே
அண்டை அகத்தார்கண் ஒப்பீடு செய்யாதீர்
சண்டை வந்திடுமே காண்.

கௌதமன்
03-03-2012, 01:57 PM
உன்னுடைய ஊதியத்தைப் பிள்ளையின் கல்வியை
கொண்டவளின் நற்குணத்தைப் பேரழகை -என்றுமே
அண்டை அகத்தார்கண் ஒப்பீடு செய்யாதீர்
சண்டை வந்திடுமே காண்.

வெண்பாவில் ஒரு பண்(பா)
பாராட்டுகள்....

Dr.சுந்தரராஜ் தயாளன்
03-03-2012, 02:05 PM
உன்னுடைய ஊதியத்தைப் பிள்ளையின் கல்வியை
கொண்டவளின் நற்குணத்தைப் பேரழகை -என்றுமே
அண்டை அகத்தார்கண் ஒப்பீடு செய்யாதீர்
சண்டை வந்திடுமே காண்.
மிக அருமையான நேரிசை வெண்பா. ஆயினும் கடைசி அடியில் நேரோன்று ஆசிரியத் தளை வந்து செப்பலோசையைக் கேடுக்கிறதே ஐயா.
''சண்டை வருமன்றோ சார்ந்து'' என்று இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்குமே. மோனையும் சீர்படும் அல்லவா ஐயா ?

M.Jagadeesan
03-03-2012, 02:43 PM
உங்கள் கருத்து உண்மைதான் . எனக்கு வெண்பா எழுதிப் பழக்கமில்லை. ஈற்றடியில் தவறு நேர்ந்துவிட்டது. தாங்கள் குறிப்பிட்டதுபோல் , " சண்டை வருமன்றோ சார்ந்து " என்றிருந்தால் சரியாக இருக்கும். நன்றி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
11-03-2012, 07:27 AM
ஒப்பீடு தப்பாக ஒப்பிடுதல் காரணமாம்
சப்பென்ற வாழ்வில் சலிப்பு

மிகவும் நன்று ...ஹெகா அவர்களே :)

சிவா.ஜி
12-03-2012, 06:12 PM
தப்பான ஒப்பீடு எப்போதும் ஒப்பாது.

மழையை உன்னோடு ஒப்பிடு....ஜாதி, மத, இன, மொழி, நாடு, கண்டம் என பேதமின்றி பொழிவதைப்போல....சமதர்மமாய் நடந்து....நல்ல தலைவனாய் ஆகிக்காட்டவேண்டுமென ஆவல் உண்டாக்கும்...

அதைவிட்டு அடுத்தவீட்டுக்காரரின் லஞ்சப்பணத்தில் வாங்கிய காரைப்பார்த்து, கார் வாங்க உழைக்க வேண்டுமென நினைக்காமல்....அவனது லஞ்சப்பணத்தை தன் சம்பளத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தப்பப்பா.....!!!

அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள் தங்கையே.

தாமரை
13-03-2012, 03:18 AM
ஒப்பீடு தப்பு..
தலைப்போ
தப்பான ஒப்பீடு..

தப்பான தலைப்போ
தப்பாமல் நீ போ..
எனச் செப்ப,
வந்தேன்... படித்தேன்...
வாழ்க்கையின் ஒரு படி!

தப்பான ஓப்பிடு என்றதனால் தான் இந்த பக்கம் எட்டிபார்க்க தோன்றியதல்லவா..

அதனால்தான் அப்படி தலைப்பிட்டேன்னு வைத்துக்கங்களேன்..

இப்ப உங்களுக்கே தலைப்போடு, கருத்தையும் ஒப்பிட்டு பார்க்க தோணுதில்லையா..
அப்ப அது தப்பான ஓப்பீடா.. ஒப்பீட்டில் தப்பா...:nature-smiley-006:

தப்பு இல்லாவிட்டால்
ஒப்பு இல்லை
ஒப்பு இல்லாவிட்டால்
தப்பு இல்லை

ஒப்பும் தப்பும் ஒரே காசுதான்..(நாணயத்தின் இரு பக்கங்கள்)

சிப்பிக்குள் நல் முத்து போல் சிறப்புகள் - ஒப்பு..
சிப்பி தாழ்வு முத்து உயர்வென்பதோ - தப்பு..

இதைப் படிச்சிட்டு அப்புறம் தலைப்பைப் பாருங்கள்.. (முக்கியமா அமரன் நீங்கதான் படிக்கணும்) சரியாகப் பொருந்தும்.

ஹேகா! அமரன் புதிதாக கல்யாணமானவர். தலைப்பைப் (முந்தானை) பார்த்து அலையறார்னு சொல்லி குதூகலமான குடும்பத்தில கும்மி அடிச்சிட்டீங்களே!!!

ஆதவா
13-03-2012, 05:21 AM
ஒரு அம்மா,
பையனைப்பாத்து
கவிதை
பாடுகிறதே...
ஆச்சரியக்குறி

பெரும்பாலான அம்மாக்கள் அல்லது அப்பாக்கள் ஒழுங்கா படிக்காத பையன்கிட்ட “அவனப்பாரு, எப்படி மார்க்கு வாங்கியிருக்கான்னு” என்று சொல்வார்கள், எனக்கும் அப்படி நடந்தது. அது எவ்வளவு பெரிய தவறாகவேண்டுமானாலும் ஆகலாம்..

ஆறுநூறுகோடி மனிதர்களும் வேறுவேறானவர்கள், ஒருவரைப்போல ஒருவர் சிந்திப்பதில்லை, ஒருவர் போல ஒருவர் இருப்பதை எதிர்பார்ப்பது தப்புத்தான்...

கவிதையும் பின்னூட்டங்களும் நன்று.
ஜெகதீசன் பின்னியெடுத்திட்டார்..பாவில்...

அருமை நண்பர்களே.

கண்மணி
13-03-2012, 05:31 AM
ஒப்பீடு = ஒப்பு + ஈடு

ஒப்பு - ஒரே தன்மையான
ஈடு - இணையான

இரண்டுக்கும் ஒரே மாதிரியான அர்த்தம்தான். ஒப்பீடு என்னும் போது இரண்டையும் சமப்படுத்த ஒற்றுமையைத்தானே பார்க்கணும். ஏன் வேறுபடுத்திப் பார்க்கிறோம்?

இப்படித்தான் ஒப்பீடு தப்பாகப் போயிருச்சுங்க...

ஆதவா உங்க ஏக்கம் எங்களுக்கு நல்லாவே புரியுதுங்க.

பெண்கள் நல்லாப் படிக்கிறாங்க. - உண்மை 1.
நீங்க சரியாகப் படிக்கலை - உண்மை 2

உங்க அம்மா அப்பா உங்ககிட்ட அந்தப் பொண்ணைப் பாரு எப்படி மார்க் வாங்கறான்னு.. இந்தப் பொண்ணைப் பாரு எப்படி மார்க் வாங்கறான்னு சொல்லி இருக்காங்க - யூகம் 1

நீங்க அம்மா அப்பா பேச்சை வேத வாக்கா எடுத்துகிட்டு அந்தப் பொண்ணையும், இந்தப் பொண்ணையும் பார்த்து மார்க் போட ஆரம்பிச்சு இருக்கீங்க. - யூகம் 2

இப்போ அதே அப்பா அம்மா அவங்க சொன்ன அதையே நீங்க செய்ததுக்கும் திட்டறாங்க. - யூகம் 3

இந்த வேதனையைத்தான் இங்க கொட்டியிருக்கீங்க. சரியா?

ஆதவா
13-03-2012, 05:54 AM

நீங்க சொல்றது தப்பீடு!! (அப்படின்னு சொல்வேன்னு நினைச்சீங்களா?)

உண்மை 1 - பெண்கள் நல்லா படிக்கிறாங்கங்கறத ஒத்துக்கிறத விட, ஆண்கள் சரியா படிக்கலன்னு ஒத்துக்கிறேன்.
உண்மை 2 - படிப்பு நமக்கு சரியா அமையல...

யூகம் 1 - பெண் வாசமே இல்லாத ஸ்கூலுங்க அது.. அஞ்சு வருஷம் காய்ஞ்சி போயிருந்தோம், நல்லவேளையா, யூகம் 1 ரொம்ப தப்பா இருக்கு, ஒருவேளை சரியா இருந்திருந்தா அந்த பொண்ணும் இந்த பொண்ணும் அடுத்த வருஷம் மார்க்கே வாங்கியிருக்காது!!! :)

யூகம் 2 - :icon_03:

யூகம் 3 :mad:

விடுங்க அம்மணி, என்னதான் சப்ப கட்டினாலும் உண்மை, வெளியே துருத்தி நின்னுடுது!!

சுகந்தப்ரீதன்
13-03-2012, 07:00 AM
இந்த வேதனையைத்தான் இங்க கொட்டியிருக்கீங்க. சரியா?கண்மணி... உனக்கு கம்மியா மார்க் போட்டாங்கிற கடுப்புல... இப்படி சின்ன பையனை சபையில குந்தவச்சி கும்மியடிக்கறது எனக்கு சரியாபடலை..?!:icon_nono:

Hega
25-03-2012, 08:42 PM
போட்டாயே ஒரு போடு....! ஒப்பீடே இல்லை....

நன்றி ஜானகி அம்மா

Hega
25-03-2012, 08:42 PM
ஓப்பீடில்லா உன் வாழ்க்கை உயர்ந்ததென உணரவைத்த இந்த கவிதைக்கேது ஒப்பீடு..!!

மனம் நிறைந்த பாராட்டுக்கள் Hega..!! :)

மிக்க மகிழ்ச்சி ஓவியன் அவர்களே..

Hega
25-03-2012, 08:45 PM
உன்னுடைய ஊதியத்தைப் பிள்ளையின் கல்வியை
கொண்டவளின் நற்குணத்தைப் பேரழகை -என்றுமே
அண்டை அகத்தார்கண் ஒப்பீடு செய்யாதீர்
சண்டை வந்திடுமே காண்.

ஆஹா மிக அருமை ஜெகதீசன் ஐயா..

Hega
25-03-2012, 08:45 PM
ஒப்பீடு தப்பாக ஒப்பிடுதல் காரணமாம்
சப்பென்ற வாழ்வில் சலிப்பு

மிகவும் நன்று ...ஹெகா அவர்களே :)

நன்றி ஐயா..

Hega
25-03-2012, 08:47 PM
தப்பான ஒப்பீடு எப்போதும் ஒப்பாது.

மழையை உன்னோடு ஒப்பிடு....ஜாதி, மத, இன, மொழி, நாடு, கண்டம் என பேதமின்றி பொழிவதைப்போல....சமதர்மமாய் நடந்து....நல்ல தலைவனாய் ஆகிக்காட்டவேண்டுமென ஆவல் உண்டாக்கும்...

அதைவிட்டு அடுத்தவீட்டுக்காரரின் லஞ்சப்பணத்தில் வாங்கிய காரைப்பார்த்து, கார் வாங்க உழைக்க வேண்டுமென நினைக்காமல்....அவனது லஞ்சப்பணத்தை தன் சம்பளத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தப்பப்பா.....!!!

அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள் தங்கையே.

நன்றி சிவா அண்ணா..

Hega
25-03-2012, 08:50 PM
தப்பு இல்லாவிட்டால்
ஒப்பு இல்லை
ஒப்பு இல்லாவிட்டால்
தப்பு இல்லை

ஒப்பும் தப்பும் ஒரே காசுதான்..(நாணயத்தின் இரு பக்கங்கள்)

சிப்பிக்குள் நல் முத்து போல் சிறப்புகள் - ஒப்பு..
சிப்பி தாழ்வு முத்து உயர்வென்பதோ - தப்பு..

இதைப் படிச்சிட்டு அப்புறம் தலைப்பைப் பாருங்கள்.. (முக்கியமா அமரன் நீங்கதான் படிக்கணும்) சரியாகப் பொருந்தும்.

ஹேகா! அமரன் புதிதாக கல்யாணமானவர். தலைப்பைப் (முந்தானை) பார்த்து அலையறார்னு சொல்லி குதூகலமான குடும்பத்தில கும்மி அடிச்சிட்டீங்களே!!!

அடடா.. ஆமாங்க தாமரை அவர்களே.

இப்போது எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாமே தப்பா தான் தெரிகிறது. அட தலைப்பை சொன்னேனாக்கும்.

கீதம்
26-03-2012, 01:48 AM
ஒப்பீடு தப்பென்று
செப்பேடு சொன்னாலும்
தப்போடு தான் பார்ப்போம்
தப்பென்று நாம் உணரோம்
சப்பென்ற வாழ்க்கைக்கு
ஒப்பீடும் தப்பென்று
செப்புவோர் சொல்கூட
தப்பாக போய்விடும.

சிப்பிக்குள் நல்முத்துப்
போல் சிறப்புகள்
மறைவிலே...
நிகரில்லை எவருமே
உனக்கினி உலகிலே
உணர்ந்தபின் செப்பாதே
அடுத்ததே உயர்வென்று.

ஒப்பீடு தப்பென
தப்பாது உரைத்த
தப்பான ஒப்பீட்டுக் கவியைத்
தப்பாமல் நானும் ஒப்புகிறேன்!
ஒப்புக்குச் செப்பவில்லை,
உண்மையே!
கவிக்கரு மிகத் திண்மையே!

பாராட்டுகள் ஹேகா.

கலைவேந்தன்
02-04-2012, 02:26 PM
ஒப்பீடு தப்பில்லை. தப்பான ஒப்பீடுதான் தப்பு.

சிங்கத்தை வீரத்துக்கு ஒப்பிடலாம் எந்த வீரனுக்கும். இது சரி.
அதே சிங்கம் ஒரு மானைக் குதறி தின்னும் நிலையை அந்த வீரனுடன் ஒப்பிட்டால் அது வீரமுண்மையைக் குறிப்பிடாது. ஈரமின்மையைக் குறிக்கும்.

நல்ல கவிதைக்கு நன்றி ஹேகா.