PDA

View Full Version : சுகமான சுமைகள்.



M.Jagadeesan
01-03-2012, 03:56 AM
மண்ணுக்கு மரமும் விண்ணுக்கு நிலவும்
கண்ணுக்கு மையும் பெண்ணுக்கு நகையும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

கடலுக்கு படகும் உடலுக்கு உயிரும்
மடலுக்கு எழுத்தும் மனதுக்கு நினைவும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

மலருக்கு வண்டும் மாரிக்கு நீரும்
நிலவுக்குக் கறையும் நீருக்கு மீனும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

பிணக்கு ஆயிரம் வந்த போதும்
எனக்கு நீயும் உனக்கு நானும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
01-03-2012, 05:55 AM
மிகவும் அருமை...கவிதை மிக நன்று :)

நகமும் சதையும்போல் நாமிருந்தால் ஏதும்
சுகமான நற்சுமையே தான்

M.Jagadeesan
01-03-2012, 08:48 AM
DR . தயாளன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

தமிழ்கவிநேசன்
01-03-2012, 09:26 AM
சுகமான சுமைகள் கொடுத்த ஜெகதீசனுக்கு நன்றி ஒரு கோடி
கவிதைக்கு ஒரு மகிழ்ச்சி கொடி

jayanth
02-03-2012, 02:57 AM
[QUOTE=M.Jagadeesan;542699]மண்ணுக்கு மரமும் விண்ணுக்கு நிலவும்
கண்ணுக்கு மையும் பெண்ணுக்கு நகையும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

QUOTE]

அருமை!!! அருமை!!!

M.Jagadeesan
02-03-2012, 03:38 AM
தமிழ்க்கவிநேசன் , ஜெயந்த் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.