PDA

View Full Version : கடைசிக் காலம்.......



Nanban
23-12-2003, 02:56 AM
கடைசிக் காலம்.......


வேர்கள் மரணித்து விட்டன

பூமியின் ஆழத்தில்....

மீண்டும் துளிர்ப்பதில்லையென

இலைகள் கொட்டிப் போய்விட்டன -

ஆகாயத்தைத் துழாவிய கொப்புகளிலிருந்து....

தாழ்ந்த கிளை ஒன்றில்

குழந்தைகள் தங்கள்

ஊஞ்சலைக் கட்டியிருக்கின்றன.

சில பாம்புகளும், பறவைகளும்

ஒருவர் மீது ஒருவர் மரியாதை கொண்டு

என் பொந்துகளில் வாழுகின்றன.

குறிப்பிடத்தக்க அளவிலான காதலர்கள்

காலாகாலாத்துக்கும் அழியாதவாறு

தங்கள் பெயர்களை

தோண்டி வைத்திருக்கின்றனர்.

என் பருத்த தூர்களின் அடியில்

தாங்கள் பகிர்ந்து கொண்ட

முத்தங்களைக் கூட

சில காதலர்கள் ஒளித்து வைத்திருக்கின்றனர்.

உயரமாக நிற்கும் நான்

என்னைச் சுற்றி நிகழும்

அனைத்தையும்

பார்த்துக் கொண்டிருக்கிறேன் -

மரணம் வெகு அருகில் நின்று

என்னை அலைக்கழிக்கும் பொழுதில் கூட.

யாரும் அறியவில்லை,

அசைவற்ற நிலையில்

கொஞ்சம் கொஞ்சமாக

நான் மரணம் அடைந்து கொண்டேயிருக்கிறேன் என்று.

கோபமில்லை;

பழி வாங்கும் வஞ்சமுமில்லை.

அவர்களுக்கு

இதுதான் நேரம் -

வாழ்வின் இளமையை அனுபவித்து வாழ.

எனக்கும் இதுதான் நேரம்

முழுமையாக வாழும்படி

அவர்களை உற்சாகமூட்ட.

எனக்குத் தெரியும் -

எந்த நேரத்திலும்

ஒரு கோடாரியின் கூரானமுனையினால்

நான் வெட்டப்பட்டு விடுவேன் என்று.

இளசு
24-12-2003, 01:12 AM
இழப்பு பற்றி இதே சாயலில் ஒரு கவிதை உங்களுடையது உண்டல்லவா நண்பன்?

இதில் வேறு சில பரிமாணங்கள்..

பாராட்டுகள்.

இக்பால்
24-12-2003, 04:13 AM
:)

Nanban
24-12-2003, 06:38 AM
உண்டு.

நன்றி இளசு. பழையதை கொஞ்சம் அழகு படுத்திப் பார்க்க வேண்டும் என்ற நப்பாசை தான்.

புன்னகைத்துப் போன இக்பாலுக்கும் என் :lachen001: கூடிய நன்றிகள்.........

இக்பால்
24-12-2003, 08:18 AM
நண்பனே! புன்னகைத்தது உண்மைதான்.

ஆனால் போகவில்லை. இங்கேதான் இருக்கிறேன். :)

Nanban
24-12-2003, 09:18 AM
அதுதான் காட்சி உண்டு, கவிதை உண்டாவில் பூரித்து நிற்கிறீர்களே.........

இக்பால்
24-12-2003, 10:25 AM
என் உறவுகள் என் வீட்டில் பார்த்தால் எனக்கு பூரிப்புதானே!!! :)

rika
24-12-2003, 12:45 PM
அழகான காட்சியியலை கவிதையாக்கியிருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்..

முத்து
24-12-2003, 12:50 PM
அருமையான கவிதை ... காட்சி ..
நன்றி நண்பன் அவர்களே ...

Nanban
29-12-2003, 02:55 AM
முத்துவுக்கும், ரிகாவுக்கும் நன்றி.........

சேரன்கயல்
29-12-2003, 03:18 AM
இந்த மரத்தைப் போலத்தான் சில மனிதர்களது வாழ்க்கையும்...
அந்திமகாலத்து அனாதையான பொழுதுகளில் இப்படித்தான் மௌனத்தில் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் அந்த மரங்கள்...

காட்சியை கண்முன் நிறுத்திய கவிதை...கவிதையாய் விரிகின்ற காட்சி...பாராட்டுக்கள் நண்பன்...

Nanban
29-12-2003, 03:21 AM
கருத்துகளுக்கு நன்றி, சேரன் கயல்.........

Mano.G.
29-12-2003, 10:08 AM
இந்த மரத்தைப் போலத்தான் சில மனிதர்களது வாழ்க்கையும்...
அந்திமகாலத்து அனாதையான பொழுதுகளில் இப்படித்தான் மௌனத்தில் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் அந்த மரங்கள்...

காட்சியை கண்முன் நிறுத்திய கவிதை...கவிதையாய் விரிகின்ற காட்சி...பாராட்டுக்கள் நண்பன்...

சில அல்ல பலரது முதுமைகாலம் இப்படித்தான் போய்கொண்டிருக்கிரது
நமது காலம் எப்படியோ?

மனோ.ஜி

Nanban
31-12-2003, 04:16 AM
முதுமையை கசந்து கொள்வதாக நான் எழுதவில்லை. ஆர்ப்பரிக்கும் இளமையை ஊக்குவிக்கும் நல்ல முதுமையாகத் தான் நான் எழுதியிருப்பதாக நினைக்கிறேன். ஆனால், இது எல்லோருக்கும் வயதான காலத்தின் பயம்மாகத் தான் கண்களில் படுகிறது. தன் பிள்ளைகளிடம் அன்பு பாராட்டி, நேசத்துடன் வளார்த்து வந்தால், முதுமையில் இந்தத் தனிமை தவிர்க்கப்படலாம் என்று கருதுகிறேன்.......

இக்பால்
31-12-2003, 04:24 AM
தன் பிள்ளைகளிடம் அன்பு பாராட்டி, நேசத்துடன் வளார்த்து வந்தால், முதுமையில் இந்தத் தனிமை தவிர்க்கப்படலாம் என்று கருதுகிறேன்.......


உண்மைதான் நண்பனே!

Nanban
12-01-2004, 06:39 AM
தன் பிள்ளைகளிடம் அன்பு பாராட்டி, நேசத்துடன் வளார்த்து வந்தால், முதுமையில் இந்தத் தனிமை தவிர்க்கப்படலாம் என்று கருதுகிறேன்.......


உண்மைதான் நண்பனே!

உண்மைகளைக் கண்டு கொள்ள வெகு சிலரால் தான் முடியும்........

(இக்பால் அவர்களே இது எனது 2000மாவது பதிப்பு...... உங்களுடன் பேசுவதாக அமைந்தது தற்செயல் என்றாலும், மகிழ்வளிக்கிறது......)

இக்பால்
12-01-2004, 06:56 AM
நான் எதிர்பார்க்கவில்லை நண்பனே. மனதில் ஒரு மிகுந்த மகிழ்ச்சி.
நான் உங்களுடைய 2000 வது பதிவை எதிர்பார்த்து அரை மணி
நேரமாக காத்திருந்தேன். உங்களுக்கும் ஏதோ இது தெரிந்து
இருக்கிறது. ஆச்சரியம்தான். மீண்டும் மகிழ்ச்சி. உங்கள் பதிவு
வந்து 5 நிமிட வித்தியாசத்தில் என் பதிவு வந்து விட வேண்டும்
எனவும், யாரும் அதற்கு முன் கொடுத்து விடுவார்களோ என ஒரு
திகிலுடன் இருந்தேன். ஏதோ என் மனசுக்கு அப்படி தோன்றியது.
தவறாக எதுவும் எடுத்துக் கொண்டு விட வேண்டாம்.
-அன்புடன் இக்பால்.

Nanban
12-01-2004, 07:00 AM
நன்றி உங்கள், உங்கள் அன்பிற்கும் அக்கறைக்கும்.....

சேரன்கயல்
12-01-2004, 07:03 AM
உங்களுக்கு அடுத்து நாந்தான் நண்பனை வாழ்த்தினேன் இக்பால் அண்ணே...
மனிதரின் அசத்தல் பதிவுகளும், நட்பும் இன்னும் வளர உங்களோடு இணைந்து வாழ்த்துகிறேன்...

Nanban
12-01-2004, 07:09 AM
நன்றி, சேரன்கயல்.... உங்களிடமிருந்து கிடைத்திருக்கும் மூன்றாவது வாழ்த்து இது......... ஓரே நாளில்........ நன்றி..........

karikaalan
12-01-2004, 07:10 AM
நண்பன் குறிப்பிட்டுள்ள மரம், நன்றாக வாழ்ந்து, வழிகாட்டி பிறகு தனது முடிவு காலம் நோக்கி நிற்கிறது.

இங்கே முனிசிபாலிட்டிகாரர்கள் சாலையோர மரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறார்களே, என்ன சொல்வது.

வாழ்த்துக்கள் நண்பரே. ரசித்தேன்.

===கரிகாலன்

Nanban
12-01-2004, 07:12 AM
நன்றி, கரிகாலன் அவர்களே........

முனிசிபாலிடிகாரர்கள் கையில் இருந்து தப்ப, முதுமரங்கள் காடு நோக்கிப் போகத் தான் வேண்டும், இல்லையா?

நன்றிகள்......... மீண்டும்

Mano.G.
12-01-2004, 09:46 AM
தன் பிள்ளைகளிடம் அன்பு பாராட்டி, நேசத்துடன் வளார்த்து வந்தால், முதுமையில் இந்தத் தனிமை தவிர்க்கப்படலாம் என்று கருதுகிறேன்.......


உண்மைதான் நண்பனே!

உண்மைகளைக் கண்டு கொள்ள வெகு சிலரால் தான் முடியும்........

(இக்பால் அவர்களே இது எனது 2000மாவது பதிப்பு...... உங்களுடன் பேசுவதாக அமைந்தது தற்செயல் என்றாலும், மகிழ்வளிக்கிறது......)

நண்பர்களே

பெற்றோர்களால் அன்புடன் பாசம் காட்டி வளர்க்க பட்ட குழந்தைகள்
தங்கள் எதிர்பார்ப்பை வைத்து கொண்டே பெற்றோரை
பராமரிகின்றனர் (கவனித்து) கொள்கின்றனர் ( சொத்தில் பங்கு)

இந்த கருத்து சற்று நெகட்டீவாக இருக்கும் ஆனால்
இதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

மனோ.ஜி

Nanban
12-01-2004, 10:28 AM
இது யதார்த்தம். அதிலும் குறிப்பாக போட்டிகள் நிறைந்த உலகில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், வசதி இல்லாத பெற்றோர்களை யார் ஏற்பது என்பது பெரும் பிரச்னை தான். பெற்றோர்களும் தங்கள் முதுமைக்கென, சிறிதாவது பொருள் சேர்த்து வைத்துக் கொள்வது நலமாகும் - பெற்ற ஓரே காரணத்தால், எங்களைச் சுமந்தே ஆக வேண்டும் என்று பிள்ளைகளின் மீது முழு பாரத்தையும் சுமத்தாமல், கொஞ்சமேனும் - உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அளவிற்காவது ஒரு நிரந்தர வருமானம் வரும் வகையாய் ஏதாவது செய்து கொள்வது நலம். உயிலின் என்ந்த ஒரு நிலையிலும், பிரிவினை என்பது தன் காலத்தின் பின்னேயே நிகழ வேண்டும் என்ற அளவில் பிடி வைத்துக் கொள்வதும் நல்லது....... நம்பிக்கை என்பது தன் சொந்த பலத்தை இழக்க வேண்டும் என்ற அளவிற்குப் போய்விடக்கூடாது.

Mano.G.
12-01-2004, 11:05 PM
முதுமை அடைந்த பெற்றோர்கள் (நாளை நமக்காக) இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் பங்கு போடும் பொழுது தாங்களது பங்காக
ஒரு பங்கை வைத்துகொள்வது நல்லது , அந்த சிறு பங்குக்காக கடைசிகாலங்களில் பெற்றோர்கள் சிரமம் இல்லாமலும் முதியோர் இல்லாங்களுக்கு போகாமலும் வாழலாமே.

மனோ.ஜி