PDA

View Full Version : பெண் ..!



vasikaran.g
24-02-2012, 02:46 AM
திருமணத்தின் மூலம் உறவாகி ,
சித்திரையில் வாரா நித்திரையால் ,
கைபிடித்த கணவன் அளித்த
லட்சத்து சொச்ச வித்ததினால்,
வேதனையை தனதாக்கி ,
இன்பத்தை பொதுவுடமையாக்கி ,
திரவத்தை திடமாக்கி ,
உணர்ச்சியை உயிராக்கி ,
உதிரத்தை உணவாக்கி ,
வயிற்றை உறவிடமாக்கி ,
உலகமஹா அறிவியலையே உருவாக்கி ,

ஓர் உயிரில் ஓர் உயிரை உருவாக்கி ,
ஒன்பது மாதத்தில் உருவத்தையும் உருவாக்கி,
துன்பத்தையும் துயரத்தையும் தனதாக்கி,
தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும்
பெருமையையும் பொறுமையையும் உருவாக்கி ,
உவகையையும் மழலையாக்குவாள்,
மனைவி எனும் உன்னதமான பெண் .!

தாயாகி தங்கையாகி குடும்ப தலைவியாகி ,
மாமியாராகி மைத்துனி யாகி
அண்ணியாகி அக்காள், மகளாகி
ஆயிரம் உருவம் எடுத்து வந்தாலும்
அமைதியான சுமைதாங்கி
அவளே அல்லவா ...

வசிகரன்.க

ஜானகி
24-02-2012, 03:58 AM
பெண்ணின் பெருமையை உணர்ந்து போற்றியதற்கு நன்றி...பெண் இனத்தின் சார்பாக...

அமரன்
24-02-2012, 05:22 AM
நன்றே சொன்னீர்கள்.. பாராட்டுகள்.

பெண்ணைப் பாட வேண்டிய நிலையிருப்பது வேதனை.

vasikaran.g
25-02-2012, 02:38 AM
பெண்ணின் பெருமையை உணர்ந்து போற்றியதற்கு நன்றி...பெண் இனத்தின் சார்பாக...
நன்றி ஜானகி ..

vasikaran.g
25-02-2012, 02:38 AM
நன்றே சொன்னீர்கள்.. பாராட்டுகள்.

பெண்ணைப் பாட வேண்டிய நிலையிருப்பது வேதனை.
நன்றி அமரன் ..

கீதம்
19-03-2012, 12:31 AM
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பார்கள்.

நீங்களோ ஆகுவதும் பெண்ணே ஆக்குவதும் பெண்ணே என்றுரைக்கிறீர்கள்.

ஆக்கிய கவிதைக்கும் ஆகி வந்த கருவுக்கும் பாராட்டுகள் வசீகரன்.

vasikaran.g
25-03-2012, 10:58 AM
நன்றிங்க கீதம் ..