PDA

View Full Version : ஆதலினால் காதல்



inban
23-02-2012, 03:43 PM
கொடுக்க முடியாமல் போன
சீர்வரிசைக்காய்
கொடுமைப்படும்
அக்கா

வாலிபம் கடந்தும்
விவாகமின்றிவாடும்
அண்ணன்

ஆஸ்த்துமாவின்
அகோரப்பிடியில்
அவதிப்படும்
அம்மா

குதப்பும் வெற்றிலைப்போல
குடும்பச் சிக்கலில்
குதறப்படும்
அப்பா

பருவத்தின் வாயிலில் நின்று
பயமுறுத்தும்
தங்கை

எண்ணிப்பாத்துவிட்டு
கதவுதட்டிய காதலுக்கு
இருதயத்திலேயே
கல்லறைகட்டிவிட்டேன்.

சிவா.ஜி
23-02-2012, 05:47 PM
வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா....இதுக்கே பயந்து காதலைத் துறக்கிறவன்....காதலனா?

அப்புறம் எதுக்கு காதலி? கையாலாகதவனுக்கு காதல் எதற்கு?

inban
24-02-2012, 12:26 AM
வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா....இதுக்கே பயந்து காதலைத் துறக்கிறவன்....காதலனா?

அப்புறம் எதுக்கு காதலி? கையாலாகதவனுக்கு காதல் எதற்கு?

நண்பரே எல்லாமும் சுலபம்தான் பேசிக்கொண்டிருக்கும்வரை
நடைமுறை ரொம்ப சிக்கல் நிறைந்தது

காதல் எப்போதும் சுயனலமானதல்ல.
இன்றைக்கும் பெரும்பாலான அடித்தட்டு குடும்ப வாலிபர்கள்
தங்களின் தேவைகள் பலவற்றை துறந்து வாழத்தான் செய்கிறார்கள்

அவ்வாறு துறந்து வாழ்வதென்பது புறமுதுகிட்டு ஓடுவதல்ல
தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவு உலக நவீன கலாச்சாரத்தோடு இணைகின்ற அளவுக்கு வளர்ந்து விட்டது உண்மைதான்

ஆனால் நான் குறிப்பிடுவது பெருமான்மைக்கு
இங்கு காதலை நான் சிறுமை படுத்தவோ அல்லது அதன் முக்கியத்துவம் குறைக்கவோ குறிப்பிடவில்லை ஒரு வாலிபனின் குடும்பப் பொறுப்புணர்வை குறிப்பதற்காகவே இவ்வாறு எழுதினேன் நன்றி

M.Jagadeesan
24-02-2012, 12:55 AM
ஆமாம் ! இன்றைய காதல் மிகவும் சிக்கலானதுதான்! சிரமங்களை வெகு அழகாக காட்டியுள்ளீர்கள் ! வாழ்த்துக்கள்!

inban
24-02-2012, 02:46 AM
ஆமாம் ! இன்றைய காதல் மிகவும் சிக்கலானதுதான்! சிரமங்களை வெகு அழகாக காட்டியுள்ளீர்கள் ! வாழ்த்துக்கள்!

நன்றி நண்பரே....

பிரேம்
25-02-2012, 12:32 AM
காதல் தானே...அது ஒரு பக்கம் இருந்தால் தான் என்ன..? குடும்ப சூழலுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்..? (அந்த பொண்ணு உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்)

inban
25-02-2012, 01:15 AM
காதல் தானே...அது ஒரு பக்கம் இருந்தால் தான் என்ன..? குடும்ப சூழலுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்..? (அந்த பொண்ணு உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்)

கிராமத்தில் இன்னும் கூட காதல் செய்து கல்யாணம் செய்வதென்பது சிரமமானதுதான்.
ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவதற்கு ஒப்பானது அது.
அதுவும் நமது காதல் சாதி கடந்து இருக்குமானால் சொல்லவே வேண்டியதில்லை.
அப்புறம் அந்தக்குடும்பம் அவ்வளவுதான்.

vasikaran.g
25-02-2012, 02:48 AM
இன்பன் கவிதை நல்லா இருக்கு ஆனா ரொம்ப சோகமா இருக்கு .

Dr.சுந்தரராஜ் தயாளன்
04-04-2012, 05:12 AM
தானாக வந்த காதலை தட்டிக்கழிக்க வேண்டிய நிலையில் இருந்தவர்களை நானும் பார்த்து மனம் வருந்தியதுண்டு. அந்த வகையில் இன்பனின் கவிதை எதார்த்தமான ஒன்று என்பது என் கருத்து. வருத்தபடாதீர்கள் இன்பன்.:)

vasikaran.g
08-04-2012, 10:48 AM
கவிதை நல்லா இருக்கு ..