PDA

View Full Version : கொடு எனக்கு!



inban
21-02-2012, 02:50 PM
எது என்
உயிர் கரையை வளப்படுத்துமோ
அதுகொடு எனக்கு

எந்தக் கனி இதழ்
என்னைக் கம்பனாக்கிடுமோ
அதுகொடு எனக்கு

எது என்
ஆண்மைக்கு அழகு சேர்க்குமோ
அதுகொடு எனக்கு

எந்த வார்த்தையில்
எனதுப் பிறவி பெருமைப்படுமோ
அதுகொடு எனக்கு

எந்த வியர்வை
வைரத்தைவிடவும்
உயர்வானதாகிடுமோ
அதுகொடு எனக்கு

கொடு எனக்கு!

பசித்திடும் பிள்ளைக்கு
பால்புகட்டும் தாய்போல
யாவும்
கொடுஎனக்கு

நான்
நிறையக் கொடுக்க வேண்டிஇருக்கிறது
நம் கவிதைக்கு