PDA

View Full Version : முதிர்கண்ணன்



"பொத்தனூர்"பிரபு
21-02-2012, 08:52 AM
முதிர்கண்ணன் ...






http://4.bp.blogspot.com/-pqFzY5zBT2k/T0G-_ZFekCI/AAAAAAAAB_4/IE_rIz2_U3w/s400/Prabu-a+man+alone.JPG (http://4.bp.blogspot.com/-pqFzY5zBT2k/T0G-_ZFekCI/AAAAAAAAB_4/IE_rIz2_U3w/s1600/Prabu-a+man+alone.JPG)

தங்கைக்கு மணமான பின்னே - எனக்குத்
தாரம் பார்க்கத் தயாரானோம்
ராகுவோ கேதுவோ எழரையோ
எதுவும் பொருத்தமாகிப் போகல
செவ்வாயை வேறு சேர்த்துகிட்டு நிக்கிது....

முப்பதைத் தாண்டி வயசு
முழுமுச்சாய் ஓடுது
முதிர்கன்னியா இருந்திருந்தா - சிலர்
கவிதைக்காவது கருவாகியிருப்பேன் - கிரகம்
ஆம்பிள்ளையா பிறந்திட்டேன்
அந்த தகுதியையும் இழந்திட்டேன்




****
முதிர்கன்னிகளுக்காக நிறைய கவிதைகள் இருக்கு..ஏனோ சரியான வயதில் மணம் ஆகாத ஆண்களுக்கு என்று கவிதை அதிகம் எழுதப்படுவதில்லை.. சாதகம் உள்ளிட்ட பல காரணங்களால் திருமணம் தள்ளிப்போனாலும் பெரும்பான்மை ஆண்களுக்கு திருமணம் தள்ளிபோக குடும்ப பொருளாதார நிலையே முக்கிய காரணமாக இருக்கு. அந்த நண்பர்களுக்காக இந்த கவிதை..

http://priyamudan-prabu.blogspot.com/2012/02/100.html

Hega
21-02-2012, 09:22 AM
நல்ல சிந்தனை ..

ஆண்களுக்கு திருமணமாகிட முப்பதும், நாற்பதும் எப்போதும் தடையல்லவே சகோ.

பெண்களை போல் அவர்களுக்கான வரதட்சணை எகிறலும் எப்போதும் இல்லையே..
கொஞ்சம் வயதானால் இருக்கும் முதிர்கன்னிகளை உதிர்கன்னிகள் ஆகாமலிருக்கும்படியான வாய்ப்பும் இவர்களுக்குண்டே..

வித்தியாசமாய் சிந்தித்த்தமைக்காய் என் மனமார்ந்த பாராட்டுகள்.

கீதம்
19-03-2012, 12:27 AM
தங்கைக்கு மணமான பின்னே - எனக்குத்
தாரம் பார்க்கத் தயாரானோம்
ராகுவோ கேதுவோ எழரையோ
எதுவும் பொருத்தமாகிப் போகல
செவ்வாயை வேறு சேர்த்துகிட்டு நிக்கிது....

முப்பதைத் தாண்டி வயசு
முழுமுச்சாய் ஓடுது
முதிர்கன்னியா இருந்திருந்தா - சிலர்
கவிதைக்காவது கருவாகியிருப்பேன் - கிரகம்
ஆம்பிள்ளையா பிறந்திட்டேன்
அந்த தகுதியையும் இழந்திட்டேன்




****
முதிர்கன்னிகளுக்காக நிறைய கவிதைகள் இருக்கு..ஏனோ சரியான வயதில் மணம் ஆகாத ஆண்களுக்கு என்று கவிதை அதிகம் எழுதப்படுவதில்லை.. சாதகம் உள்ளிட்ட பல காரணங்களால் திருமணம் தள்ளிப்போனாலும் பெரும்பான்மை ஆண்களுக்கு திருமணம் தள்ளிபோக குடும்ப பொருளாதார நிலையே முக்கிய காரணமாக இருக்கு. அந்த நண்பர்களுக்காக இந்த கவிதை..

http://priyamudan-prabu.blogspot.com/2012/02/100.html

தங்கள் கவிதையின் பாடுபொருளில் எனக்கு எவ்வித எதிர்மறைக் கருத்துகளும் இல்லை. மிகச் சரியாகவே எழுதியுள்ளீர்கள். அப்படிப்பட்ட ஆண்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. அவர்கள் நிலையிலிருந்து எழுதிய கவிதைக்குப் பாராட்டுகள்.

கவிதையில் குறிப்பிட்டிருப்பது சாதகத்தை விடவும் குடும்பச் சூழலே அத்தகையவர்களை அதிகம் பாதிப்பதாய். ஆனால் கவிதையில் குடும்பச்சூழலின் சார்பில் தங்கை திருமணம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற நான்கு காரணங்களாய் ராகு, கேது, ஏழரை, செவ்வாய் இவற்றையே குறிப்பிட்டுள்ளீர்கள். இதை ஒரு ஆண்பிள்ளை நினைத்தால் மாற்றக்கூடுமே.. இதற்கும் குடும்பப் பொருளாதாரத்துக்கும் தொடர்பில்லையே..

தங்கையின் திருமணம் முடிந்தபின் அண்ணனுக்கு என்பது பொதுவில் உள்ள நடைமுறை. அண்ணனின் திருமணம் தள்ளிப்போக இது ஒரு பெரிய காரணமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவேண்டுமெனில் தங்கைகளின் எண்ணிக்கை அதிகமாயிருக்க வேண்டும் அல்லது தங்கையின் திருமணம் சாதகக் கோளாறால் தடைப்பட்டுக்கொண்டே இருப்பதாக இருக்கவேண்டும்.


கவிதையைக் குறை சொல்வதாய் எண்ணாதீர்கள். முன்பே குறிப்பிட்டது போல் கவிதையின் கருவோடு எனக்கு எதிர்மறைக் கருத்து இல்லை. கவிதையில் இருக்கும் கருத்துக்கும் பின்குறிப்பாய் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கும் உள்ள முரண் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-03-2012, 04:37 PM
சில ஆண்களின் பரிதாப நிலையை எடுத்துச் சொல்லியிருக்கின்றீர் . நன்று :)