PDA

View Full Version : வாழ்க்கை ஒரு வட்டம்



susibala.k
21-02-2012, 06:50 AM
வாழ்க்கை ஒரு வட்டம் அதை
வரைந்திடவே வகுக்கவேண்டும் திட்டம் !!

ஆரம்பம் மதியென்ற மையப்புள்ளி
மற்றதெல்லாம் அதனுடைய பெயர்சொல்லி !!

ஆரம் என்றொரு அளவுண்டு
அதுவே வாழ்நாளின் ஆயுள் நொடி

வேண்டுமாயின் விட்டமென்று இரட்டிப்பாகும்
வேண்டாத செயலெதுவும் செய்யாவிடின் !!

சுற்றத்தின் அளவதுவே சுற்றளவாம்
மையம் தொட்டே சுற்றிவந்தால் மனம் மகிழும் !!

பரப்பளவு என்னவென்று கண்டிடவே
பாருக்குள் அதன் புகழை அளக்க வேண்டும் !!

வட்டத்தின் எல்லைக்கோடு வளைந்திடலாம்
வளைந்தாலும் வாழிடமே சேர வேண்டும்
வளைகின்ற பாதையினை உடைக்காமல்
உள்ளமட்டும் கவனமுடன் சுற்ற வேண்டும் !!

மையத்தின் தொடர்பறுந்தால் வாடிடுமே
வடிவிழந்த நேர்க்கோடாய் நீண்டிடுமே !!!

நெடுங்கோலாய்ப் படுத்து விட்டால் நீயுமில்லை
நிமிர்ந்து நின்று பார்ப்பதற்கு நானுமில்லை
வட்டம் என்றதொரு வார்த்தை இல்லை
வாழ்க்கையும் இவ்விதம் முடிவதற்கில்லை !!

செழிப்பான சிறு வாழ்வு ஒரு வட்டம் - அதைத்
திறம்பட வாழ்வதற்கு வகுத்திடுவோம் திட்டம் !!!

arun
22-02-2012, 05:05 PM
நன்று சரியாக சொல்லி உள்ளீர்கள் பாராட்டுக்கள்

சிவா.ஜி
22-02-2012, 06:27 PM
ஆமாம்....வட்டத்துக்குள் இருப்பதால்தான் இன்பம் துன்பம் இரண்டுமே நம்மைச் சுற்றி சுற்றி வருகின்றன. வட்டத்துக்குள் இருப்பதால் அவற்றை நேரிட்டே ஆகவேண்டும். எல்லை தாண்டி போகமுடியாதே......

கருத்துள்ளக் கவிதைக்கு வாழ்த்துக்கள் பாலா.

ஜானகி
22-02-2012, 11:28 PM
புதிரான வாழ்க்கையை ஒரு சட்டத்திற்குள் அடக்கி, பொருள் உணர்த்திவிட்டீர்கள்... பாராட்டுக்கள் !

vasikaran.g
25-02-2012, 02:51 AM
நல்ல கவிதை

susibala.k
02-03-2012, 06:17 PM
பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !!!!!

அமரன்
02-03-2012, 09:40 PM
நீ.....ண்ட நாளாச்சு
இப்படி ஒரு கவி படிச்சு..

நல்ல கணக்கு... நல்ல அளவீடு..

வாமண விமர்சனம் தந்த ஜானகி அம்மாவையும் பாராட்டியே ஆக வேண்டும்

Hega
02-03-2012, 09:53 PM
வாழ்க்கையென்பதும் புதிரான வட்டம் என அழகாக சொல்லி விட்டிர்கள்

நன்று நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-03-2012, 01:28 AM
காலம் என்பது கறங்குபோல் சுழன்று கீழது மேலாய், மேலது கீழாய் மாற்றும் தண்மை....என்று படித்தது ஞாபகம் வருகிறது. நல்ல கவிதை.:)