PDA

View Full Version : இவர் யாரெனத் தெரிகிறதா??



ஆதவா
20-02-2012, 01:20 PM
இவர் யாரெனத் தெரிகிறதா??

http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/420225_236796593077674_100002420059011_527087_1704322228_n.jpg

ஓவியன்
20-02-2012, 02:19 PM
இந்தப் படத்தினை இணையத்தில் பதித்து யுவி என்கிறார்கள், ஆனால் எனக்கென்னவோ ஒட்டு வேலையாகவே தெரிகிறது...

விரைவில் யுவராஜ் நோயினை வெற்றிக் கொண்டு மீள இந்திய அணியின் மத்தியவரிசையைப் பலப்படுத்த வந்து சேரட்டும்.....

இந்தி அணியின் அண்மைய அவசிய தேவைகளில் ஒன்று யுவராஜ்..!! :)

arun
20-02-2012, 03:54 PM
தங்களது பதிப்பே தெரியவில்லை ! :)

சிவா.ஜி
20-02-2012, 04:08 PM
யுவராஜ்....கடைசியாய் அந்த இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தது தப்பாய் போய்விட்டது.

நல்ல நலத்துடன் அவர் திரும்பி வந்துக் கலக்க வேண்டும்.

அன்புரசிகன்
21-02-2012, 04:50 AM
ஒருவருக்கு புற்றுநோய்வருவது நகைச்சுவையா ???? போட்டோஷொப் வேலையோ இல்லது உண்மையானதோ எதிரிக்கும் புற்றுநோய் வந்தால் நகைப்பது ?????!!!!!!!!

(இந்த திரி சிரிப்பு பகுதியில் இருப்ததாலேயே இந்த பதிவு... )

ஆதவா
21-02-2012, 05:50 AM
ஒருவருக்கு புற்றுநோய்வருவது நகைச்சுவையா ???? போட்டோஷொப் வேலையோ இல்லது உண்மையானதோ எதிரிக்கும் புற்றுநோய் வந்தால் நகைப்பது ?????!!!!!!!!

(இந்த திரி சிரிப்பு பகுதியில் இருப்ததாலேயே இந்த பதிவு... )

எனது பதிவிலும் சரி, அடுத்து வந்தவர்கள் பதிப்பிலும் சரி, புற்றுநோய் பற்றியவர் பற்றிய எள்ளலும், நகைச்சுவையான எழுத்துக்களும் கிடையாது. நான் கேட்டது என்னவெனில் எனக்கு மடலில் வந்த ஒரு புகைப்படம் யுவ்ராஜின் கீமோதெரபிக்குப் பின் எடுத்த புகைப்படம் என்று இருந்தது, அதனை மன்றத்தில் கொடுத்து யார் இவர் என்று கேட்டிருந்தேன், அவ்வளவே!

இது “புதிர்” எனும் நோக்கில் பதியப்பட்டது

விடுகதை, அல்லது புதிர் கூட இந்த பகுதியில் பதிவதுண்டு என்பது அறிவீர்கள் அன்பு!! அல்லது இதற்கேற்ற சரியான இடத்தை நீங்கள் கூறலாம்...

susibala.k
21-02-2012, 05:55 AM
Dear Yuvi ,

விரைவில் நலம் பெற வேண்டும்
களத்தில் வளம் வர வேண்டும்
நல்லவர் உள்ளம் நாடும்
நாடும் அதையே நாடும்
அன்புடனே வாழ்த்துகின்றோம்
வெற்றிக் கொடி நாட்டிடுவாய் !!!!

ஓவியன்
21-02-2012, 06:01 AM
யாரென கண்டு பிடிக்க முடியாத புதிரான படமும் இல்லை...

நகைச்சுவையான விடயமும் இல்லை...

அத்துடன் இந்தப் பதிவு யுவி சம்மந்தப் பட்டதென்பதால் விளையாட்டுப் பகுதிக்கே நகர்த்தலாம்....


அங்கே நம் யுவராஜ் நோயினை வெற்றி கொள்ள நம் மன்றத்தவர் வாழ்த்தும் திரியாக, இது இருக்கட்டும்...

அன்புரசிகன்
21-02-2012, 07:13 AM
எனது பதிவிலும் சரி, அடுத்து வந்தவர்கள் பதிப்பிலும் சரி, புற்றுநோய் பற்றியவர் பற்றிய எள்ளலும், நகைச்சுவையான எழுத்துக்களும் கிடையாது. நான் கேட்டது என்னவெனில் எனக்கு மடலில் வந்த ஒரு புகைப்படம் யுவ்ராஜின் கீமோதெரபிக்குப் பின் எடுத்த புகைப்படம் என்று இருந்தது, அதனை மன்றத்தில் கொடுத்து யார் இவர் என்று கேட்டிருந்தேன், அவ்வளவே!

இது “புதிர்” எனும் நோக்கில் பதியப்பட்டது

விடுகதை, அல்லது புதிர் கூட இந்த பகுதியில் பதிவதுண்டு என்பது அறிவீர்கள் அன்பு!! அல்லது இதற்கேற்ற சரியான இடத்தை நீங்கள் கூறலாம்...

என்னைப்பொறுத்தவரை இது புதிரான விடையமுமல்ல ஆதவா...

இந்தியாவில் துடுப்பாட்டங்களை விரும்பாமல் எந்த தொலைக்காட்சி விளம்பரங்களையும் பார்க்காதவர்களுக்கு இது புதிராக இருக்கலாம்.

மருத்துவத்தின் பின்னரான புகைப்படம் என்று வேண்டுமானால் பகிரலாம்....

இது எனது எண்ணமே... மீதி உங்களது முடிவுக்கு....


நீங்கள் எள்ளிநகையாடியுள்ளீர்கள் என்று நான் கூறவில்லை ஆதவா...

” ஒருவருக்கு புற்றுநோய்வருவது நகைச்சுவையா ???? போட்டோஷொப் வேலையோ இல்லது உண்மையானதோ எதிரிக்கும் புற்றுநோய் வந்தால் நகைப்பது ?????!!!!!!!!

(இந்த திரி சிரிப்பு பகுதியில் இருப்ததாலேயே இந்த பதிவு... ) ”

மனம் புண்பட்டிருந்தால் மன்னியுங்கள்...

Hega
21-02-2012, 08:53 AM
புற்று நோய் சம்பந்தமாய் ஒரு சிறு விளக்கம்..

புற்று நோய் என்பது முன்னரே ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்கபட்டு கீமோதெரபியையும் அவர் உடல் ஏற்றிடுமானாலும் உடனடி மரணம் இல்லை.


நோயாளியின் மனத்திடத்தினை பொறுத்தும்,டாக்டர்களின் வழிகட்டலைபொறுத்தும் புற்று நோய் பாதிக்கபட்ட காலத்திலிருந்து ஏழு தொடக்கம் பத்து வருடங்கள் புதிதாய் மீண்டும் ஆரம்பிக்காத பட்சத்தில் அதற்கு அதிகமாகவே ஆயுள் நீட்டிக்கபடும்.

கீமோதெரபி ஆரம்பிக்கபடும் காலத்தில் உடல் சோர்வுகள், பெலவீனங்கள் முடி உதிர்தல் போன்றவை இருந்தாலும் உடனடியாக முழுமையாய் தலைமுடி மொட்டையாகி விடாது் என்பது் ஒருபக்கமிருக்க வெளித்தோற்றத்துக்காக மனம் தளரவும் கூடாது.

சிகிச்சையின் கடினத்துகேற்ப அவர்கள் சத்தான உணவுகளை உணவு உண்ண வேண்டும்.பிடிக்காவிட்டாலும் மனப்பயம் எதிலும் பற்றற்ற தன்மையை கொடுக்கும் என்பது நிச்சயம். கூடுமானவரை வெளியில் இயற்கையான சூழலை ரசித்து நண்பர்கள் உறவுகளோடு கலந்துரையாடி மனதினை எப்போதும் உற்சாகமாய் வைத்திருக்க வேண்டும்.


காரணம் புற்று நோய் கண்டுபிடிக்கபட்டதும் அதை உணரும் நோயாளியின் மனப்பயமே அவருக்கு உடனடி எமனாகிறது.

புற்று நோயாளிகளுக்காக கவுன்சிலிங் செய்யும் போது நாம் சொல்வது ஒன்றே. மருந்து மாத்திரை என்பது அடுத்த கட்டமே. முதலில் தைரியம், தன்னம்பிக்கையை இழக்க கூடாது என..

யுவராஜிக்கு கீமோதெரபி ஆரம்பித்திருந்தாலும் அவர் தோற்றம் இப்படி ஆகியிருக்கும் வாய்ப்பு குறைவே..


தொடர்கிறேன் , பொறுத்தருள்க

பால்ராஜ்
11-03-2012, 12:43 PM
நலமாகி மீண்டும் வர கடவுளை வணங்குகிறேன்