PDA

View Full Version : எல்லாம் நன்மைக்கே (All is Well..!! ) :)ஓவியன்
20-02-2012, 10:12 AM
நாம் சரியாக இருக்கும் வேளைகளிலும், சில சம்பவங்கள் ஏன் இப்படி நம் வாழ்க்கையில் நடக்கிறது என்றே நமக்குப் புரிவதில்லை, அப்படியான வேளைகளில் நாம் என்ன செய்ய முடியும்.......!!!

நம் நெஞ்சிலே கையினை வைத்து `All is Well, All is Well' என நமக்கு நாமே ஆறுதல் கூறுவதை விட........!! :cool::cool::cool:

அதே போன்ற `All is Well' சம்பவங்களை இங்கே பகிர்வோமா நண்பர்களே..!!:):D

ஓவியன்
20-02-2012, 10:14 AM
இன்று மதியம் என் கம்பனியின் தலமை அலுவலகத்திலிருந்து எனது வேலைத் தளத்துக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரிடத்தில் வீதி விளக்கு பச்சையிலிருந்து வேகமாக சிவப்பாகி விட நான் என் வண்டியினை நிறுத்த வேண்டியதாயிற்று.....!!!

கவனிக்க இங்கே நான் வண்டியை நிறுத்த முன்னர் என் வண்டிக்கு முன்னாலே நின்ற வண்டியும் நின்றிருந்தது, அத்துடன் நான் வீதியின் வேகம் குறைத்த கடைசி தடத்தில் நின்று கொண்டிருந்தேன். ;)

இந்த நேரத்தில் எனக்கு பின்னே நின்ற வண்டியிலிருந்தவருக்கு நான் வண்டியினை நிறுத்தியது பிடிக்க வில்லை போல, `பாம், பாம்` என இரண்டு தடவை தன் வண்டியின் ஹாரனை அடித்தார். :sauer028:

சரி ஏதோ கைத் தவறுதலாக ஹாரனை அழுத்தி விட்டார் போல :D என நினைத்துக் கொண்டு, என் வண்டியின் பின் பக்கம் பார்க்க கூடிய ஆடி மூலம் பின் வண்டியில் இருந்தவரைப் பார்த்தேன், யூனிபார்ம் மாதிரி மஞ்சள் கலரில் சட்டை அணித்திருந்தார், உருவத்தில் அன்புரசிகனின் அளவில் இருந்தார் :D, வண்டியின் பக்க கண்ணாடியை இறக்கி விட்டு விட்டு தன் இடது கையினை வண்டிக்கு வெளியே ஸ்டைலாக தொங்க விட்டிருந்தார்...!! :rolleyes:

இப்படியாக அவரைப் பார்த்துக் கொண்டிருக்க, விளக்கு பச்சைக்கு மாற என் வண்டிக்கு முன்னே நின்றவர் வேகமாக வண்டியினை எடுக்காமல் கொஞ்சம் மெதுவாகவே வண்டியினை ஓட்டினார், பாவம் அவருக்குத் தான் என்ன பிரச்சினையோ...??? :)

உடனே என் வண்டியின் பின்னே இருந்தவருக்கு வந்ததே ஒரு கோபம், தன் வண்டியின் ஹாரனை `ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்` என தன் மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி ஒலிக்க விட்டுக் கொண்டு தன் வண்டியினை என் இடது பக்கத்திலிருந்த தடத்துக்கு மாற்றி என் அருகே வந்து தன் வண்டியின் வலது பக்க கண்ணாடியையும் இறக்கி விட்டு விட்டு தன் வலது கையினை எனக்கு நேரே காட்டி எதோ புரியாத மொழியில் எல்லாம் கத்தி, மாறி மாறி ஹாரனையும் அழுத்தி ஒரு ரகளையே பண்ணி விட்டுத்தான் அந்த இடத்தை விட்டுக் கடந்தார். :mad:

அப்போது நான் முன்னே பார்த்தேன், எனக்கு முன்னே சென்று கொண்டிருந்த அந்த வண்டி அப்படியே சிவனே என்று மெதுவாகவே சென்று கொண்டிருந்தது...!! :D:D

நான் என்ன செய்ய, என் நெஞ்சிலே கையினை வைத்து All is Well, All is Well என்று சொல்லிய படியே வேலைத்தளத்துக்கு வந்து சேந்தேன். :rolleyes:

ஆதி
20-02-2012, 10:39 AM
எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது, ஆனால் அவன் என்னை புரியாத மொழியில் எல்லாம் திட்டலை, அன்னை தமிழில் அசிங்கமான வார்த்தையை சொல்லி திட்டினான், உடனே சைகிளைவிட்டு இறங்கி இங்க வாடா என்பது போல் சைகை காண்பிச்சேன்..

வண்டியை திருப்பி கொண்டு அவன் வந்தான், அவன் வந்து வண்டியை நிறுத்தும் முன்பே முன் சக்கரத்தில் ஒரு உதைவிட்டேன்..

அது எங்க ஏரியா, சுற்றி உள்ள கடைக்ககாரங்க, ஆட்டோக்காரங்க எல்லாம் என் நண்பர்கள் தான், உதைவிட்ட உடனே 2 ஆட்டோக்காரங்க அப்புறன் டீக்கடை வத்திருக்கும் என் நண்பனு சில ஓடி வந்துட்டாங்க...

டீக்கடை வைத்திருக்கும் என் நண்பன் வந்தது வராததுமா அதில் ஒருவனை அடிச்சுட்டான், பிரச்சனை இன்னும் பெரிசா ஆகிடுச்சு...

அவனுக திரும்பி கை ஓங்க முயற்சிக்க சுற்றி நின்னவுங்க அதட்ட, சீனி(டீக்கடை நண்பன்) இன்னும் 2 அடிவிட்டான்

பசங்க பயந்து என் கிட்டையும் சீனிகீட்டையும் மன்னிப்பு கேட்டுட்டு போனாங்க..

இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த எங்க அப்பாவின் நண்பர் யாரோ ஒருத்தர் என்ன போட்டு குடுத்து அன்னைக்கு வீட்டில் தர்மஅடி வாங்க வச்சார், அவன் என்னை திட்டினத விட அசிங்க அசிங்கமா எங்க அப்பா திட்டினார்

பேசாம அவன் திட்டினத வாங்கிட்டு அமைதியா வந்திருக்கலாம்நு அப்போ தோணுச்சு...

ஓவியன்
20-02-2012, 10:42 AM
எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது, ஆனால் அவன் என்னை புரியாத மொழியில் எல்லாம் திட்டலை, அன்னை தமிழில் அசிங்கமான வார்த்தையை சொல்லி திட்டினான், உடனே சைகிளைவிட்டு இறங்கி இங்க வாடா என்பது போல் சைகை காண்பிச்சேன்..

வண்டியை திருப்பி கொண்டு அவன் வந்தான், அவன் வந்து வண்டியை நிறுத்தும் முன்பே முன் சக்கரத்தில் ஒரு உதைவிட்டேன்..

அது எங்க* ஏரியா, சுற்றி உள்ள* க*டைக்ககார*ங்க*, ஆட்டோக்காரங்க எல்லாம் என் ந*ண்ப*ர்க*ள் தான், உதைவிட்ட* உட*னே 2 ஆட்டோக்கார*ங்க* அப்புற*ன் டீக்க*டை வ*த்திருக்கும் என் ந*ண்ப*னு சில* ஓடி வ*ந்துட்டாங்க*...

டீக்க*டை வைத்திருக்கும் என் ந*ண்ப*ன் வ*ந்த*து வ*ராத*துமா அதில் ஒருவ*னை அடிச்சுட்டான், பிர*ச்ச*னை இன்னும் பெரிசா ஆகிடுச்சு...

அவ*னுக* திரும்பி கை ஓங்க* முய*ற்சிக்க* சுற்றி நின்ன*வுங்க* அத*ட்ட*, சீனி(டீக்க*டை ந*ண்ப*ன்) இன்னும் 2 அடிவிட்டான்

ப*ச*ங்க* ப*ய*ந்து என் கிட்டையும் சீனிகீட்டையும் ம*ன்னிப்பு கேட்டுட்டு போனாங்க*..

இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த* எங்க* அப்பாவின் ந*ண்ப*ர் யாரோ ஒருத்த*ர் என்ன*ஒ போட்டு குடுத்து அன்னைக்கு வீட்டில் த*ர்ம* அடி வாங்க* வ*ச்சார், அவ*ன் என்னை திட்டின*த* விட* அசிங்க* அசிங்க*மா எங்க* அப்பா திட்டினார்

பேசாம* அவ*ன் திட்டின*த* வாங்கிட்டு அமைதியா வ*ந்திருக்க*லாம்நு அப்போ தோணுச்சு...

அப்போ All is Well சொல்லி இருந்திங்கனா, இந்த பிரச்சினையெல்லாம் வந்திருக்காதுலே...!! :D:D

பாருங்க, எத்தனை நட்சத்திரங்கள்னு...!!

All is Well, All is Well..!! :D :D

susibala.k
20-02-2012, 11:12 AM
இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த எங்க அப்பாவின் நண்பர் யாரோ ஒருத்தர் என்ன போட்டு குடுத்து அன்னைக்கு வீட்டில் தர்மஅடி வாங்க வச்சார், அவன் என்னை திட்டினத விட அசிங்க அசிங்கமா எங்க அப்பா திட்டினார்

பேசாம அவன் திட்டினத வாங்கிட்டு அமைதியா வந்திருக்கலாம்நு அப்போ தோணுச்சு...

இனிமேல் யாரும் ரோட்டில திட்டினா மட்டும் இல்லீங்க , அடிச்சாக்கூட வாயேத் திறக்க மாட்டேங்க !!!! நல்லதச் சொன்ன நீங்க நல்லா இருக்கனும் சாமி !!!! வம்பே வேண்டாம் !!! வாழ்த்துக்கள் !!!!

susibala.k
20-02-2012, 11:27 AM
இன்று மதியம் என் கம்பனியின் தலமை அலுவலகத்திலிருந்து எனது வேலைத் தளத்துக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரிடத்தில் வீதி விளக்கு பச்சையிலிருந்து வேகமாக சிவப்பாகி விட நான் என் வண்டியினை நிறுத்த வேண்டியதாயிற்று.....!!!

கவனிக்க இங்கே நான் வண்டியை நிறுத்த முன்னர் என் வண்டிக்கு முன்னாலே நின்ற வண்டியும் நின்றிருந்தது, அத்துடன் நான் வீதியின் வேகம் குறைத்த கடைசி தடத்தில் நின்று கொண்டிருந்தேன். ;)

இந்த நேரத்தில் எனக்கு பின்னே நின்ற வண்டியிலிருந்தவருக்கு நான் வண்டியினை நிறுத்தியது பிடிக்க வில்லை போல, `பாம், பாம்` என இரண்டு தடவை தன் வண்டியின் ஹாரனை அடித்தார். :sauer028:

சரி ஏதோ கைத் தவறுதலாக ஹாரனை அழுத்தி விட்டார் போல :D என நினைத்துக் கொண்டு, என் வண்டியின் பின் பக்கம் பார்க்க கூடிய ஆடி மூலம் பின் வண்டியில் இருந்தவரைப் பார்த்தேன், யூனிபார்ம் மாதிரி மஞ்சள் கலரில் சட்டை அணித்திருந்தார், உருவத்தில் அன்புரசிகனின் அளவில் இருந்தார் :D, வண்டியின் பக்க கண்ணாடியை இறக்கி விட்டு விட்டு தன் இடது கையினை வண்டிக்கு வெளியே ஸ்டைலாக தொங்க விட்டிருந்தார்...!! :rolleyes:

இப்படியாக அவரைப் பார்த்துக் கொண்டிருக்க, விளக்கு பச்சைக்கு மாற என் வண்டிக்கு முன்னே நின்றவர் வேகமாக வண்டியினை எடுக்காமல் கொஞ்சம் மெதுவாகவே வண்டியினை ஓட்டினார், பாவம் அவருக்குத் தான் என்ன பிரச்சினையோ...??? :)

உடனே என் வண்டியின் பின்னே இருந்தவருக்கு வந்ததே ஒரு கோபம், தன் வண்டியின் ஹாரனை `ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்` என தன் மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி ஒலிக்க விட்டுக் கொண்டு தன் வண்டியினை என் இடது பக்கத்திலிருந்த தடத்துக்கு மாற்றி என் அருகே வந்து தன் வண்டியின் வலது பக்க கண்ணாடியையும் இறக்கி விட்டு விட்டு தன் வலது கையினை எனக்கு நேரே காட்டி எதோ புரியாத மொழியில் எல்லாம் கத்தி, மாறி மாறி ஹாரனையும் அழுத்தி ஒரு ரகளையே பண்ணி விட்டுத்தான் அந்த இடத்தை விட்டுக் கடந்தார். :mad:

அப்போது நான் முன்னே பார்த்தேன், எனக்கு முன்னே சென்று கொண்டிருந்த அந்த வண்டி அப்படியே சிவனே என்று மெதுவாகவே சென்று கொண்டிருந்தது...!! :D:D

நான் என்ன செய்ய, என் நெஞ்சிலே கையினை வைத்து All is Well, All is Well என்று சொல்லிய படியே வேலைத்தளத்துக்கு வந்து சேந்தேன். :rolleyes:

All is Well, All is Well , All is Well ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லிக்கனும் ஓவியன் சார் !!! நானெல்லாம் ரோட்டில அத்தனை முறை திட்டு வாங்குவேன் !!!! அப்படிக் கேட்டு கேட்டே கெட்ட வார்த்தைகள் நிறைய மொழிகள்ல மனப்பாடம் ஆயிருச்சு !!!! ஆனாலும் திட்டு வாங்கறது மட்டும் மாறல !!! இத்தனை நாளா வேகமா இடத்தை காலி செய்திடுவேன் , இனிமேல் வேனா All is Well சொல்லுறேன் !!! அடி கிடி விழுந்திடாதே !!!! அப்புறம் நீங்கதான் , ஆமா சொல்லிட்டேன் !!!!

arun
20-02-2012, 05:08 PM
ஒரு நாள் இரவு செகன்ட் ஷிப்டை முடித்து விட்டு வீட்டுக்கு போய் கொண்டிருந்தேன் மனதில் பல விதமான சிந்தனைகள் திடீரென்று பார்க்கிறேன் எனது பைக் எதிர் திசை ரோட்டில் போய் கொண்டிருக்குறது மின்னலென ஒரு பைக் என் கிட்ட வந்து விட்டது அந்த பைக்கில் இருந்த ஆள் ஏதோ சொல்லி கத்துகிறான் கண் இமைக்கும் நேரத்தில் எனது பைக்கை இடது பக்கம் திருப்ப அவன் என்னை கடந்து சென்று விட்டான்

அந்த பதட்டத்தில் எங்கே அய்யா All is Well என்று சொல்வது!

அந்த ஆள் நிறுத்தி என்னை க்ரீன் க்ரீனாக திட்டுவது தெரிகிறது சில நொடிகளில் நான் பறந்து விட்டேன் ...

கவனம் சிதறினால் இது போல தான் ஆகும்

சிவா.ஜி
20-02-2012, 05:55 PM
ஆல் ஈஸ் வெல்...எல்ல சமயங்களிலும் இவை மந்திர வார்த்தைகள் அல்ல.....ஆனாலும் இவை மந்திர வார்த்தைகள்தான்...

அன்புரசிகன்
20-02-2012, 10:56 PM
`ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்` என தன் மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி ஒலிக்க விட்டுக் கொண்டு தன் வண்டியினை என் இடது பக்கத்திலிருந்த தடத்துக்கு மாற்றி என் அருகே வந்து தன் வண்டியின் வலது பக்க கண்ணாடியையும் இறக்கி விட்டு விட்டு தன் வலது கையினை எனக்கு நேரே காட்டி எதோ புரியாத மொழியில் எல்லாம் கத்தி, மாறி மாறி ஹாரனையும் அழுத்தி ஒரு ரகளையே பண்ணி விட்டுத்தான் அந்த இடத்தை விட்டுக் கடந்தார். :mad:நீங்கள் தப்பு செய்தால் அதற்கு வருந்தியே ஆகணும்... மத்திய கிழக்கில் நீங்கள் வலதுபக்க வீதியில் நின்றால் எவரும் ஒளி பாச்சவும் முடியாது. ஒலி எழுப்பவும் முடியாது. (கத்தார் அமீரகம்) மீறுபவர்களின் இலக்கத்தை பெற்று கொடுத்து பழிவாங்க வேண்டியது உங்களது கடமை.... இறுதி இடதுபுறத்தில் நின்றிருந்தால் அது உங்கள் தவறே..... (அது இல்லை என்பது பதிவில் தெரிகிறது) இந்த விடையத்தில் நான் பலதடவை அமீரகத்தில் எட்டப்ப வேலை பார்த்திருக்கிறேன். அதற்கு சாட்சியாக அநேக வீதி பாதுகாப்பு ஒளிப்பட கருவிகள் சான்று கொடுக்கும். ஓமானில் அது இருக்கோ தெரியல.... இல்லாத பட்சத்தில் உங்கள் மோதிரத்தை அவனுக்கு காட்டியிருக்க வேண்டியது தானே... :D

---

இதே போன்ற ஒரு விடையம் இங்கு நடந்தது. எனது கணிப்பின் படி அந்த நபர் ஈராக் ஆள் என்று நினைக்கிறேன். முன்னே வாகனத்தை நிறுத்தி வந்து ரொம்ப பேசினார். நானும் நிறுத்த பின்னே வந்த ஒரு பாரிய வாகன சாரதியும் நிறுத்தி இறங்கி வந்தான். நான் செத்தேன் என்று நினைத்தேன். (முதலில் முன்னே சென்றது சீனா மனிதன். 80 வீதியில் 50 இல் செல்ல என்றாலும் வலப்பக்கத்திற்கு மாற்ற முடியாததால் தருணம் பார்த்துக்கொண்டிருக்க பின்னால் வந்தவருக்கு கடுப்பாகிவிட) அவருக்கு தெரிந்த எல்லா ஆங்கில சொற்களையும் வைத்து எனது அம்மா பாட்டி என்று இழுத்தான். எல்லாம் முடிய சிரித்துக்கொண்டு "No thanks. Keep all the words with you” என்று விட்டு திரும்ப அந்த பாரிய வாகன சாரதி சிரித்துவிட்டு திரும்பினார். (அப்பாடா.. தப்பிச்சேன் என்று விட்டு திரும்பினேன்....) அவுஸில் இந்தவிடையங்களுக்கு காவல்துறை சென்றால் நிச்சயம் சாட்சி வேண்டும். அது கடினம். ஆகவே மீள பழிவாங்கிவிடவேண்டும் என்பது எனது மனதில் ஏற்கனவே பதிந்துவிட்டால் உடனடியாகவே அவரை முந்தி பின் இறுதிவரை அவரது வாகனத்தை எனது வாகனத்திற்கு முன் விடவில்லை. (பின் நான் பயணித்தது 60 ல்) ஏதோ ஒரு ஆத்ம திருப்தி.....

Free Advice: இந்த நேரத்தில் முக்கியம் tension ஆகக்கூடாது... மிக மிக குளிர்மையாக (அட cool ஆக:D) இருக்க வேண்டும். மிக முக்கியம் மிக கூரிய பார்வை மற்றும் அவதானம். அது காவல்துறை வாகனங்களை அவதானிக்க... இங்கு ஏதாவது ஒரு Holden வாகனம் ஒலிவாங்கி கம்பிகளுடன் காவல்துறை வருவார்.... இவை தான் பழிவாங்க இலகுவாக இருக்கும். :D :D :D

sarcharan
23-02-2012, 01:47 PM
நீங்க வேற, அலுவலக பணி மிகுதியால் களைத்துபோய் நான் ஒரு நாள் நடுராத்திரி வண்டி ஓட்டிக்கிட்டு வரும்போது தூங்கிட்டேன். ஒரு பள்ளத்துல இறங்கி ஏறினதுனால முழிச்சேன்.

நல்லவேளை! ஒன்றும் ஆகலை!!

கல்லுரி நாட்களில் திருச்சி பொன்மலை குவார்ட்டேர்ஸ் ரோட்டில் ஒரு நாள் கண்ணை மூடிகிட்டே வண்டி ஓட்டினால் எப்படி இருக்கும என்பதை பரிசோதித்தேன். :lachen001:

"அம்மா!" என்று ஒரு கிழவி அலறிய சத்தம் கேட்டு கண் திறந்தேன்.

கிழவியின் பாக்கில் வண்டி இடித்து விட, கூட்டம் என்னை சூழ்ந்து கொண்டது.

நல்லவேளை அவங்களுக்கு அவ்வளவாக ஒன்னும் ஆகலை. என்னிடம் ஓட்டுனர் உரிமம் வேறு இல்லை. எப்படியோ தப்பித்தேன்.

சிவா.ஜி
23-02-2012, 06:22 PM
அம்மா என்று ஒரு கேள்வி அலறிய சத்தம் கேட்டு கண் திறந்தேன். நல்லவேளை அவங்களுக்கு ஒன்னும் ஆகலை. என்னிடம் ஓட்டுனர் உரிமம் வேறு இல்லை. எப்படியோ தப்பித்தேன்.

அடக் கேள்வி கூட உங்கக்கிட்ட அலறியிருக்கே....அப்ப நீங்க கேள்வியின் நாயகனா...??? ஹா...ஹா...ஹா..!!1

sarcharan
25-02-2012, 10:58 AM
சிவாண்ணா! மாத்திட்டேண்ணா...