PDA

View Full Version : காதல் நெகிழி



ஆதி
20-02-2012, 04:42 AM
இப்படி அழகாய்
உதட்டை பிதுக்கி சொல்வாயானால்
எத்தனை முறையானாலும்
நிராகரிக்கப்பட தயார் என்று
நீ சொன்னத் தருணத்தில்
உன் காதலின் துளி
என்னுள் உதிர்ந்து மனதை நெகிழ்தியது

மதுவில் மிதக்கும்
பனிக்கட்டியென
கரைய துவங்கிவிட்டேன்
உன் காதலில்

நீ ரசிப்பதற்காகவே
என்னை அழகாய்
வைத்துக் கொள்கிறேன்

நீ பொறாமைப்படவதற்காகவே
பிற ஆண்களுடன் பேசுகிறேன்

மீண்டும்
உன் காதலை நீ சொல்வதற்காகவே
உன்னோடான தனிமையான சந்தர்பங்களை
உருவாக்குகிறேன்

நீ என்னை பார்க்காமல் போன
பொழுதுக்காக எல்லாம் உன்னிடம்
சண்டையிட காத்திருக்கிறேன்

காதல் என்னை மீண்டும்
சிறுப்பிள்ளையாக்கிவிட்டது

தன் கிறுக்குதனங்களை எல்லாம்
என்னை செய்ய வைத்து
வேடிக்கைப்பார்க்கிறது

புரிந்து கொள்ளடா
உன் அண்மையும்
தொலைவும்
எனக்கு பதட்டமானதாகவே இருக்கிறது...


நெகிழி = ப்ளாஸ்டிக்

ஆதவா
20-02-2012, 08:06 AM
நீங்கள் ஒரு நட்சத்திர எழுத்தாளர்!!! :)

நெகிழியா? ஞெகிழியா? (ஞெகிழி என்ற ஒரு புத்தகம் இருக்கிறது.)

பாஸ்டிக் என்றால் என்னங்க?? :)
நிறைய ப்லா(ஸ்திரி)டிக் ஒட்டியிருக்கீங்க கவிதைக்கு!!

ஆதி
20-02-2012, 09:11 AM
நீங்கள் ஒரு நட்சத்திர எழுத்தாளர்!!! :)

நெகிழியா? ஞெகிழியா? (ஞெகிழி என்ற ஒரு புத்தகம் இருக்கிறது.)

பாஸ்டிக் என்றால் என்னங்க?? :)
நிறைய ப்லா(ஸ்திரி)டிக் ஒட்டியிருக்கீங்க கவிதைக்கு!!

ஹி.. ஹி..

நட்சத்திரங்களை நீக்கிவிட்டேன் ஆதவா

நெகிழி தான்...

செல்வா
20-02-2012, 04:02 PM
ஹி.. ஹி..

நட்சத்திரங்களை நீக்கிவிட்டேன் ஆதவா

நெகிழி தான்...

இன்னும் மீதமிருக்கே நட்சத்திரங்கள்.
மஹாராஷ்டிரா போன பிறகும் கரண்ட் கட் போகல போலிருக்கு.

சிவா.ஜி
20-02-2012, 04:38 PM
இதை அந்த சைடிலிருந்தும் யோசித்துப்பார்த்தேன்....வெறும் சில வார்த்தைகளின்...ம்ஹீம்...எழுத்துக்களின் மாற்றத்தில்......சரியாகவே வருகிறது.

ஆதனுக்கு வாழ்த்துக்கள். புனே......நிறைய சந்தர்ப்பம் உருவாக்கி கொடுக்குதோ....கலக்குங்க.....

பிரேம்
25-02-2012, 12:14 AM
செமையா..இருக்கு தல..kavithai