PDA

View Full Version : சுவிஸ் தேசமும் அதன் கல்விமுறைகளும்



Hega
19-02-2012, 08:31 PM
கீதம் அக்காவின் அவுஸ்ரேலிய பள்ளிகள் குறித்த பதிவினை கண்டதும் நான் வாழும் சுவிஸ் தேசத்தின் சமூக, கலாசார கல்வி முறைகள் குறித்து பகிர்ந்தாலென்ன எனும் எண்ணம் தோன்றியது.

கீதம் அக்காவைபோல் புள்ளிவிபரங்கள், தொகுப்புக்கள் என்று இயலா விட்டாலும் என்னால் இயன்ற வரை முயல்கிறேன்.

தமிழிலும் ஜேர்மன் மொழியிலுமான இணையதளங்களில்
உதாரணமாக விக்கிமீடியா தேடியும் நான் கேட்டவை,பார்த்தவை,படித்தவைகளை வைத்தும் முயற்சிக்கிறேன்..

அனைவருக்கும் நன்றி..

Hega
19-02-2012, 09:03 PM
சுவிஸ்





http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/Coat_of_Arms_of_Switzerland.svg/85px-Coat_of_Arms_of_Switzerland.svg.png


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/switzerland-distance-map.png




தம் வாழ் நாளில் ஒரு முறையாவது சென்று பார்க்கமாட்டோமா என பணக்காரன் முதம் பாமரன் வரை எங்க வைக்கும் சொர்க்க பூமியாம் சுவிஸ் என எம்மவர்களால் அழைக்கபடும் சுவிட்சர்லாந்து (Switzerland) அல்லது சுவிசுக் கூட்டமைப்பு ஆல்ப்ஸ் மலைதொடர்களாலும், நிலப்பகுதிகளாலும் சூழப்பட்ட ஒரு ஐரோப்பிய செல்வந்த நாடு.

சுவிஸ் என்றதுமே பெரும்பாலோருக்கு கறுப்புபணமும், அதன் சேமிப்பும் நினைவுக்கு வரும்.


வடக்கே ஜேர்மனி, மேற்கே பிரானஸ் அமரன் சார் ஊர், தெற்கே இத்தாலி, அக்னி சார் ஊர் கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டு எல்லைகளாக கொண்டும் அல்ப்ஸ் மலைதொடர்களாலும் சூழப்பட்ட அழகிய நாடு. சுவிட்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/europa_map.gif


7.7 மில்லியன் மக்கள் தொகையுடன் 41,285 சதுர கிமீ பரப்பளவில் 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசு நாடாகும்.தலைன் நகரமாக பேர்ண் நகரமும் பொருளாதார உலகலாவிய தொடர்பு நகரமாக சூர்ச், ஜெனிவாவும் உள்ளன.

நாட்டின் குறிக்கோளாய் ஒருவருக்கு எல்லோரும் எல்லோருக்கும் ஒருவர் இருப்பது குறிப்பிடதக்கது.



http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/Flag_of_Switzerland.svg/125px-

கீதம்
19-02-2012, 09:08 PM
நாடு பற்றிய அறிமுகத்துடன் மிகத் தெளிவான ஆரம்பம்.

பலருக்கும் பயனளிக்கும் இம்முயற்சியை மகிழ்வுடன் வரவேற்கிறேன் ஹேகா.

உங்கள் வேலைப்பளுவுக்கு இடையிலும் இதுபற்றி பரிசீலித்திருப்பது பாராட்டுக்குரியது.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர்

என்னும் மகாகவியின் வாக்குக்கிணங்க நம்மால் இயன்றவரை கலைச்செல்வமென கல்விச்செல்வத்தைக் கொணர்ந்திங்கு சேர்ப்போம்.

பொருந்தியவை ஏற்று பொருந்தாதன விலக்கி, நல்லறிஞர் அவற்றை ஏற்பார் என நம்புவோம்.

மனமார்ந்த பாராட்டு ஹேகா.

Hega
19-02-2012, 09:09 PM
சுவிட்சர்லாந்து, ஒரு நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ளது, இதன் சராசரி தனிநபர் GDP இன் மதிப்பு $67,384 ஆகும். உலகின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ள நகரங்களில் சூரிச் மற்றும் ஜெனீவா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக ஸ்விட்சர்லாந்து விளங்குகிறது. பலமொழிகள் பேசப்படும் நாடு. ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் உரோமன் முதலிய நான்கு தேசிய மொழிகள் கொண்டது. ஆகஸ்டு 1, 1291 இல் சுவிட்சர்லாந்து நிறுவப்பட்டதால் சுவிஸ் தேசிய தினம் ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்படுகிறது

Hega
19-02-2012, 09:14 PM
நாடு பற்றிய அறிமுகத்துடன் மிகத் தெளிவான ஆரம்பம்.

பலருக்கும் பயனளிக்கும் இம்முயற்சியை மகிழ்வுடன் வரவேற்கிறேன் ஹேகா.

உங்கள் வேலைப்பளுவுக்கு இடையிலும் இதுபற்றி பரிசீலித்திருப்பது பாராட்டுக்குரியது.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர்

என்னும் மகாகவியின் வாக்குக்கிணங்க நம்மால் இயன்றவரை கலைச்செல்வமென கல்விச்செல்வத்தைக் கொணர்ந்திங்கு சேர்ப்போம்.

பொருந்தியவை ஏற்று பொருந்தாதன விலக்கி, நல்லறிஞர் அவற்றை ஏற்பார் என நம்புவோம்.

மனமார்ந்த பாராட்டு ஹேகா.



ஆஹா ஆஹா

மிக்க நனறி, எல்லாம் உங்கள் வழி காட்டலின்படிதான் அக்கா வேலைப்பழு என்பது எப்போதும் தொடர்வதுதான், இதுவோ நம் ஆதம திருப்திக்கானது.

கல்வி குறித்து தொடர முன் நாட்டைகுறித்தும் நாட்டின் சமூக, கலாசாரம் குறித்தும் பதிந்து விட்டு தொடர்கிறேன் அக்கா. ஒரு நாட்டின் கல்வி என்பது அந்நாட்டில் சமுக காலாச்சாரத்தோடும் தொடர்புடையதுதானே..

மதி
19-02-2012, 11:59 PM
தொடங்கிட்டீங்களா?? பல நாட்டு கல்விமுறைகளையும் அறிந்து கொள்வோமே..! ஆரம்பமே நல்லா இருக்கு.. மேலும் பல தகவல்களைத் தாருங்கள்

M.Jagadeesan
20-02-2012, 02:03 AM
கைக்கடிகார தேசத்தின் கல்விமுறையை அறிய ஆவலாக உள்ளேன்.

செல்வா
20-02-2012, 05:03 AM
மன்ற ஆவணப் பதிவுகளில் மீண்டுமொரு திரி.
நாடு பற்றிய அறிமுகம் அசத்தல்
தொடருங்கள்...!

ஆதவா
20-02-2012, 08:21 AM
ஆஹா... தொடங்குங்கள் தொடங்குங்கள்.....
சுவிஸ் என்றாலே ஜில்லிட்டிடும் கிளைமாட்டும் ஞாபகத்திற்கு வருமே....

(இருந்தாலும் கொள்ளைக்காரனின் பாதுகாப்பு அரண் அந்த ஊர்தான்..)

இதைப்போலவெ அமரன், அக்னி போன்றவர்களும் துவங்கலாம், (நாளைக்கு வசதியா இருக்குமெ!!)

ஒரு நல்ல கட்டுரை ஆரம்பமாக வழிவகுத்த கீதம் அக்கா அவர்களுக்கு மன்றத்தின் பொறுப்பாளர்கள் சார்பில் ஒரு பூங்கொத்து!!

பின்னாடியெ வாரேன், நீங்க போய்ட்டே இருங்கோ!!

அமரன்
20-02-2012, 09:03 PM
அருமை..

கீதாக்கா ஊன்றியதௌ எங்கும் தளைக்கும் கல்வியாக சுவிசில் வந்தி நிற்கிறது. ஹேகாக்காவின் அயராத தேடல் நமக்கு இன்னும் பல தகவல்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை..

எனக்குப் பிடித்த நாடுகள் இரண்டு. சுவிஸ் அதில் முதலாவது.. அதைப்பற்றி அறிய ஆவல் அதிகரிக்கிறது. கல்வியுடன் மட்டும் நின்றுவிடாது, வனப்பையும் படத்துடன் பகிர்ந்தால் மகிழ்வேன் அக்கா.

Hega
23-02-2012, 09:42 AM
தொடங்கிட்டீங்களா?? பல நாட்டு கல்விமுறைகளையும் அறிந்து கொள்வோமே..! ஆரம்பமே நல்லா இருக்கு.. மேலும் பல தகவல்களைத் தாருங்கள்


நேரம் கிடைக்கும் போது நிச்சயமாகவே தொடர்வேன் மதி .

Hega
23-02-2012, 09:45 AM
கைக்கடிகார தேசத்தின் கல்விமுறையை அறிய ஆவலாக உள்ளேன்.


என்னால் இயன்றவரை அறியதருகிறேன் ஐயா

Hega
23-02-2012, 09:46 AM
மன்ற ஆவணப் பதிவுகளில் மீண்டுமொரு திரி.
நாடு பற்றிய அறிமுகம் அசத்தல்
தொடருங்கள்...!

மிக்க மகிழ்ச்சி செல்வா அவர்களே..

வியாசன்
23-02-2012, 04:31 PM
சுவிஸ்நாட்டில் ஒரு புதுமை என்னவென்றால் பிரதமர் பதவி அது ............. அவங்களே சொல்லட்டும்:lachen001::lachen001::lachen001:

வியாசன்
23-02-2012, 05:17 PM
வளர்ச்சியடைந்த இந்த ஐரோப்பிய நாட்டில் 1971 இல்தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்திருக்கின்றது என்பது மிகவும் ஆச்சரியமான விடயமல்லவா?

ஹேகாவுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நானும் இடையிடையே சில சுவையான தவல்களை தரமுயல்கின்றேன்

சிவா.ஜி
23-02-2012, 05:39 PM
இன்னும் கல்விமுறை வரலையே.....!!1....ஆனாலும் நாடு நல்ல நாடுதான்....எனக்கு என் தாய்நாடுதான் அனைத்திலும் சிறந்தது. அதற்கான காரணங்கள் ஆயிரம்...பட்டியலிட்டால் பதிவுகள் போறாது. இருந்தாலும் நல்லவைகளை வாசித்தறிவோமே....எங்கள் பாரதியார் சொன்னதைப்போல......

vrajaram
29-02-2012, 03:13 PM
ரொம்ப நல்ல இருக்கு .தொடருங்கள் .
ராஜாராம்

Hega
02-03-2012, 07:21 PM
இன்னும் கல்விமுறை வரலையே.....!!1....ஆனாலும் நாடு நல்ல நாடுதான்....எனக்கு என் தாய்நாடுதான் அனைத்திலும் சிறந்தது. அதற்கான காரணங்கள் ஆயிரம்...பட்டியலிட்டால் பதிவுகள் போறாது. இருந்தாலும் நல்லவைகளை வாசித்தறிவோமே....எங்கள் பாரதியார் சொன்னதைப்போல......


கல்வி முறை குறித்து ஆரம்பிக்க முன் நாடு குறித்த அறிமுகத்தினை பகிர்கிறேன் அண்ணா. அத்ன பின் கல்வி முறை தொடர்வேன்..

Hega
02-03-2012, 07:22 PM
ரொம்ப நல்ல இருக்கு .தொடருங்கள் .
ராஜாராம்


நன்றி ராஜாராம்

இன்றே தொடர்வேன்...

Hega
02-03-2012, 08:00 PM
Switzerland Swiss பெயர்க் காரணம்

சுவிஸ்சர்லாந்த் ஆங்கிலத்தில் Switzerland அல்லது Swiss என சுருக்கமாகவும்,ஆங்கிலப் பெயரான Switzerland என்பது வழக்கிலிருந்து மறைந்த Switzer என்ற சொல்லைதொடர்புபடுத்துவதாக இருக்கும். Switzer எனும் சொல் 16 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்தது.

Swiss எனும் ஆங்கில சுருக்கம் Suisse எனும் பிரெஞ்சிலிருந்து பெறப்பட்டதாயிமிருக்கிறது.


சுவிஸ் ஜேர்மன் மொழியில் Schwiiz (d'Schwiiz ) எனவும்,(d'Schwiiz என்று கூறுவது கூட்டமைப்பையும் சாதாரணமாக Schwiiz என்பது மா நிலம் மற்றும் நகரத்தையும் குறிக்கிறது).

Switzer என்ற பெயர் அலீம்னிக் ஜெர்மனிலிருந்து பெறப்பட்டது (Schwiizer), அது சுவிஸ் மற்றும் அதனுடன் இணைந்த பிரதேசங்களில் தோன்றியது, மேலும் இது இவை பழைய சுவிஸ் கூட்டமைப்பின் மையக்கருவை உருவாக்கிய வால்ட்ஸ்டாட்டென் மண்டலங்களில் ஒன்றாகும். இதன் பெயர் 972 இல் பழைய உயர் ஜெர்மனில் Suittes என முதலில் அதிகாரப் பூர்வமாக்கப்பட்டது, இது suedan "எரிதல்" என்ற பதத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது, அது காட்டின் ஒரு பகுதி கட்டுமானங்களுக்காக எரிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதைக் குறிக்கிறது. இந்தப் பெயர் அந்தக் குறிப்பிட்ட மண்டலத்தின் ஆதிக்கத்திலான பகுதிக்கென நீட்டிக்கப்பட்டது, பின் 1499 இன் ஸ்வாபியன் போருக்கு பின்னர் படிப்படியாக முழு கூட்டமைப்புக்கும் அடையாளப் பெயராக இப்பெயரே பயன்படுத்தப்பட்டது

பிரெஞ்சு மொழியில் 16-ம் நூற்றாண்டிலிருந்து Suisse எனவும் அழைக்கப்டுகிறது.

Hega
02-03-2012, 08:08 PM
சுவிஸ்சர்லாந்து சுருக்கமாக CH எனவும் அழைக்கப்படுகிறது.

நியோ இலத்தின் பெயரான காண்ஃபெடரோஸியோ ஹெல்வெடிகா CH என்பது, 1848 இல் மாநில கூட்டமைப்பின் அமைப்பின் உருவாக்கத்தின் போது நெப்போலியனின் ஹெல்வெடிக் குடியரசின் நினைவாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரோமானிய காலத்திற்கு முன்பு சுவிஸ் பீடபூமியில் வாழ்ந்த கெல்டிக் பழங்குடி இனமான ஹெல்வெட்டி என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.

Hega
02-03-2012, 08:13 PM
வளர்ச்சியடைந்த இந்த ஐரோப்பிய நாட்டில் 1971 இல்தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்திருக்கின்றது என்பது மிகவும் ஆச்சரியமான விடயமல்லவா?

ஹேகாவுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நானும் இடையிடையே சில சுவையான தவல்களை தரமுயல்கின்றேன்


ஆஹா

நான் இதை கவனிக்கவே இல்லையே.. மன்னிக்கவும்.

நீங்களும் தொடருங்கள் வியாசன் அவர்களே..

Hega
02-03-2012, 08:18 PM
சுவிஸ்நாட்டில் ஒரு புதுமை என்னவென்றால் பிரதமர் பதவி அது ............. அவங்களே சொல்லட்டும்:lachen001::lachen001::lachen001:

ஆமாம், ஆச்சரியமான ஆட்சியமைப்பு முறையாயிருந்தாலும் கட்டுகோப்பான அரசியல் முறை இங்குண்டு என்பதால் இங்கு வாழ்வதில் எமக்கு பெருமையே..

வருடாவருடம் பிரதமர் சுழற்சி முறையில் மாறினாலும் நாட்டின் சட்டங்கள் திட்டங்கள் மாறாததும் எல்லோரும் ஒரே சீராக பின்பற்றுவதும் அரசியல் அடிதடிகுழப்பங்கள் இல்லாததும் இங்கே ஆச்சரியம் மட்டும் அல்ல அதிசயமும்தானே..


மேலும் நாடு குறித்த அறிமுகத்தில் பின் தொடர்கிறேன்..

Hega
02-03-2012, 08:35 PM
சுவிஸ் தேச அமைப்பு குறித்த முதல் பதிவில் இந்த நாட்டின் எல்லைகளாக ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி,ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் இருப்பதாக சொன்னேன் அல்லவா.. நாட்டின் எல்லைகளுகேற்பவே அதன் அருகில் இருக்கும் மாநிலங்க்ளும் அதன் அண்டைய நாட்டு மொழியையே ஆட்சிமொழியாக கொண்டுள்ளது.


நாட்டின் மொத்த பரப்பில் 41,285 கிமீ² (136th) 15,940 சது. மைல்களில் நீர்வளம் 4.2 வீதமாக இருந்தும் மீதி நிலவளத்தில் 7.7 மில்ல்லியன் மக்கள் தொகை மட்டுமே கொண்ட இச்சிறிய தேசத்தில் ஆட்சிமொழியாய் ஜேர்மன், பிரெஞ்சு,இத்தாலி, உரோமன்ஸ் என நான்கு மொழிகள் ஆட்சி மொழியாயிருக்கிறது.

மாநிலங்களின் ஆட்சிமொழிக்கேற்பவே அந்தந்த நகரங்களின் கல்வியும் ஆட்சிமொழியை முதல் தாய்மொழியாகவும் மூன்றாம் வகுப்பிலிருந்தும், ஐநதாம் வகுப்பிலிருந்தும் அதற்கடுத்த மொழிகளும் இரண்டாம் மூன்றாம் மொழியாக கற்பிக்கபடுவதால் இங்கே கல்விகற்கும் மாணவன் தன் பத்தாம் வகுப்பை முடிக்கும்15 வயதினிலே மூன்று தேசிய மொழிகளை சரளமாக பேச எழுதவும்,பொதுமொழியான ஆங்கிலத்தை ஓரளவு புரிந்து எழுத பேசவும் கற்றிருப்பான் என்பது இந் நாட்டில் நான் காணும் சிறப்பு.


எங்கள் தமிழ் சிறுவர்கள் தாய்மொழியாம் தமிழையும் கற்பதால் அவர்களுக்கு சிறுவயதில் கூடுதல் சுமையாக தமிழ் தோன்றினாலும் அதிலும் அவர்கள் தேர்ச்சியுடையவர்களாக பத்தம வகுப்பு வரைக்கும் ஆர்வத்தோடு கற்பதால் தம் 15 ஆவது வயதில் ஐந்து, ஆறுமொழிகளை பேசி புரிந்திடும் ஆற்றலுடையவராக இருக்கிறார்கள்.

Hega
02-03-2012, 08:43 PM
சுவிட்சர்லாந்து 1848 இல் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது.

இத்தேசத்தின் வரலாறு என்பது 150,000 ஆண்டுகளுக்கும் முன்பே ஆரம்பிக்கப்ட்டதாக தெரிகிறது. கி.மு. 5300 ஆம் ஆண்டளவில் இங்கே மக்கள் விவசாயகுடியிருப்புக்களை உருவாக்கி வாழ்ந்ததற்கான தொன்மையான தடயங்களும் உண்டென தெரிகிறது.

Hega
05-03-2012, 07:39 PM
சுவிஸ் தேசத்தின் மொழிகளும், பேசப்படுவோர் வீதங்களும்

சுவிஸ் தேசத்தின் மொழிகளும், பேசப்படுவோர் வீதங்களும்
சுவிஸ் நாட்டின் அமைப்பும், அத*ன் எல்லைக*ளோடு தொட*ர்புடைய*தாக* அப்பிராந்திய* ஆட்சி மொழியும் இரு ந்தாலும் இச்சிறிய* நாட்டில் ம*க்க*ள் த*ம*கக்குள்ளான* க*ட்டுகோப்புட*னே நாட்டின் பொது ச*ட்ட*திட்ட*ங்க*ளுக்கு க*ட்டுப*ட்டு வாழ்வ*த*னால் இய*ற்கை வ*ள*ங்க*ள் எதுவும*ற்ற* இந் நாடு முழு உல*க*மும் ஆச்ச*ரிய*ப*டும் வ*ண்ண*ம் முன்னேறியுள்ள*து என்பேன்.


நாடும் மொழியும்


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/swiss1.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/swiss.jpg


ஜேர்ம*ன் மொழி பேசுவோர் சுவிஸில் மொத்த* ம*க்க*ள் தொகையான 7.7 மில்லிய*ன் ம*க்க*ள் தொகையில் 64 வீதமான*வ*ர்க*ள் அதாவ*து கிட்ட*த*ட்ட* 4.6 மில்லிய*ன் ம*க்க*ள் ஜேர்ம*ன் மொழியை பேசுகின்ற*ன*ர். ஜேர்ம*ன் மொழியிலும் எழுத்து மொழி என்ப*து எழுத்து மொழி வேறாக*வும், பிராந்திய*த்துக்கேற்ப* பேச்சுமொழி வேறாக*வும் இங்கே இருப்ப*து இங்கே குறிப்பிட*த்த*க்க*து. ஜேர்மன் ஜேர்மன் என்பது எழுத்து மொழியாகவும், சுவிஸ் ஜேர்மன் என்பது பேச்சு மொழியாகவும் கொள்ளப்படும், நம்மூரில் மதுரைதமிழ், சென்னைதமிழ், யாழ்ப்பாணத்தமிழ், மட்டக்களப்பு தமிழென பேசும்போது சில வார்த்தைகள் புரியாது நம எப்படி சிரமப்படுவோமே குழப்பங்கள் இங்கேயும் உண்டு. நாட்டின் ஒரு மாநிலமான சூரிச்சில் பேச்சும் பேச்சு ஜேர்மன் இன்னொரு மாநிலமான பேர்ன்னில் வசிப்போருக்கு புரிதலில் குழப்பம் தரும்.


ப்ரெஞ்சு மொழி பேசுவோர் 7.7 மில்லியன் மக்கள் தொகையில் 20 வீத*மாக*வும் அதாவ*து 1.5 மில்லியோனாக*வும் இருக்கிறார்க*ள்.


இத்தாலி மொழியை பேசுவோராக* முழு ம*க்கள் தொகையில் 6.5 வீத*மாக*வும் அதாவ*து 0.5 மில்லியோனாக*வும் இருக்கிறார்க*ள்.


உரோம*ன்ஸ் மொழி எனப்ப*டும் சுவிஸின் மிக*பிர*தான*, க*லாச்சார*, ப*ழைமை வாய்ந்த* மொழி அழியாம*ல் இன்னும் முழும*க்க*ள் தொகையில் 0.5 வீத*மாக*வும் அதாவ*து 35,000ம*க்க*ள் ம*ட்டுமே மிக*ப்ப*ழ*மையான* இம்மொழியை பேசுகிறார்க*ள்.



Year -German----- French --Italian --Romansh--other
2000 ----63.7 ----- 20.4 -----6.5 ----- 0.5 ----- 9.0
1990 ----63.6 ----- 19.2 -----7.6 ----- 0.6 ----- 8.9
1980 ----65.0 ----- 18.4 ---- 9.8 ----- 0.8 ----- 6.0
1970 ----64.9 ----- 18.1 -----11.9 ----- 0.8 ----- 4.3
1960 ----69.4 ----- 18.9 ----- 9.5 ----- 0.9 ----- 1.4
1950 ----72.1 ----- 20.3 ----- 5.9 ----- 1.0 ----- 0.7



1950 இலிருந்து 2000 ஆம் ஆண்டுவரைக்கும் நாட்டின் மொழி வளர்ச்சி வீதம் புலம் பெய*ர் ம*க்க*ளின்ப*டையெடுப்பால் குறைவ*டைவ*தை க*வ*னிக்க*வும்.

Hega
05-03-2012, 07:40 PM
இந்த பதிவுகளில் ஏன் இடையிடையே நட்சத்திரகுறி வருகிறது என்பதை யாராவது விளக்க முடியுமா..

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-03-2012, 01:17 AM
இந்த பதிவுகளில் ஏன் இடையிடையே நட்சத்திரகுறி வருகிறது என்பதை யாராவது விளக்க முடியுமா..

ஹேகா அவர்களே, edit mode ல் உள்ளதுபோல் தோன்றுகிறது. அதைச் சரிசெய்து பாருங்கள்.:)

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-03-2012, 01:22 AM
உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக ஸ்விட்சர்லாந்து விளங்குகிறது. பலமொழிகள் பேசப்படும் நாடு. ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் உரோமன் முதலிய நான்கு தேசிய மொழிகள் கொண்டது. ஆகஸ்டு 1, 1291 இல் சுவிட்சர்லாந்து நிறுவப்பட்டதால் சுவிஸ் தேசிய தினம் ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்படுகிறது
ஸ்விட்சர்லாந்து குறித்து நிறைய தெரிந்துகொண்டேன்...நன்றி :)

jayanth
06-03-2012, 08:48 AM
இந்த பதிவுகளில் ஏன் இடையிடையே நட்சத்திரகுறி வருகிறது என்பதை யாராவது விளக்க முடியுமா..

சில இணைய தளங்களில் இருந்து "Copy" செய்யும்போது இதுபோல வரும். நீங்கள் "Copy" செய்து "Paste" செய்து இந்த நட்சதிரக்குறிகளை "Edit" செய்ய வேண்டும்

Hega
11-03-2012, 11:05 AM
ஸ்விட்சர்லாந்து குறித்து நிறைய தெரிந்துகொண்டேன்...நன்றி :)


நன்றி டாக்டர் சார்.