PDA

View Full Version : அவசரப் புத்தி



M.Jagadeesan
19-02-2012, 02:31 PM
என்காதலை நீ ஏற்றுக் கொள்ள மறுத்தாலும்
உன்காதலுக்கு உலைவைப்பேன் என்று எண்ணாதே!

முன்பே நீ நிராகரித்து இருந்தால் எனக்கு
உன்பேரில் இவ்வளவு கோபம் இருக்காது.

நான் சொன்ன அந்த ஒருவார்த்தை
ஏன் சொன்னோம் என்று எண்ணுகிறேன்.

உன்னிடம் நான் கண்ட நல்ல குணங்கள்
பெண்ணிடம் பொதுவாக இல்லாத குணங்கள்.

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று நீ எண்ணவில்லை
கறுத்தவன் சிவந்தவன் என்று நிறத்தைப் பார்க்கவில்லை.
இந்து முஸ்லிம் என்று மதத்தைப் பார்க்கவில்லை
தமிழன் தெலுங்கன் என்று இனத்தைப் பார்க்கவில்லை

நீ கண்டதெல்லாம் அன்பு ஒன்றே!

இச்சைக்கு இனியவளாய் இருந்த உன்னை நான்
கொச்சைப் படுத்திவிட்டேன் கோடிமுறை மன்னிப்பாய்.

உன்னை மணக்க நான் அவசரப்பட்ட போது

பெற்றோர் சம்மதத்தைப் பெறும் வரையில் காத்திரு
கற்றவன் புரிந்து கொள்வாய் என்று நீ சொன்னபோது

ஆணுக்கே உள்ள அவசரப் புத்தியால்
" ஓடிப் போய்விடலாமா? " என்று நான் சொன்ன வார்த்தையால்
ஆடிப் போய்விட்டாய்! அன்றுமுதல் எனை வெறுத்தாய்!

நான் சொன்ன அந்த ஒருவார்த்தை
ஏன் சொன்னோம் என்று எண்ணுகிறேன்.

Hega
19-02-2012, 04:25 PM
காதலில் காத்திருப்பு வாழ்க்கையை வெற்றிப்பதையில் கொண்டு செல்லும், அவசரக்காதல். அவசரமுடிவு அல்பாயுசுடன் முடிவடையும் என்பதை கவிதையாக்கியமைக்காய் பாராட்டுகள் ஐயா.

சிவா.ஜி
19-02-2012, 07:23 PM
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா....இல்ல புள்ள ஒண்ணு பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா....
இப்படிக் கேட்டிருந்தா....சரின்னு சொல்லியிருக்கக்கூடும்....ஹி...ஹி....சினிமா பார்த்துக் கெட்டுக்கொண்டிருப்பவர்களல்லவா நாம்.....

வாழ்த்துக்கள் ஜகதீசன்.

M.Jagadeesan
20-02-2012, 01:12 AM
ஹேகா மற்றும் சிவா.ஜி அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

பிரேம்
25-02-2012, 12:15 AM
.வடை போச்சே..!!
கவிதை அருமை சார்..

sarcharan
25-02-2012, 10:34 AM
நல்ல கவிதை!

M.Jagadeesan
25-02-2012, 12:59 PM
பிரேம்,சர்சரண் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.