PDA

View Full Version : ஆண்கள் மன்னிக்கவும்



M.Jagadeesan
19-02-2012, 03:35 AM
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா! என்று
கவி செய்தான் கவிமணி அன்று.

மாதர்படும் இன்னல்களை எண்ணிப் பார்த்திட்டால்
வேதனைதான் மிஞ்சுதடா! வேகுதடா என்நெஞ்சம் !

ஆணாதிக்க சமுதாயம் அடியோடு அறுபட்டு
பெண்ணாதிக்க சமுதாயம் பிறந்திட வேண்டுமடா!

மாதரெல்லாம் ஒன்றுகூடி மாதர் சங்கமதில்
தீது செய்யும் ஆடவரைத் தள்ளியே வைத்திடவே
தீர்மானம் செய்திட்டார் நகலைப் பாரீர்!


1 . இனிமேல் பெண்குழந்தைகளுக்கு " ஆண்டாள் " என்று பெயர் வைப்பதற்குப் பதிலாக " பெண்டாள் " என்று பெயர் வைக்கவேண்டும்.

2 . இனிமேல் இறைவனை " ஆண்டவன் " என்று அழைப்பதற்குப் பதிலாக " பெண்டவன் " என்று அழைக்கவேண்டும்.

3 . இனிமேல் ஆண்டுதோறும் கொண்டாடும் " ஆண்டு விழாவை " "பெண்டுவிழா " என்று அழைக்கவேண்டும்.

4 . முற்றும் துறந்த முனிவரை " ஆண்டி " என்று அழைப்பதற்குப் பதிலாக " பெண்டி " என்று அழைக்கவேண்டும்.

5 . இனிமேல் " ஆணவம் " பிடித்தவனை " பெண்ணவம் " பிடித்தவன் என்று அழைக்கவேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதானால் " ஆண் " என்று வருகின்ற சொற்களில் எல்லாம் ' பெண் " என்று போட்டுக் கொள்ளவேண்டும்.


இப்படிக்கு,
மேரி பெண்டனி ( மேரி ஆண்டனி - பழைய பெயர் )
மாதர் சங்கத் தலைவி.

கௌதமன்
19-02-2012, 01:38 PM
இதுக்கு பெண்கள் மன்னிக்கவும் - பகுதி 2 என்றே தலைப்பு வைத்திருக்கலாம்.

Hega
19-02-2012, 04:28 PM
உங்களுக்கு என்னாச்சு..:confused:

இதுவரை எல்லாமே நல்லாதானே போய்கிட்டிருந்தது..:angel-smiley-026:

சிவா.ஜி
19-02-2012, 07:19 PM
ஹா...ஹா....சூப்பர். இதைச்சொல்லும் மாதர் சங்க தலைவி...இந்த சங்கத்தை தன் பொழுதுபோக்குக்காய் நடத்தும் மேல்மட்ட....கீழ்த்தரம். இதை பெரிதாய் எண்ணாமல்,

மகளிருக்குக் கொடுக்கும் மரியாதையை...எப்போதும் கொடுப்போம்.

வாழ்த்துக்கள் ஜகதீசன்.

gvchandran
19-02-2012, 11:25 PM
பெண்டவன் என்பதற்கு பதில் பெண்டவள் என்று இருந்தால்தான்
பெண்ணாதிக்கம் ஏற்படும்
சம ஆதிக்கம் வந்தால் இருவருக்கும் நல்லது

jayanth
20-02-2012, 02:53 AM
இதுக்கு பெண்கள் மன்னிக்கவும் - பகுதி 2 என்றே தலைப்பு வைத்திருக்கலாம்.

பழிக்குப் பழி !!!

jayanth
20-02-2012, 02:54 AM
உங்களுக்கு என்னாச்சு..:confused:

இதுவரை எல்லாமே நல்லாதானே போய்கிட்டிருந்தது..:angel-smiley-026:

:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

aren
20-02-2012, 03:09 AM
உங்கள் மனைவியிடம் காட்டுங்கள் நீங்கள் எழுதியதை. சந்தோஷப்படுவார்கள்.

தாமரை
20-02-2012, 04:35 AM
அப்ப அத்தையை ஆண்டின்னு கூப்பிடக்கூடாது.. பெண்டின்னு கூப்பிடனும்.
பெணியே புடுங்க வேணாம்.

அன்புரசிகன்
20-02-2012, 04:40 AM
அப்ப அத்தையை ஆண்டின்னு கூப்பிடக்கூடாது.. பெண்டின்னு கூப்பிடனும்.


அப்போ முற்றும் துறந்த முனிவரும் அத்தையும் ஒன்றா????:icon_rollout:

M.Jagadeesan
20-02-2012, 05:08 AM
அத்தையைக் குறிப்பிடும் "ஆண்ட்டி " என்னும்சொல் ஆங்கிலச்சொல் ஆயிற்றே! மாதர்சங்க விதிகள் தமிழ்மொழியில் உள்ள சொற்களுக்கு மட்டுமே பொருந்தும்.

தாமரை
20-02-2012, 07:49 AM
மாதர் சங்கத் தலைவி மாத்திரம் அப்புறம் எப்படி "பெண்"டனி என்று பெயரை மாத்திகிட்டார்?

தலைவி எவ்வழி தொண்டி அவ்வழி..

ஆதி
20-02-2012, 09:22 AM
மாதர் சங்கத் தலைவி மாத்திரம் அப்புறம் எப்படி "பெண்"டனி என்று பெயரை மாத்திகிட்டார்?

தலைவி எவ்வழி தொண்டி அவ்வழி..

:D :D :D

M.Jagadeesan
20-02-2012, 09:47 AM
மாதர் சங்கத் தலைவி மாத்திரம் அப்புறம் எப்படி "பெண்"டனி என்று பெயரை மாத்திகிட்டார்?

தலைவி எவ்வழி தொண்டி அவ்வழி..


"ஆண்டனி " என்பது பெயர்ச் சொல் . ஆங்கிலச் சொல் அல்ல.

தாமரை
20-02-2012, 10:33 AM
"ஆண்டனி " என்பது பெயர்ச் சொல் . ஆங்கிலச் சொல் அல்ல.

தமிழ்ச் சொல்லும் அல்ல. மாதர் என்பதும் தமிழ் அல்ல. :D:D:D:D

ஓவியன்
20-02-2012, 10:38 AM
பெணியே புடுங்க வேணாம்.

நம்ம ஊரில் டம்ளரை பேணி என்போம்...!! :)

susibala.k
20-02-2012, 10:52 AM
1 . இனிமேல் பெண்குழந்தைகளுக்கு " ஆண்டாள் " என்று பெயர் வைப்பதற்குப் பதிலாக " பெண்டாள் " என்று பெயர் வைக்கவேண்டும்.

2 . இனிமேல் இறைவனை " ஆண்டவன் " என்று அழைப்பதற்குப் பதிலாக " பெண்டவன் " என்று அழைக்கவேண்டும்.

3 . இனிமேல் ஆண்டுதோறும் கொண்டாடும் " ஆண்டு விழாவை " "பெண்டுவிழா " என்று அழைக்கவேண்டும்.

4 . முற்றும் துறந்த முனிவரை " ஆண்டி " என்று அழைப்பதற்குப் பதிலாக " பெண்டி " என்று அழைக்கவேண்டும்.

5 . இனிமேல் " ஆணவம் " பிடித்தவனை " பெண்ணவம் " பிடித்தவன் என்று அழைக்கவேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதானால் " ஆண் " என்று வருகின்ற சொற்களில் எல்லாம் ' பெண் " என்று போட்டுக் கொள்ளவேண்டும்.


இப்படிக்கு,
மேரி பெண்டனி ( மேரி ஆண்டனி - பழைய பெயர் )
மாதர் சங்கத் தலைவி.

“ மாத்தி யோசி “ !!!!! வாழ்த்துக்கள் ஜெகதீசன் சார் !!!!!

M.Jagadeesan
20-02-2012, 11:00 AM
ஆண்டனி என்பது பெயர்ச்சொல் . தமிழ்நாட்டில் பிறந்த பலரும் ஆண்டனி என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளனர்.ஆனால் அத்தை என்ற உறவைக் குறிக்கும் " ஆண்ட்டி " என்னும் சொல் ஆங்கில மொழிக்கு மட்டுமே சொந்தமானது.

samuthraselvam
21-02-2012, 05:56 AM
வொய் திஸ் கொலை வெறி பாஸ்?

sarcharan
21-02-2012, 09:19 AM
ஹா ஹா கலக்கல்..

hu"man" எல்லாம் "hu-wo-"man" ஆகிவிட்டால், உலக மக்கள் எல்லோரும் சீனர்கள் என்று அழைக்கப்படுவார்களோ?

arun
22-02-2012, 05:03 PM
ஏன் ஏன் ? .. முடியலடா சாமி எப்படி தான் யோசிக்குறாங்களோ ..

ஸ்ரீசரண்
27-02-2012, 09:30 AM
ஆண்டவா..... காப்பாத்து!!!!!!

ம்ஹூம்........

பெண்டவா..... காப்பாத்து!!!!!!

:medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045: