PDA

View Full Version : கொள்கையா....கொள்ளையா???சிவா.ஜி
18-02-2012, 03:40 PM
நன்கு விளையும் வயலெல்லாம் இன்று
நகர விரிவாக்கத்தில் அடிபட்டு
நன்செய், புன்செய் தன்மை மாறி வெறும்
பணம்செய் எனும் பரிதாபத்தில்....
நாளைய உணவு உற்பத்தி சோதனைச்சாலையிலா
ஒரு வாய் சோறு ஒரு குளிகையிலா....
இருப்பதைத் தொலைத்து....
எதை நாடி நாமிங்கு....????

புதிய பொருளாதாரக் கொள்கை
இருக்கும் பொருள் ஆதாரத்தைக் களவாடி
செரிக்கும் உணவுக்குப் பதிலாய்
கொறிக்கும் உணவு.....அதற்காய் கழுத்தை
நெரிக்கும் கட்டணம்....அரசு
விரிக்கும் வலையில் வீழ்ந்து
வரிக்கு செலுத்தியே
வறியவராவதுதான் தலையெழுத்தா?

பன்னாட்டு வியாபாரிகள்
இந்நாட்டு மக்களின்
வளமை உறிஞ்சி
வறுமை கொடுக்க......
வழிகாட்டும் அரசாங்கம்....
ஓட்டு வாங்கியது நமது வாழ்க்கைக்கு
வேட்டு வைக்கவா???

jayanth
18-02-2012, 03:45 PM
அடுத்த முறை ஒட்டு கேட்க வந்தால் வேட்டு வைப்போம் நாம்.

செல்வா
18-02-2012, 03:56 PM
விவசாயத்தை ஊக்குவிக்காதிருத்தல்.
விளைநிலங்களை விட்டு(ற்று)விடுதல்
நீராதாரங்களைப் பேணாதிருத்தல்
விதையற்ற அல்லது மலட்டுத் தாவரங்களை உருவாக்கி விதைக்காக நிறுவனங்களைச் சார்ந்திருக்கச் செய்தல்.

இவையனைத்தும் யாரோ அல்லது ஏதோ சக்திகளின் திட்டமிடலாகவே தான் எனக்குப் படுகிறது. நமது அரசாங்கங்களும் இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
அவர்களுக்கு அவர்களைப் பற்றிக் கவலைப்படவே நேரம் போதவில்லை இதில் நாட்டைப் பற்றியும் மக்களைப்பற்றியும் எங்கேக் கவலைப்படுவது.

வருங்காலத்தில் ரேஷனில் தானியங்களைக் கொடுப்பதற்குப் பதில் உணவே கொடுக்கப் படலாம்.
வீட்டில் சமைப்பது தேவையற்ற வேலையாகலாம்.

சமூக அவலத்தைச் சுட்டும் கவிதைக்கு வாழ்த்துக்கள் அண்ணா..!

பிழைகள் சில : பணம், செரிக்கும், நெரிக்கும்

கீதம்
18-02-2012, 10:31 PM
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை என்றார் அன்று!

சுழலும் உலகம் ஏரைப் பின்தள்ள அதனால்
உழல்கிறது உழவரின் நிலை இன்று!

மனத்துள் திணறும் ஆதங்கத்தைக் கவிதையுள் திணித்தவிதம் அற்புதம்.

பாராட்டுகள் அண்ணா.

M.Jagadeesan
18-02-2012, 11:46 PM
ஆட்சிமாற்றம் வேண்டி ஓட்டளித்தார் மக்கள்
ஆட்காட்டி விரலிலே கரும்புள்ளி இட்டார்
முகத்திலே கரிபூச அச்சாரமாய் அன்றுவிரல்
நகத்திலே கரிபூசிய விந்தையை என்னசொல்ல?

சிவா.ஜி
19-02-2012, 06:57 PM
நிச்சயம் வேட்டு வைக்கத்தான் வேண்டும் ஜெயந்த். எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே.

நன்றி ஜெயந்த்.

சிவா.ஜி
19-02-2012, 07:00 PM
ஏதோ சக்திகளின் திட்டம்தான் செல்வா. இயற்கையை விடுத்து செயற்கையை நாட கட்டாயப்படுத்தும் அந்த அந்நிய சக்திக்கு நமது ஆட்சியாளர்களே துணை போகிறார்கள்.(நான் மாநிலத்தை சொல்லவில்லை....மத்தியத்தை சொல்கிறேன்...அங்குதானே உலக மகா கொள்ளைக்காரியிருகிறாள்.....கேடுகெட்ட நேருவின் குடும்பத்தில்.


எழுத்துப்பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் செல்வா.

சிவா.ஜி
19-02-2012, 07:04 PM
உழந்தும் உழவே தலை...இப்போது நீங்கள் சொல்வதைப்போலத்தான்ம்மா...உழவர் தலை உழல்கிறது......காக்கப்படுவாரா....அல்லது...இன்னமும் தாக்கப்படுவாரா.....ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்(மத்திய ஆட்சியாளர்களுக்கே)

(நான் மறுபடி மத்திய ஆட்சி என்பதற்கானக் காரணம்.....அவர்கள்தான் இதற்குப் பொறுப்பு என்பதால்தான் மற்றபடி...மாநில ஆட்சியின்பால் உள்ள அபிமானத்தால் அல்ல)

நன்றி தங்கையே.

சிவா.ஜி
19-02-2012, 07:06 PM
நன்றி ஜகதீசன். நான் தொடர்ந்து சொல்வதைப்போல....இது மாநில அரசின் பிரச்சனையில்லை......இத்தாலிக்காரியின் கையில் இருக்கும் கேடுகெட்ட மத்திய அரசின் பிரச்சனை.

arun
20-02-2012, 04:07 PM
இரண்டு கைகள் சேர்ந்து தான் ஓசை வருமே ஒழிய ஒரு கையால் ஓசை வருமா என்பதை தாங்கள் கண்டிப்பாக விளக்க வேண்டும்

காலத்துக்கு தக்கபடி மாறும் அரசியல்வாதிகள் போல நாம் ஏன் இருக்க வேண்டும் !

சிவா.ஜி
20-02-2012, 04:17 PM
குத்த வரும் எதிரியின் கைகளைப் பிடித்துக்கொண்டு....தன்னைக் குத்த இன்னும் அழுத்தம் கொடுப்பதை இருகை ஓசை என்கிறீர்களா.....தன் நிலத்துக்கு அதிகமாய் பணம் கிடைக்கிறதே என நினைத்து மட்டும் விவசாயி தன் நிலத்தை விற்பதில்லை அருண்.

இடைத்தரகர்களின் மூளைச்சலவை(இவர்கள் புத்தி எங்கே போயிற்று என்று அறிவுஜீவியாய் யோசிக்க வேண்டாம்....அவர்கள் சாதரணர்) மற்றும் இனி இந்த தொழிலைத் தொடர முடியுமா என்ற அடிப்படை பயம்(விவசாயக் கூலிக்கு இப்போது யாருமே வருவதில்லை...எல்லாம் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஓபி அடிக்கிறார்கள். பத்தாததுக்கு இலவசங்கள்....அதாவது விலையில்லா பொருட்கள்)

அதனால்தான் தான் காலங்காலமாய் பிழைத்த நிலத்தை உழவன் விற்கிறான்.

நகரவாசிகளுக்கு இது புரியாது.

நன்றி அருண்.

samuthraselvam
21-02-2012, 05:39 AM
அந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை (?!?!?!?) செய்பவர்களிடம் எங்க தோட்டத்துக்கு பக்கத்தில் இருக்கும் பாசன கால்வாயை சுத்தப்படுத்த வந்தவங்ககிட்ட கேட்டேன், "ஏன் இப்படி வேலை செய்றீங்க? வாங்கற காசுக்கு கொஞ்சமாவது வேலை செய்ங்க" அப்படின்னு...
அவங்க அதுக்கு ஒரு காரணம் சொன்னாங்க பாருங்க தலையில அடிச்சுக்கலாம் போல இருந்தது...

"அரசாங்க பணத்தை எவன் எவனோ கொள்ளை அடிக்கிறான். நாங்களும் கொஞ்சம் வேலை செய்யாம வாங்கினா அரசாங்கத்துக்கு ஒண்ணும் நஷ்டமாகாது" இப்படி சொல்லுறாங்க...

அவன் அடிச்சாலும் இவன் அடிச்சாலும் போறது நம்ம பணம்தான்னு இவங்களுக்கு எப்ப தான் புரியுமோ?

கவிதை நல்ல இருக்கு அண்ணா..

arun
21-02-2012, 05:46 PM
ஆம் நான் நினைத்ததில் பாதியை தான் நீங்கள் சரியாக சொல்லி உள்ளீர்கள் அதாவது விலையில்லா பொருள்களின் தாக்கம் சோ இதை தான் இரு கை ஓசை என்று சொன்னேன் ( மத்திய மற்றும் மாநில அரசு இரண்டுமே இதற்கு பொறுப்பு )

புரிதல்களுக்கு நன்றி !

சிவா.ஜி
21-02-2012, 06:14 PM
நன்றி அருண்.