PDA

View Full Version : மெய்நிகர் மாயத்தோற்றம் (Virtual Reality) - 1



lavanya
22-12-2003, 10:02 AM
நன்றி : நண்பர் விஜயநிலா M.Sc,M.E

மெய்நிகர் மாயத்தோற்றம் (Virtual Reality)

Forrest Gump என்ற ஆங்கில படத்தில் முழங்காலுக்கு கீழே இரண்டு கால்களும் அற்ற
நிலையில் சக்கர நாற்காலியில் வரும் ஒரு கதாபாத்திரம் மிக தத்ரூபமாக
படமாக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதை தட்டி சென்றுள்ள இப்
படத்தின் கதாநாயகன் முன்னால் அமெரிக்கா ஜனாதிபதி கென்னடியை சந்தித்து கை
குலுக்குவது போல ஒரு காட்சி பார்ப்போரை பரவசப்படுத்தியது.இதுதான் விர்ச்சுவல்
ரியாலிட்டியின் சினிமா அறிமுகம்.

The Mask என்ற படத்தில் ஜிம்கேரி செய்யும் அத்தனை முக சேஷ்டைகளும் கோணல்
களும் எல்லோரையும் ரசிக்க வைத்தது. Elastic Reality என்னும் மென்பொருள் கொண்டு
இப்படங்களில் Visual Effect களை படமாக்கினார்கள்.

அப்புறம் வந்த மற்றொரு ஆங்கில படமான The Memories of invisible man
என்ற ஆங்கில படத்தில் ஹீரோவின் உடல் பாகங்கள் மற்றவர்களுக்கு தெரியாது.இவற்றின்
பின்னணி காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டு பின்பு ஒவ்வொரு பிரேம் ஆக முதலில்
டிஜிட்டலைஸ் செய்து கணிணியின் நினைவகத்தில் வைத்து கொண்டு பின் அதை மீண்டும்
டிஜிட்டலை செய்து 0 மற்றும் 1 ஆக மாற்றப்பட்ட ஹீரோவின் உடல் உறுப்புகளுக்கான
பகுதியை மட்டும் தனியே பிரித்து அழித்து விடுவார்கள். பின்பு பின்னணி காட்சிகளுடன்
கை கால்கள் அழிக்கப்பட்ட நிலையில் உள்ள ஹீரோ இணைக்கப்படுவார்.தற்போது
முழுமையான படம் தயார். என்ன உழைப்பும் பணமும் கொஞ்சம் செலவாகும். இது
பின்னாளில் ஒரு தொகுக்கப்பட்ட மென்பொருளாய் வர காதலன் படத்தில் 'முக்காலா
முக்காபுலா ' பாட்டில் பயன்படுத்தி எல்லோரையும் நம்மவர்கள் அசத்தினார்கள்.

1980 களில் உருவான ஜாஸ் (Jazz) படத்தை உருவாக்க ஸ்டீவன் ஸ்பீல்பர்க்
பிரம்மாண்டமான பொம்மை சுறா மீன்களை உருவாக்கி திகைக்க வைத்தார்.ஆனால்
ஜுராஸ்ஸிக் பார்க் அவரது கைவண்ணத்தில் வெளிவந்த போது உலகமே வியந்து போனது
பலரும் அவர் பொம்மைகளை ராட்சசத்தனமாக உருவமைத்து உலவவிட்டுள்ளனர் என்றே
முதலில் நினைத்தனர்.

Industrial Light and Magic என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திதான் மிகப்
பெரிய மற்றும் சிறிய டயனோஸர்கள் உருவாக்கப்பட்டன.சிறப்பான 3D Software ஆன
Story Board என்ற மென்பொருள் உதவியுடன் நூற்றுக்கு மேற்பட்ட கணிப்பொறி
வரைவாளர்கள் உதவியுடனும் உருவாக்கப்பட்டு விலங்குகளின் அசைவுகள் நுட்பமாக
கவனிக்கப்பட்டு செயற்கைத்தனம் எள்ளளவும் இல்லாமல் வடிவமைகப்பட்டது.

சமயலறையில் டயனோஸர் சிறுவர்களை தரையில் தன் விரல்களால் தட்டியபடியே
தேடும். இந்த கிட்சன் செட் முழுதும் universal Studio வில் அமைக்கப்பட்டு
படமாக்கப்பட்டது.பின்பு துரத்துகின்ற டயனோஸர் கணிணி உதவியால் வரையப்பட்டு
இணைக்கப்பட்டது.மிகத் துல்லியமாக அமைந்த இக்காட்சி பார்ப்போர் அனைவரையும்
உறைய வைக்கும் அளவிற்கு இருந்தது.

சில காட்சிகளுக்கு மட்டும் ஹைட்ராலிக் சிஸ்டம் கொண்ட ராட்சஸ டயனோஸர்கள்
வடிவமைக்கப்பட்டன.விமான stimulator போன்று டயனோஸரை இயக்க Electronic
Stimulator தளங்கள் அமைக்கப்பட்டன.இவைகள் எல்லாம் ஒரு கம்ப்யூட்டருக்கு
கட்டுபட்டிருந்தன.

மைக்கேல் கிரீட்டன் எழுதிய ஜுராஸிக் பார்க் படமானதை தொடர்ந்து அவரின் மற்றொரு
நாவலான Disclousure என்ற படம் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில்
பதிவானது.படத்தில் வரும் கதாபாத்திரம் மைக்கேல் டக்ளஸ் இவரை சுற்றி மெல்லிய
நீலநிற லேஸர் ஒளித்திரை படர்ந்திருக்கும்.

இது போன்ற இல்லாத ஒன்றை இருப்பதாக காட்ட உதவுவதுதான் விர்ச்சுவல் ரியாலிட்டி
தொழில் நுட்பம். இந்த தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்திய பிதாமகன் ஜெரான் லேனியர் என்பவர் ஆவார்.3D கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் முதலில் பொய்யான
செயற்கை உலகை உருவாக்கி காட்ட இயலும் என்ற தத்துவ கோட்பாடு கூட ஜெரான்
லேனியரின் கூற்றுதான்....

ஒரு வி.ரி புரோக்ராமுக்கு நான்கு முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டி
யிருக்கிறது..
1.தோற்றத்தின் முதல் முனை (Visual View Point)
2.செலுத்துதல் ( Navigation)
3.மாற்றி கொள்ளுதல் ( Manipulation)
4.ஆழ்ந்து விடுதல் ( Immersion)

1.தோற்றத்தின் முதல் முனை (Visual View Point)
வி.ரி புரோக்ராமைப் பயன்படுத்தப் போகிற நபரின் இருப்பிடம் அவர் அமர்ந்திருக்கின்ற
கோணம் ஆகியவற்றை கம்ப்யூட்டர் கணக்கிட்ட பின் தோற்றங்களையும் வரைபடங்களையும் அதற்கேற்றார்போல் மாற்றிக் கொள்கிறதுஇதற்கு முதல்நபர் இருக்கும்
இடத்தை துல்லியமாக குறித்து கொள்ளல் அவசியம்.

2.செலுத்துதல் ( Navigation)

மேற்சொன்னபடி முதல் நபர் இருக்கும் இடத்தின் சமன்பாடுகளை இஷ்டப்படி மாற்றி
கொள்வதால் விர்ச்சுவல் உலகத்திற்குள் நுழைவது எளிதாகிறது...

3.மாற்றி கொள்ளுதல் ( Manipulation)
நினைத்தபடி காட்சிகளோடு தொடர்பு கொண்டு அந்த காட்சிகளுக்குள்ளேயே ஆழ்ந்து
போவதோடு இஷ்டப்படி காட்சிகளை மாற்றிக் கொண்டு விடுதல் என்ற நிலையை
குறிக்கிறது.

4.ஆழ்ந்து விடுதல் ( Immersion)
வி.ரி புரோக்ராமின் கடைசி நிலையான இதில் நீங்கள் கண்களை திறந்ததும் நிஜ
உலகிற்கு பதிலாக மாய உலகை காணலாம்.நீங்கள் பொய்யான காட்சியைப் பார்த்தாலும்
உண்மையான காட்சியைப் போலவே உணர்கிறீர்கள்.

வி.ரி - யின் முக்கிய கவர்ச்சியான அம்சமே நீங்கள் நினைத்த விதத்தில் அதை செயல்
படுத்தலாம் என்பதே .கீழ்க்கண்ட விஷயங்களை நீங்கள் நிஜத்தில் நிகழ்த்த முடியுமா..?
வி.ரி.யில் நூறு சதவீதம் முடியும்

1. நீங்கள் விரும்பினால் ராஜீவ்காந்தி,எம்.ஜி.ஆர் அன்னை தெரஸா மூவருடனும் ஒரு
டைனிங் டேபிளில் உணவருந்தலாம்.

2. ஐஸ்வர்யாவுடன் கை கோர்த்தவாறு நயாகரா பக்கம் உலர்த்துவிட்டு வரலாம்

3. பிரிந்து போன சார்லஸையும் இறந்து போன டயானாவையும் ஒன்று சேர்த்து வைக்கலாம்

இப்படி எல்லாம் சொல்கிறபோது வி.ஆர் என்பது ஏதோ மிக புதிதான சமாச்சாரம் என்று
நினைக்கத் தோன்றுகிறதா...? வி.ஆர் என்பது புதிய சமாச்சாரம் இல்லை.நாம் கனவு
காண்பது கூட நம் உடலால் நிகழ்த்தப்படும் ஒரு வி.ஆர் புரோக்ராம்தான்.நம் உள் மன
ஆசையின் விளைவுதான் கனவு என்று சொல்ல கேட்டிருப்பீர்கள்.அப்படியானால் நாம்தான்
கனவை நாம்தான் விரும்பி ஏற்கிறோம்.நம்மால் நிஜத்தில் செய்ய இயலாத காரியங்களை
கனவில் செய்து முடிக்கிறோம்.அந்த கனவில் மிக ஆழ்ந்து உணர்ச்சிகளை வெளிக்காட்டவும்
செய்கிறோம்.ஆக கனவு காண்பதுதான் உலகின் முதல் வி.ஆர் புரோக்ராம்.


(தொடரும்)

இக்பால்
22-12-2003, 10:36 AM
லாவண்யா தங்கை ... ரொம்ப நாளாக இந்த டெக்னிக் எல்லாம் கற்றுக்
கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனாலும் அறிந்து கொள்ள
முயலவில்லை. இன்று தானாக என் முன் தந்துள்ளீர்கள். நன்றி தங்கை.
-அன்புடன் அண்ணா.

puppy
23-12-2003, 05:24 AM
லாவ் அருமை...ஒரு சின்ன திருத்தம்....
ஜாஸ் (JAWS) - 1975-ல் வந்தது.....அதை மட்டுமே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க எடுத்தார்...அடுத்த பாகங்கள் நிறைய பேர் இயக்கினார்கள்.....1978-ல் வந்த
ஜாஸ்-2 தான் கொஞ்சம் உருப்படியான ஒன்று......

puppy
23-12-2003, 05:32 AM
மேலும் படிக்க
http://www.web3d.org/vrml/vrml.htm
எல்லாமே ஒரே இடத்தில் இங்கே
http://www.hitl.washington.edu/projects/kn...e/onthenet.html (http://www.hitl.washington.edu/projects/knowledge_base/onthenet.html)

lavanya
23-12-2003, 09:42 AM
நன்றி பப்பி..உங்கள் திருத்தத்துக்கு....கூடுமானவரை சரியான
தகவல்களை தர முயற்சிக்கிறேன்...

நன்றி * நன்றி அந்த ஸ்பெஷல் சுட்டிக்கு

poo
23-12-2003, 11:42 AM
எங்கேயோ பறப்பதுபோன்ற உணர்வு..

நிறைய தெரிந்துகொள்கிறோமே என்ற ஆச்சர்யம்...

நன்றி அக்கா!!!

இளசு
23-12-2003, 10:06 PM
கனவு மட்டுமல்ல
கற்பனையில் கூட வருமில்லையா லாவ்?

அழகான அறிமுகம்..
மிக்க நன்றி லாவ்..
என் நண்பர் ஒருவர் இதைப்பற்றி ஒருமுறைக் குறிப்பிட்டபோது
கேள்விப்பட்ட தொழில்நுட்பம்.
இன்று உங்களால் மேல் தகவல்கள் அறியப்பெற்றேன்..

இரு பரிமாண ( C T. Scan) குடல் படங்களை மென்பொருளால்
முப்பரிமாண படங்களாய் தந்து
குடல் உள்ளே நேரடியாய் பார்க்கும் எண்டோஸ்கோபி தரும் அளவு
விவரங்களைத் தரும் Virtual Colonoscopy..
போன்வாரம் கூட அமெரிக்க மருத்துவர்களால் சிலாகிக்கப்பட்ட
கட்டுரை வந்தது.

வலி இன்றி, பக்கவிளைவு இன்றி நோய்க்குறிகள் கண்டறியும்
இத்தொழில் நுட்பம், இன்னும் மென்பொருள் மேம்பாடுகளால்
பரந்த பயனாளர்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கிறேன்.

தமிழ்குமரன்
28-12-2003, 02:38 PM
மிக அருமையான படைப்பு.

poornima
25-01-2009, 05:59 AM
மெய்நிகர் மாயபிம்பங்கள் கருத்தமைவுகள் இன்று மிக எளிமையாய் போய்விட்டன

tamizhan_chennai
15-02-2009, 01:35 AM
அருமையான படைப்பு...
ஒரு புது விஷயத்தை தெரிந்து கொண்டேன்...