PDA

View Full Version : பெண்கள் மன்னிக்கவும்!!!



jayanth
17-02-2012, 05:38 AM
ஆதியில் கடவுள் இவ்வுலகை படைத்தான்.
ஓய்வெடுத்தான்
ஆணைப்படைத்தான்.
ஓய்வெடுத்தான்
பின்னர் பெண்ணைப்படைத்தான்............
அன்று முதல் கடவுளுக்கும் ஓய்வு இல்லை ஆணுக்கும் ஓய்வு இல்லை !!!

பி கு : பெண்களை புண்படுத்துவது என் நோக்கமல்ல

தாமரை
17-02-2012, 08:30 AM
ஆமாங்க.. சலிப்பு ஏற்பட்டால்தானே ஓய்வெடுக்க...

கீதம்
17-02-2012, 10:20 AM
ஆதியில் கடவுள் இவ்வுலகை படைத்தான்.
ஓய்வெடுத்தான்
ஆணைப்படைத்தான்.
ஓய்வெடுத்தான்
பின்னர் பெண்ணைப்படைத்தான்............
அன்று முதல் கடவுளுக்கும் ஓய்வு இல்லை ஆணுக்கும் ஓய்வு இல்லை !!!

பி கு : பெண்களை புண்படுத்துவது என் நோக்கமல்ல

அட, பெருமையாகத்தானே சொல்லியிருக்கீங்க. அப்புறம் ஏன் இந்த பிகுவெல்லாம். :)

aasaiajiith
17-02-2012, 10:23 AM
ஒருவேலை, உலகம் வழக்கத்தை விட
உற்ச்சாகமும் , உத்வேகமும்
கொண்டு மகிழ்ச்சியின் திளைப்பில்
கூடுதல் வேகமாய் உழலுவதாலோ??
ஓய்வின்றி, ஓய்வு தேடி தவிக்கின்றார்
வலுவிழந்த வல்லமை படைத்தவர் ???

சிவா.ஜி
17-02-2012, 11:32 AM
நல்லக் கற்பனை. வாழ்த்துக்கள் ஜெயந்த்.

arun
18-02-2012, 01:03 PM
இதில் சிரிக்க ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது

Dr.சுந்தரராஜ் தயாளன்
18-02-2012, 03:21 PM
சரிங்க....பெண்களைப் படைக்காதிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதையும் கொஞ்சம் யோசியுங்க :D

aren
19-02-2012, 01:23 AM
இது உண்மைதானே.

கௌதமன்
19-02-2012, 05:49 AM
அகிலத்தைப் படைத்தான் அதில் ஆணையும் படைத்தான்
ஆயினும் அசலமாய் இருந்தான் ஆண்டவன்.
அசலமாய் இருந்ததால் இருந்தும் இல்லாமலிருந்தான்
ஆதலால் ஆரணங்கைப் படைத்தான் அவசரமாய்
அகிலத்தின் ஆதார அச்சு அதுதானென உணர்ந்தான்
அன்றிலிருந்தே தன் இருப்பையறிந்தான் ஆண்டவன்

M.Jagadeesan
19-02-2012, 07:10 AM
Q : Why did God create Man before Woman ?

A : Practice makes one perfect.

sarcharan
25-02-2012, 10:44 AM
ஆதியில் கடவுள் இவ்வுலகை படைத்தான்.
ஓய்வெடுத்தான்
ஆணைப்படைத்தான்.
ஓய்வெடுத்தான்
பின்னர் பெண்ணைப்படைத்தான்............
அன்று முதல் கடவுளுக்கும் ஓய்வு இல்லை ஆணுக்கும் ஓய்வு இல்லை !!!

பி கு : பெண்களை புண்படுத்துவது என் நோக்கமல்ல


இனிமேல் படைக்கும் தொழிலை ஆண்களும் பெண்களும் பார்த்துக்கொள்வார்கள் என்று கடவுள் நினைத்திருக்கக்கூடும் :D:D:D


சரிங்க....பெண்களைப் படைக்காதிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதையும் கொஞ்சம் யோசியுங்க :D

உலகம் அமைதியாய் இருந்திருக்கும். நகை அங்காடிகள், சேலை கடைகள், இல்லாதிருக்கும்.:lachen001:

அண்டை வீட்டு செய்திகளை அரசல்புரசலாக அலச தூதுவர்கள் இல்லாதிருந்திருப்பார்கள்.:aetsch013:

மொத்தத்தில் உலகம் முழுவதும் "சிட்டி"களால் நிறைந்திருக்கும்

ஷாப்பிங் மால்ஸ் முழுவதும் மதுபான கடைகள் நிறைந்திருக்கும், இத்யாதி இத்யாதிகள்...



Q : Why did God create Man before Woman ?

A : Practice makes one perfect.

ஐயா, நீங்க என்ன சொல்ல வர்றீங்க? இரண்டில் ஒன்று சொதப்பல் என்றா? :D:D:D:D

ஸ்ரீசரண்
27-02-2012, 09:24 AM
அருமை!!!

அருமை!!!

கலக்குங்க நண்பரே.....

உமாமீனா
18-03-2012, 12:07 PM
கற்பனை சும்மா சொல்லகூடாது.. நல்ல ரசனை

அனுராகவன்
06-08-2012, 07:41 PM
வாழ்த்துக்கள் ஜெயந்த்.

seguwera
06-08-2012, 07:51 PM
பெண்ணுக்காவது ஓய்வு இருக்கா?

jayanth
07-08-2012, 05:34 PM
பெண்ணுக்காவது ஓய்வு இருக்கா?

ஓய்வு இல்லேன்ன ஒலகம் தாங்குமாங்க...???

jayanth
07-08-2012, 05:38 PM
அருமை!!!

அருமை!!!

கலக்குங்க நண்பரே.....


கற்பனை சும்மா சொல்லகூடாது.. நல்ல ரசனை


வாழ்த்துக்கள் ஜெயந்த்.

பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே/நண்பிகளே...!!!