PDA

View Full Version : பத்தாம் ஆண்டில் மன்றத்தாய்....!!!சிவா.ஜி
16-02-2012, 07:40 PM
பத்தாம் ஆண்டு கண்ட எங்கள் மன்றத்தாய்,
பார்த்தவரெல்லாம் பாராட்டும்
சீர் கொண்ட பதிவுககள்
நேர்கொண்ட பார்வைகள்
ஊர் கொண்டாடும் உன்னதங்கள்
பேர் சொல்லும் பிள்ளைகள்
பார் மெச்சும் பதிவர்கள்...
கார் கால மழையைப் போல்
சார்பில்லா பார்வைகள் என
வேர் எல்லாம் மனிதம் ஊட்டி
நேர் பார்வை பார்க்க வைத்தவள்.....
உலகம் உள்ளவரை உய்த்திருக்க
உள்ளம் நெகிழ்ந்து உவகையோடு
உயரம் எய்த வாழ்த்துக்களை உதிர்க்கிறேன்...!!!!

கீதம்
16-02-2012, 09:36 PM
மன்றத்தாயே என் மாற்றன்னை,
மகவென மடியில் ஏற்றென்னை
பெருமிதங்கொள்ள வைத்தாள்,
பெருமைகள் பேசவைத்தாள்.

அவள் தாய்மையின் பூரிப்பில்
இறுமாந்துக் கிடக்கிறாள்,
நாமோ சேய்மையிலிருந்தும்
தமிழ்மாந்திக் களிக்கிறோம்.

தமிழமுது ஊட்டி, வாழ்வினிமை காட்டி,
பேதைமை நீக்கி, பெருமைகள் ஆக்கி,
அன்னையென்னும் அருஞ்சொல்லுக்கு
அவளே அற்புத மாற்றானாள்.
அவள்பாதம் சமர்ப்பிக்கும் படைப்புக்கெல்லாம்
அவளே உணர்வின் ஊற்றானாள்.


தங்களோடு நானும் இணைந்து வாழ்த்துகிறேன் அண்ணா.

மன்றத்தாய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செல்வா
17-02-2012, 05:30 AM
மனம் நெகிழ்கிறது... உறவுகளின் மன்றத்தின் பாலுள்ள ஒன்றிப்பைக் கண்ணுறும் போது.

சிவா.ஜி
17-02-2012, 11:42 AM
அருமையான கவிக்கு வாழ்த்துக்கள் தங்கையே.

சிவா.ஜி
17-02-2012, 11:44 AM
மன்றம் நம்மோடு ஒன்றிருக்கும்போது நமது ஒன்றிருப்பும் அவசியம்தானே செல்வா. தாய்க்கு வாழ்த்து......பிள்ளைகளின் மகிழ்ச்சி..

கலையரசி
17-02-2012, 02:17 PM
மன்றத்தாய்க்கு அற்புதமான வரிகளால் கவிதையஞ்சலி செலுத்தியிருக்கும் சிவாஜி சாருக்கும் கீதத்துக்கும் பாராட்டுடன் கூடிய நன்றி.
விழுதுகளாயிருந்து தாங்கும் உங்களைப் போன்ற குழந்தைகள் இருக்கும் வரை ஆலமரம் போல் தழைத்தோங்கியிருக்கும் மன்றத்தாய்க்கு என்ன கவலை?

சிவா.ஜி
17-02-2012, 06:49 PM
ரொம்ப நன்றிங்க மேடம்.

Hega
18-02-2012, 01:32 AM
தமிழ் மன்ற பூங்காவில்
தாமதமாய் வந்த
காரிகையிவளென்
சொல்வேனேது
சொல்வேன் ...

வந்தாரை வரவேற்று
வரம் நீ என்றுரைத்து
விழி நிறைவாய் விருந்திட்டு
மன்னிறைவாய் கருத்திட்டு

வந்த நாள் முதல் இந்த
நாள் வரை எனை மறந்தாயோ
மிஸ்யூ மா என சொல்லி
மாதமொரு மடலுமிட்டு

ஆதி முதல் அந்தம் வரை
நீ யெந்தன் மகளம்மா
உன் கரம் தட்டும் எல்லாமே
எனக்கிங்கே பிடித்தமம்மா

உன் கரம்பிடித்து நடத்தி
செல்ல இங்குனக்குண்டு
சொந்தமம்மா்வென்று
சொல்லி நிதம்

பந்தமும் பாசமும்
விந்தையான இவ்வுலகில்
நிந்தை தாங்கும் இதயமதை
தந்தவள் நீயல்லவோ

உன் நிழல் தனிலே
என் சிந்தை குறிஞ்சி
பூவாயல்ல குறிஞ்சியின்
பூவாய் மலர்கிறதே

யாரென்று நானறியேன்
எவறென்றும் எனையறியார்
யாரோவெல்லா மிங்கே
வேரேயாகி கிளை விட்டு

நிம்மதியாய் கண்ணுறங்க
நிழல் கொடுக்கும்
மரமானவளே நீ வாழி
உன் சிறப்பும் தினம்வாழி

சொ.ஞானசம்பந்தன்
18-02-2012, 05:52 AM
மன்ற அன்பர்களுல் நான் முதன்முதலாய்ச் சந்தித்தது அன்புரசிகனை ; என் முந்தைய பதிவில் அவரது பெயரைக் குறிப்பிட மறந்தேன் . அதற்காக என்னை மன்னிக்க அவரைக் கோருகிறேன் .

சிவா.ஜி
18-02-2012, 07:13 AM
நெஞ்சை நெகி\த்தும் நல்ல கவியெழுதி மன்றத்தாய்க்கு சமர்ப்பித்த விதம் அருமை தங்கையே. உண்மைதான் இந்தத்தாயின் மடியில்தான் எத்தனைக் குழந்தைகள்.....!!

வசீகரன்
03-03-2012, 10:31 AM
அழகான நினைவுகள்...
கலையாத கனவுகள்...

வேகமும்... உணர்வுகளும்...
உற்சாகமும்... சோகமும்

சுவையும்... சோபையும்
இனிமையும்... தனிமையும்

இயல்பும்... போலியும்
பக்குவமின்மையும்.. படபடப்புகளும்

எனவெண்ணிய ஏக்கங்களும்
ஏறத்தாழ எவ்வளவோ...!!!

அனைத்தையும் அகமொழிகளாக
எழுத்துக்களில் வெளிப்படும்...
அழகான நினைவுகள்...

என்றும் இளமையாய்
அழகாய்
அதே தமிழ் மன்றம்...

தொடர்ந்திடும்... இளைஞர்களின்
இனிய தோழனாய்
அதே தமிழ் மன்றம்...

தமிழனும் தமிழும்
இருக்கும் வரை
தொடங்கி தொடர்ந்து தொடர்கிறது
அதே தமிழ் மன்றம்...

-வசீகரன்

தமிழ்கவிநேசன்
03-03-2012, 11:02 AM
மன்றத்தாய்
வானவில்லில் பூத்த முதற்ப் பூ
வாட மலர்களால்லான பூங்கொத்து
வசந்தகாலத்தின் விடிவெள்ளி
வண்ணங்கள்ளான பஞ்சவர்ணக்கிளி
வாழும் ஐந்தாம் தமிழ்ச் சங்கம்.

===> தமிழ்கவிநேசன் <===

அமரன்
03-03-2012, 10:51 PM
வெவ்வேறு கண்கள் பார்வை என்றாலும்
தாயென்ற ஒளிவீச்சு..
கவிதைகளின் உயிர் மூச்சு...!!!!

மகிழ்ந்து நெகிழ்கிறேன்.

அமரன்
03-03-2012, 10:52 PM
வாப்பா வசீ... நலம்தானே!!

சிவா.ஜி
04-03-2012, 08:27 PM
வசீ, தமிழ்நேசன்....ஆஹா...அற்புத வரிகளால் நம் மன்றத்தாய்க்கு படைத்தக் கவிபடையல்.....மனதை நெகிழ்த்துகிறது. வாழ்த்துக்கள்.....கவிஞர்களே.