PDA

View Full Version : எதார்த்தப் பிரகடனம்



inban
16-02-2012, 12:02 PM
நீண்டநாள் கழித்து
ஊருக்கு போயிருந்தேன்

தனது
வண்ணக்கதிர்களை அர்ச்சித்து
வழக்கமாக வரவேற்கும்
தெருவிளக்குகள்
மௌனத்தைப் பூசி
இருட்டில் நின்றன

வாளினைச் சுழற்றி
காலினை சுற்றும்
கருப்புநாயும்
வற்றிய வயிறோடு
உறங்கிக் கிடந்தது

அடுக்களையில்
பாத்திரங்களின் ஒழுங்கீனம்
ஓ... அம்மாவுக்கு
உடம்பு சரியில்லை

இருமியபடியே
தலை சொறியும்
அப்பாவின் கண்களில் கசியும்
விரக்தியின் வெளிப்பாடு

பூத்துக்குலுங்கிய தோட்டம்
தங்கையின் கல்யாணத்துக்கு அப்புறம்
நிர்மூலமாகிவிட்டது போலும்

எப்போது வருவோம் என
ஏக்கத்தோடு எதிர்பாக்கவைக்கும்
இந்த ஊர்தான்
இப்போது
வெறுமையோடு சிரிக்கிறது

காதலை ஏற்காத குடும்பத்திடமும்
அதன் நினைவுகளை
தாங்கிநிற்கும் சுற்றத்திடமும்
அந்தரங்கமாய் உறவாட
என்னதான் இருக்கிறது ?!

சிவா.ஜி
16-02-2012, 06:55 PM
காதலால் ஒதுக்கி வைக்கப்பட்டவனின் எண்னங்கள்.....அழகாய், அவஸ்தையாய் இங்கே கவிதையாய். வாழ்த்துக்கல் இன்பன்.

(வாளினைச் சுழற்றி
காலினை சுற்றும்
கருப்புநாயும்
வற்றிய வயிறோடு
உறங்கிக் கிடந்தது)

வால் சுழற்றி
கால் சுற்றும்
கருப்பு நாயும்
வற்றிய வயிறோடு
உறங்கிக் கிடந்தது....

எனச் சொல்லும்போது இன்னும் நன்றாய் இருக்குமே.....!!!