PDA

View Full Version : என்மீது பழிசுமத்தாதே



inban
16-02-2012, 11:53 AM
என்னை
எப்படி நீ
அவ்வாறு யோசித்தாய் ?

நீ செல்லமாக எறிந்த சில்லி
என் கன்னத்தை
காயப்படுத்தியாதாக
பதறினேனே
அப்போதா ?

உன் உடம்பு சுகவீனத்தை
தோழி வந்து சொன்னதும்
ஒன்றும் தோனாமல்
உருக்குலைந்து நின்றேனே
அதைவைத்தா ?

உனை ஏமாற்ற எண்ணி
இருண்டம்புதருக்குள்
ஒளியப்போய்
பாம்பினைப்பார்த்து
பயந்து அலறினேனே
அதனாலா ?

எதை வைத்து
என்னை
கோழை என்று
கூப்பாடு போடுகிறாய் ?

எதை வைத்து
என்னை
வாழ்க்கைத்தேருக்கு
வடம் பிடிக்க முடியாதவன்
என்று
வசைபாடித்திரிகிறாய் ?

உண்மைதான்
ஒருவகையில்
நான் கோழைதான்!

உன் சந்தன தேகத்திலே
தென்றல் தீண்டும்போதும்
எங்கே உன் தோலுக்கு வலிக்குமோ
என்று அச்சப்படும் கோழைதான்.

கண்ணே நீ நேராகவே
சொல்லிவிட்டிருக்கலாம்!

நீமறுக்கலாம்
உன் காதலின் குருத்துக்களை
நீ அறுக்கலாம்
அதற்காக என்மீது
பழி சுமத்தாதே!
என் அன்பின்மேல்
அமிலம் விதைக்காதே!

சிவா.ஜி
16-02-2012, 06:57 PM
அழகான்க் காதல்...கவிதையாய்....வாழ்த்துக்கள் இன்பன்.