PDA

View Full Version : கடன்



M.Jagadeesan
16-02-2012, 01:49 AM
கடன் இருப்பதால் எனைமணக்க
உடன்பாடு இல்லையென
உரைக்கும் காதலியே!

கதிரவனிடம் இருந்து கடன் வாங்கித்தானே
வெண்ணிலவு தண்ஒளியைத் தருகிறது!

மேகத்திடம் இருந்து கடன் வாங்கித்தானே நம்முடைய
தாகம் தணிக்கத் தண்ணீரைத் தருகிறது பூமி!

கடன் வாங்கும் கலையை பள்ளியிலே ஆசிரியர்கள்
கடன் வாங்கிக் கழித்தலில் கற்றுக் கொடுக்கவில்லையா?

காப்பிப்பொடியும் சர்க்கரையும் பக்கத்து வீட்டினிலே
கடன்வாங்கி அத்துடன் மிதமாகப் பால்சேர்த்து
சாப்பிடும் காப்பியிலே சுவையே அலாதி!

இந்தியத் திருநாடு இயங்குவதே கடனால்தான்
சிந்தித்து செயல்படுவாய் சிறியேனின் கடன் பொறுத்து
ஆட்கொண்டு என்னை அரவணைத்தல் உன் கடனே!

susibala.k
16-02-2012, 05:55 AM
கடனுக்கு மெய் பெற்றுக் காலத்தை ஓட்டும் வாழ்க்கையில் பணம் பெற்ற கடனுக்கு பழிபோடக்கூடுமோ !!! இவுலகம் தாங்குமோ !!!

கடன் அன்பை முறிக்கும் என்பதுவும் உண்மை தான் !!!

தேசத்தின் கடனடைப்பேன் திமிரான உடல் உழைப்பால் நீ மட்டும் பக்கமிருப்பின் !!!! :icon_b:

நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் !!!!!

M.Jagadeesan
16-02-2012, 11:49 AM
சுசிபாலா அவர்களின் வாழ்த்துக்கு நன்றி.

பிரேம்
25-02-2012, 12:19 AM
விடுங்க பாஸ்..த்ரிஷா இல்லனா திவ்யா..
கவிதை சூப்பர்

sarcharan
25-02-2012, 10:33 AM
நல்ல கவிதை

சிவா.ஜி
25-02-2012, 11:10 AM
கடனோடு அவனைக் காதலிப்பதும் அவள் கடன்.....

நல்லக் கவிதைக்கு வாழ்த்துக்கள் ஜகதீசன் அவர்களே.

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-03-2012, 07:45 AM
அரவணைத்தல் உன் கடனே! கவிதை அருமை :)