PDA

View Full Version : காதலர் தினம்.. தினம் தினம்...1



sathyamani
15-02-2012, 08:08 AM
நிலவு தேய்வதும் இல்லை
வளர்வதுமில்லை அது
அவ்வவ்போது ஒளிந்து விளையாடுகிறது
உனது அன்பை போல .......

sathyamani
15-02-2012, 08:12 AM
என்னதான் உறவு
உன்னைத்தவிர வேறு
எதைப்பற்றியும் எழுத மறுக்கும்
என் பேனாவிற்கும் உனக்கும் .....

sathyamani
15-02-2012, 08:17 AM
குடைக்குள் ஒளிந்து கொண்டாய்
உன்னை தொடமுடியாத
சோகத்தில் மண்ணில் விழுந்து
புரள்கிறது மழை

sathyamani
15-02-2012, 08:21 AM
என்னுள்ளே உறைந்து
போயிருக்கும்
உன் நினைவுகளை
கிளறிப்பார்க்கையில் என்
கண்ணில் ததும்பும் கண்ணீரே
என் பேனாவின் மை .....

susibala.k
15-02-2012, 09:37 AM
கற்பனை அற்புதம் !!!

susibala.k
15-02-2012, 09:43 AM
அவள் காலையாவது தொட்டு விட நினைக்கிறதோ என்னவோ !!!!

அழகுக் கவிதைக்கு வாழ்த்துக்கள் !!!!

ஆதவா
15-02-2012, 12:24 PM
அன்பு சத்யமணி அவர்களே,

காதலர்தின திரிகளை ஒன்றாக இணைத்துள்ளேன், ஒரே இடத்தில் இக்கவிதைகள் படிப்பதனால் நிறைய சௌகரியம் வாசிப்பவர்களுக்கு...

ஒவ்வொரு குறுங்கவிதைகளும் பிரமாதம். காதல், எழுத்துக்களில் விளையாடுகிறது....

வாழ்த்துக்கள்!!!

jayanth
15-02-2012, 03:46 PM
அருமையான குறுங்கவிதைகள்

சிவா.ஜி
15-02-2012, 06:12 PM
மிக அருமையான காதல் வழியும் வரிகள். வாழ்த்துக்கள் சத்யமணி.

sathyamani
16-02-2012, 03:32 AM
மன்ற உறவுகளுக்கு நன்றி

M.Jagadeesan
16-02-2012, 11:58 AM
காதல் கவிதைகள் மிகவும் நன்று.