PDA

View Full Version : மனம் ஒரு மந்திரக்குளம்



susibala.k
14-02-2012, 05:03 PM
மனம் ஒரு மந்திரக்குளம்!
என்றுமே நிறைந்திடாத எந்திரக்குளம் !
அழுகையோடு ஆரம்பித்த அதன் பயணம்
அந்தம் வரை நிறைந்திடாத நெடுந்தூரம் !

பிஞ்சு வயதில் உணர்ந்திட்ட தாய்ப்பாசம் !!
அஞ்சு வயதில் அறிந்திட்ட அன்பு வட்டம் !!
பருவ வயதில் பார்த்திட்ட பாசக்கூட்டம் !!
பாசக்கூட்டம் பழக்கிவிட்ட கனவுலகம் !!
கனவுலகம் காட்டிய கலங்கும் அனுபவம் !!

இல்லறத்தில் இனிதான அரங்கேற்றம் !
எதார்த்த வாழ்க்கையின் இன்பம் துன்பம் !
மழலை கண்டே களிப்புற்ற மனமகிழ்ச்சி !
குழந்தை வளர்ப்பில் அடைந்திட்ட மதிமயக்கம் !

சமுதாயச் சீர்கேட்டின் சங்கடங்கள் !
சங்கடங்களைத் தாண்டி வரும் சந்தோஷங்கள் !
பண்பாட்டைப் பாடிவரும் திருமணங்கள் !
தொன்றுதொட்டே வளர்த்து விட்ட வாரிசுகள் !
வாழவைத்தே மனம் குளிரும் வாழ்க்கைநெறிகள் !

வாழ்ந்து முடித்த அனுபவத்தின் நரைமுடிகள் !
நரைமுடிக்குச் சாயமிடும் நகாசுத் தருணங்கள் !
இத்தணையும் உள்ளடக்கியும் நிறைந்ததா மனமென்றால்
நித்தம் ஒரு வெற்றிடத்தை நெறியுடனே கொண்டேதான்
ஏதாவது கிடைக்குமென்றே எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்

மனம் ஒரு மந்திரக் குளம் !!!!!! :)

சிவா.ஜி
14-02-2012, 08:33 PM
மனம்......நிச்சயமாய் ஒரு மந்திரக்குளம்தான் பாலா. சில நேரங்களில் சிறிய சொற்கல் மிகப்பெரிய சலனத்தை உண்டாக்கும்....சில நேரங்களில் பாறாங்கல் சம்பவங்களையும் அமைதியாய் உள்வாங்கும்.......

அழகான கவிதை வாழ்த்துக்கள் பாலா.

கீதம்
14-02-2012, 08:40 PM
மனமென்னும் மந்திரக்குளத்தில் எறியப்படும் உணர்வுக்கற்கள் உண்டாக்கும் சலன வட்டங்கள் எத்தனை எத்தனை? ஒன்று அடங்குமுன்னே மற்றது...

மந்திரக்குளம் என்றுமே நிறைந்திடாத எந்திரக்குளம் மட்டுமன்று, மரணம் வந்து தூர்க்கும்வரை என்றுமே வற்றாத மாயக்குளமும் கூட.

நல்ல கவிக்கரு. எழுதிய விதமும் அருமை. பாராட்டுகள்.

சிவா.ஜி
14-02-2012, 08:49 PM
மந்திரக்குளம் என்றுமே நிறைந்திடாத எந்திரக்குளம் மட்டுமன்று, மரணம் வந்து தூர்க்கும்வரை என்றுமே வற்றாத மாயக்குளமும் கூட.


மிக அருமைம்மா....ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.

கீதம்
14-02-2012, 08:51 PM
மிக அருமைம்மா....ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.

நன்றி அண்ணா.

susibala.k
15-02-2012, 10:12 AM
ஒரு அங்கீகரிக்கப்பட்ட இடத்திலிருந்து அணுபவசாலிகளின் வாழ்த்துக்கள் !!!! எனது எழுத்தும் வாழ்த்தப்பெறும் என நினைத்தும் பார்க்காத நிமிடங்களில் !!!
ஆனந்தமாய்ப் பொங்கும் - உணர்ச்சி வசப்பட்டக் கண்கள் !!!!
வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல !!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-03-2012, 04:09 PM
மிகவும் நன்று...நன்றி பாலா அவர்களே :)