PDA

View Full Version : கனவுகள்



reena
14-02-2012, 02:32 PM
தனிமையில் என் மனம் இருக்க ...
உன் நினைவுகள் அதை அலங்கரிக்க ....
மகிழ்வுடன் அதை நான் அனுபவிக்க ...
நினைவுகள் கனவுகளாய் உருவெடுக்க ...
நினைவுகள் - கனவுகள் ஆகும் பொது ...
அந்த கனவுகளே ஆறுதலாக இருக்கும் ....

அக்னி
14-02-2012, 02:38 PM
மீண்டும்
நிஜங்கள் ஆகலாம்
நினைவுகளும் கனவுகளும்...

கூடியிருந்த காலம் விலத்தி வாடிப்போவதும்,
வாடியிருந்த காலம் விலத்திக் கூடிமகிழ்வதும்,
காதலின் இரவும் பகலும்தானே...

reena
14-02-2012, 02:51 PM
நினைவுகள் அழகானவை ...
நினைவுகள் கனவுகளாய் அவதாரம் செய்ய ....
நினைவுகளின் இனிமையில் .... தனிமையில் ... வாடும் மனதிற்கு ...
அது ஒரு சிறு புத்துணர்ச்சி .... .புது உணர்ச்சி ...

aasaiajiith
14-02-2012, 03:01 PM
உன் நினைவுகளுக்குத்தான்
எத்துனை வலிமையடி
தனிமையில் இருந்தாலும்
கூட்டத்தில் இருந்தாலும்
குண்டுகட்டாய் தூக்கி சென்று
ஆட்கடத்தல் புரிகின்றது
தனக்கு துணையாக
என் நினைவை ...

அக்னி
14-02-2012, 03:06 PM
தனிமையில் வாடுகையில்
நினைவுகள் அழகானவைதான்...

அந்த நினைவுகள் நிஜமாகி வாழ்வது
நிஜமான அழகல்லவா...

reena
14-02-2012, 03:10 PM
வலிமை என் நினைவுகளுக்கு மட்டுமல்ல...
என் நினைவுகளுக்குள் ஒளிந்திருக்கும் .....
காதலுக்குமே...!!!!

அக்னி
14-02-2012, 03:15 PM
ஒளித்து வைக்காமல்
ஒளிர வையுங்கள்,
இன்னமும் வலிமை பெற்றிடும்
உம் காதல்...

aasaiajiith
14-02-2012, 03:31 PM
என் நினைவுகளை தயார் செய்கிறேன்
உன் நினைவுகளை விட பலமாய்
உன் நினைவை போல்
துணைக்கு நினைவை தூக்கிவராமல்
உன்னையே ஒரு நாள்
என் வசம் தூக்கிவர...

அக்னி
14-02-2012, 03:47 PM
உன் நினைவுகளையே
காக்கத்தெரியாத நீயா,
என்னைத் தூக்கச் செய்யப்போவது...

aasaiajiith
14-02-2012, 05:26 PM
தூக்கபோவது நான் அல்ல
தூக்கனாங்குருவியே..
தூக்குவதர்க்கே தனி திறனோடு
தயாரித்து வரும் தன்னிகறில்லா
என் நினைவே !
தயாராகிக்கொள்....

ஆதி
24-04-2012, 09:00 AM
ரொம்ப நாளைக்கு அப்புறம் மன்றத்தில் இப்படி கவிப்போர் பார்க்க நல்ல இருக்கு

தூக்க போவது
உன் நினைவா ?
தூக்கனாங்குருவியா ?
தூக்க நான் குருவியா !!!

meera
24-04-2012, 09:26 AM
ரொம்ப நாளைக்கு அப்புறம் மன்றத்தில் இப்படி கவிப்போர் பார்க்க நல்ல இருக்கு

தூக்க போவது
உன் நினைவா ?
தூக்கனாங்குருவியா ?
தூக்க நான் குருவியா !!!

ஆதன், தாமரை அண்ணா ட்ரெய்னிங் நல்லா வேலை செய்யுதே!!!!!!!!!!! :lachen001::aetsch013::aetsch013:

meera
24-04-2012, 09:27 AM
கவிதையும் பதில் கவிதைகளும் அருமை.:D:D

ஆதி
24-04-2012, 09:29 AM
ஆதன், தாமரை அண்ணா ட்ரெய்னிங் நல்லா வேலை செய்யுதே!!!!!!!!!!! :lachen001::aetsch013::aetsch013:

இது நல்ல இருந்தா அண்ணனுக்கும், சாம்பவிக்கும் பெருமை போய் சேரட்டும், நல்லா இல்லாட்டி குறை என்னை சேரட்டும்

நன்றிங்க அக்கா

aasaiajiith
24-04-2012, 11:15 AM
உன் நினைவுகளையே
காக்கத்தெரியாத நீயா,
என்னைத் தூக்கச் செய்யப்போவது...




தூக்கபோவது நான் அல்ல
தூக்கனாங்குருவியே..
தூக்குவதர்க்கே தனி திறனோடு
தயாரித்து வரும் தன்னிகறில்லா
என் நினைவே !
தயாராகிக்கொள்....



தயாராவதில் இத்தனை தாமதமா ??
ஒரு வேலை உன் நினைவுகளுக்கு இருந்த வலிமையில்
சரி பாதி கூட உனக்கு ,உன் மேல் இல்லையோ ??


(ஆதனின் ஆசைக்கிணங்க தற்காலிகமாய் நிர்கவைகபட்டிருக்கும்
போரினை மீண்டும் துவக்கலாமென ஒரு முயற்சி ,சிறு முயற்சி )

ravikrishnan
24-04-2012, 11:39 AM
:lachen001:அனைத்தும் கவிதைகளும் நன்றாக உள்ளது.இது என்ன கவிதை vs கவிதை:lachen001::lachen001:

அக்னி
01-05-2012, 03:52 PM
தூக்கபோவது நான் அல்ல
தூக்கனாங்குருவியே..
தூக்குவதர்க்கே தனி திறனோடு
தயாரித்து வரும் தன்னிகறில்லா
என் நினைவே !
தயாராகிக்கொள்....



தயாராவதில் இத்தனை தாமதமா ??
ஒரு வேலை உன் நினைவுகளுக்கு இருந்த வலிமையில்
சரி பாதி கூட உனக்கு ,உன் மேல் இல்லையோ ??


(ஆதனின் ஆசைக்கிணங்க தற்காலிகமாய் நிர்கவைகபட்டிருக்கும்
போரினை மீண்டும் துவக்கலாமென ஒரு முயற்சி ,சிறு முயற்சி )
உன் நினைவும் நீயும் போல்
வேறுவேறல்லவே,
என் நினைவும் நானும்...

என் நினைவைத் தூக்க
என்னையும் தூக்க வேண்டும்...

தூக்கனாங்குருவி என்றதனால்
என்னோடு என் கூடும் சேர்ந்துவிடும்...

உன் நினைவுக்குப் பலம்
காணா குருவியே...
இது கனா குருவியே...

aasaiajiith
03-05-2012, 12:28 PM
அனுமதி கூட வேண்டாம் .
கடைக்கண் பார்வை ஒன்று போதும்
உன்னை மட்டும் அல்ல
உன் கூட்டை மட்டும் அல்ல
இனிமையில் உன் நினைவுக்கு நிகராய்
நிகர் செய்ய ஏதும் இல்லா
உன் நினைவின் பொருட்டு
கூட்டை என்ன ,வீட்டை என்ன
நீ இருக்கும் நாடியே தூக்கி செல்லலாம்
பலப்ரிட்சைக்கு நான் தயார்
கனா குருவியே !
கான குருவியே !