PDA

View Full Version : அகோரத்தின் அங்கீகாரம்

கீதம்
14-02-2012, 12:34 AM
மனவிகாரங்கள் மறைத்துவைக்கப்பட்ட
மனித முகங்களின் மத்தியில்
முகவிகாரம் மறைக்காத மனமொன்று
சங்கமிக்க முனையும்போதெல்லாம்...

சட்டென அடங்கிடும் சலசலப்பு போல்
சங்கடமுண்டாக்குவது வேறெதுவும் இல்லை.

பரிச்சயமற்ற முகங்களின் ஏற்றிய புருவங்கள்
வேற்றுக்கிரகவாசியென விதிர்த்து,
படபடக்கும் பார்வைகளால்
தங்கள் திடுக்கிடலை வெளிக்காட்டுமுன்
தன்னைப் பரிச்சயப்படுத்திக்கொள்ள விழைகிறது அம்முகம்,
நேசக்கரம் நீட்டி.

பிறக்கும்போதே கூடப்பிறந்தவையோ,
பின்னாளில் வந்து ஒட்டிக்கொண்டவையோ,
திராவகமோ, எரிதழலோ, வன்மமோ, வசையோ…
உருவமழிக்க முனைந்த வக்கிரத்தின் உக்கிரமோ..

அகோர வடுக்கள் பற்றிய அக்கோர யூகங்கள்
இன்னும் அந்நியப்படுத்துகின்றன
அம்முகத்துக்கான அங்கீகாரத்தை!

மறுதலிக்கப்படும் சுயமுணராதது போல்
மறுபடியும் பின்னலாடுகிறது நட்பின் இழை!

பாராமுகங்கள் தந்திரமாகத் திருப்பப்படும்
கடைசி நொடியின் துல்லியத்தில் வலிந்திழுக்கப்படுகின்றன,
சுயசங்கடமற்றதொரு மென்புன்னகையால்!

தொடர்ந்து வெளிப்படும் சம்பிரதாய நலம்விசாரிப்புகளோ
தவிர்க்கும் பார்வைகளின் தவிப்பை
தாறுமாறாய் வெளிப்படுத்தும் விதமாகவே…

ஜானகி
14-02-2012, 04:25 AM
அகோர முகத்தின் மனத்தின் அழகோ அதி லாவண்யம் ! அழகிய முகத்தின் மனமோ....? இரண்டும் அழகானால் உலகே அழகு....

susibala.k
14-02-2012, 04:45 AM

உண்மையின் எதார்த்தத்தை வெளிப்படையாகக் கூறும் உண்ணதமான வரிகள் ,கண்கள் குளமாகும் இதயம் கனமாகும் மேற்சொன்ன நிமிடங்களில் !!!! நிதர்சணத்தை ஏற்கத்தானே வேண்டும் !!! வாழ்த்துக்கள் !!!!

கீதம்
14-02-2012, 07:04 AM
அகோர முகத்தின் மனத்தின் அழகோ அதி லாவண்யம் ! அழகிய முகத்தின் மனமோ....? இரண்டும் அழகானால் உலகே அழகு....

தங்கள் அழகான பின்னூட்டத்தால் இக்கவிதையும் அழகுபெறுகிறது. மிகவும் நன்றி ஜானகி அம்மா.

உண்மையின் எதார்த்தத்தை வெளிப்படையாகக் கூறும் உண்ணதமான வரிகள் ,கண்கள் குளமாகும் இதயம் கனமாகும் மேற்சொன்ன நிமிடங்களில் !!!! நிதர்சணத்தை ஏற்கத்தானே வேண்டும் !!! வாழ்த்துக்கள் !!!!

ஊக்கமிகுப் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சுசிபாலா.

சசிதரன்
14-02-2012, 12:09 PM
//
மறுதலிக்கப்படும் சுயமுணராதது போல்
மறுபடியும் பின்னலாடுகிறது நட்பின் இழை!//

:):)

சிவா.ஜி
14-02-2012, 07:59 PM
உண்மையாக சொன்னால்...இப்படியான பூடகக்கவிதை எனக்குக் கைவரப் பெறவில்லை. எத்தனை முயன்றாலும் நேரிடையான அர்த்தம் தொனிக்கும் பாமரக் கவிதையே முடிகிறது. தங்கையின் மொழி ஆளுமை வியக்க வைக்கிறது.

வாழ்த்துக்கள்ம்மா.

(இப்படிப்பட்டக் கவிதைகளைப் புரிந்து அனுபவிக்கும் ஞானத்தை நான் எப்போது பெறுவது எனும் ஏக்கத்துடனே வாழ்த்துகிறேன்)

கீதம்
14-02-2012, 08:12 PM

தங்கள் பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்ச்சி அண்ணா. இதில் பூடகம் எதுவும் இல்லை, நேரடிக்கவிதையே இது.

சமீபத்தில் என்னைப் பாதித்த நிகழ்வு இது. விகாரமான, பார்க்கவே திடுக்கிடவைக்கும் முகம் கொண்ட ஒரு பெண்மணியின் வரவால் ஒரு நிகழ்ச்சிக்கென கூடியிருந்த மக்களின் மத்தியில் திடீரென எழுந்த அமைதியும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளையுமே கவிதையாக்கியிருக்கிறேன்.

(இப்படிப்பட்டக் கவிதைகளைப் புரிந்து அனுபவிக்கும் ஞானத்தை நான் எப்போது பெறுவது எனும் ஏக்கத்துடனே வாழ்த்துகிறேன்)

உங்கள் தன்னடக்கம் பிரமிக்கவைக்கிறது. புரியாதவரா நீங்கள்? அனைவருக்கும் புரியட்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி அண்ணா.

கீதம்
14-02-2012, 08:13 PM
//
மறுதலிக்கப்படும் சுயமுணராதது போல்
மறுபடியும் பின்னலாடுகிறது நட்பின் இழை!//

:):)

பின்னூட்டத்துக்கு நன்றி சசிதரன்.

சிவா.ஜி
14-02-2012, 08:19 PM
அழகானக் கவிதைம்மா. அகோர முகங்களும் அழகுதான் அடுத்தவரின் அகம் திறக்கும்போது.

நான் சொல்ல வந்தது...இதேக் கருத்தை என்னால் இத்தனை அழகான சொல்லாடலுடன் சொல்ல இயலாது என்பதையே. அதனால்தான் தங்கையின் சொல் வளமையை வியக்கிறேன்.

கீதம்
14-02-2012, 08:23 PM
அழகானக் கவிதைம்மா. அகோர முகங்களும் அழகுதான் அடுத்தவரின் அகம் திறக்கும்போது.

நான் சொல்ல வந்தது...இதேக் கருத்தை என்னால் இத்தனை அழகான சொல்லாடலுடன் சொல்ல இயலாது என்பதையே. அதனால்தான் தங்கையின் சொல் வளமையை வியக்கிறேன்.

இதுபோன்ற ஊக்கங்களே என்னை எழுதவைக்கின்றன. மிகவும் நன்றி அண்ணா.