PDA

View Full Version : வண்ணங்களும் பெண்களும்



ஆளுங்க
12-02-2012, 11:58 AM
"எனக்கு மயிலிறகு பச்சை கலரில் தான் சுடிதார் வேண்டும்"

"உனக்கு கொஞ்சம் கூட கலர் சென்ஸே இல்லை. இது Baby Pink.. இது Onion pink. எப்படி ரெண்டுக்கும் மேட்ச் ஆகும்?"

"நல்லா தான் இருக்கு.. ஆனா, இதுவே கொஞ்சம் Magenta வா இருந்தா நல்லா இருந்திருக்கும்"

என்னங்க? உங்க வீட்டிலும் இப்படி கலர் தொடர்பான போராட்டங்கள் நடக்குதா?


http://4.bp.blogspot.com/-i3DXbpFXwMU/Tzdlc2V78bI/AAAAAAAABfE/DZ4H5hZeh_o/s320/10859872-blue-shades-of-crayons-ob-black-background.jpg (http://4.bp.blogspot.com/-i3DXbpFXwMU/Tzdlc2V78bI/AAAAAAAABfE/DZ4H5hZeh_o/s1600/10859872-blue-shades-of-crayons-ob-black-background.jpg)



வண்ணங்கள் தொடர்புடைய துறைகளில் (ஜவுளி, ஓவியம்) வேலை செய்யும் ஆண்களைத்
தவிர பெரும்பாலான ஆண்களுக்கு வண்ணங்களின் பட்டியல் மிக குறைவு தான்.
இதனாலேயே, பலர் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணி எடுக்கும் போது
அல்லல்படுகிறார்கள்!


வண்ணங்களைப்
பற்றிய ஆய்வு செய்த நிபுணர்கள் வண்ணங்களை ஆண்களும், பெண்கலும் எப்படி
பார்க்கிறார்கள் என்று ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.. படம் இதோ:


http://3.bp.blogspot.com/-c6BXHTkArsU/TzdlYMYbn0I/AAAAAAAABes/KcjBf8t2_-M/s320/colors.jpg (http://3.bp.blogspot.com/-c6BXHTkArsU/TzdlYMYbn0I/AAAAAAAABes/KcjBf8t2_-M/s1600/colors.jpg)






சிவப்பு,
பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களை மட்டுமே மனித கண்களால் காண முடிகிறது.
அவற்றின் கலவையே பிற நிறங்களாக மனிதர்களுக்குத் தெரிகிறன. அனைத்து
நிறங்களும் சேர்ந்த நிறம் வெள்ளையாகும், எதுவும் இல்லாதது கருப்பாகவும்
இருக்கும்.

ஆனால், நிறங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு மட்டும் எப்படி இத்தனை திறன் இருக்கிறது?


மனிதர்களைப்
பாலின் அடிப்படியில் வேறுபடுத்திக் காட்டுவது நமது செல்களில் உள்ள
மரபுத்திரிகள் (chromosome). பெண்களுக்கு இரண்டு X வகை மரபுத்திரிகளும்,
ஆண்களுக்கு 1 யும், 1 Y வகை மரபுத்திரியும் இருக்கும்.


http://4.bp.blogspot.com/-jqe_sHS-rfw/TzdlZfShKAI/AAAAAAAABe0/6Q_qhjAqg4M/s320/human-sex-chromosomes.jpeg (http://4.bp.blogspot.com/-jqe_sHS-rfw/TzdlZfShKAI/AAAAAAAABe0/6Q_qhjAqg4M/s1600/human-sex-chromosomes.jpeg)

நிறங்களைப் பிரித்தறிய உதவும் மரபணு X வகை மரபுத்திரியில் இருக்கிறது.
பெண்களுக்கு இரண்டு X மரபுத்திரிகள் இருப்பதால் தான், அவர்களால் மிகவும் நுணுக்கமாக நிறங்களைப் பிரித்தறிய முடிகிறது.





கொசுறுத் தகவல்:

நிறக்குருடு நோய் பெண்களிடம் காணப்படாத்தற்குக் காரணமும் இதே தான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய ஆண், நிறக்குருடிற்கு ஆட்படுகிறான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய பெண்களோ, மற்றொரு X மரபுத்திரியினைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறார்கள். (இரண்டு X மரபுத்திரிகளும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு அல்லவா?)

எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!

susibala.k
12-02-2012, 01:04 PM
நல்ல தகவல் , நன்றி !!!

jayanth
12-02-2012, 02:36 PM
நல்ல தகவல் !!!

தாமரை
13-02-2012, 09:14 AM
எங்களுக்குக் கலர் தெரியாது என்று இல்லை. மேட்சிங் ஜாக்கெட் வாங்க கடை கடையா அலைய வேணாம்னுதான் கலர் தெரியாதுன்னு பொய் சொல்றோம்.

இலட்சம் பேர் இருக்கிற கடை வீதியில் பக்கத்தில் இருக்கிற நண்பனுக்கு ஒரு சிங்கிள் கலரை அடையாளம் காட்டற திறமை உள்ள இருக்கு. அதுவும் பச்சை என்ற ஒரு வார்த்தையை உச்சரிக்கும் விதத்திலேயே அது கிளிப்பச்சையா? இலைப்பச்சையா? பாசிப்பச்சையா? வெளிர் பச்சையா? எலுமிச்சங்காய் பச்சையா? ஸ்ட்ரைப்டா? செக்டா? பூ டிசைனா எல்லாத்தையும் சொல்லி விடுவோமாக்கும்.. :icon_ush::icon_ush:
:icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

கீதம்
14-02-2012, 08:57 AM
அறியாத தகவல் இது. பகிர்வுக்கு நன்றி ஆளுங்க. பெண்கள் இனிமேல் ஆண்களைக் குறைகூறக் கூடாது, இது பிறவிக்கோளாறு என்று சொல்ல வரீங்க. ஆனா பாருங்க, இங்க ஒருத்தர் இல்லை என்று மறுத்து தானே தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கிறார். :)

அக்னி
14-02-2012, 12:15 PM
இந்த வண்ணப் பிரச்சினை சின்னப் பிரச்சினை இல்லைதான்...


இது அழகாயிருக்கு. எடுத்துக்கலாம்...

இதே கலர்லதான் அப்போ போட்டேன்.


இது...

இது அதுக்குமுதலே போட்டாச்சு.


அது...

அது போட்டது மறந்துபோச்சா..? :sauer028:


அப்போ எனக்குத் தெரியாது. இதுக்குத்தான் வரேல்ல என்றனான்...

ஓமோம். இப்பல்லாம் என்னப்பத்தி எதுதான் நினைவில இருக்கு. எனக்கு ஒன்றும் வேண்டாம்.


:icon_ush: :redface: :p ;)

சரி சரி. அது மூணையுமே எடுத்துடுவோம்...


நல்லவேளை என் பேர்ஸ் மெலிவதில்லை...

கௌதமன்
14-02-2012, 12:57 PM
வண்ணம் பற்றியப் பதிவு அருமை. நண்பர் ஆளுங்க வண்ணங்கள் பற்றிய ஒரு அறிவியல் தொடரைத் தரலாம். சிறப்பாக இருக்கும்.

ஆளுங்க
20-02-2012, 03:56 PM
படித்து கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி..
முடிந்தால் தொடர் எழுத முயற்சிக்கிறேன்

arun
20-02-2012, 05:25 PM
தெரிந்தாலும் தெரியாத மாதிரி நடிப்பது தான் நமக்கு நல்லது இல்லையேல் என்ன ஆகும் என்பதை நான் சொல்லி தான் தெரியணுமா !