PDA

View Full Version : காகிதப்பூ



inban
11-02-2012, 04:03 PM
பாவம் இந்த இதயம்
நீ என்னை பார்த்திராவிட்டால் இது
இத்தனை இடிகளை
வாங்கி இருக்க வாய்ப்பு இல்லை

பாவம் என் தேகம்
நீ என்னை தீண்டியிராவிட்டால் இது
இத்தனை இன்னல்களை
வாசித்தறிய வாய்ப்பு இல்லை

ஒரு மழைக்கால மாலையில்
சகதியான ஒற்றையடிப் பாதையில்
நாம் நடந்து கொண்டிருந்தோம்

அப்போது விருச்சத்தின் கிளைகளை
வாழக்கை
விழி தாழ்த்தி நோக்கியது
உள்ளத்தை நனைத்த
உற்ச்சாக ஊற்றானது
தேகத்தினை தாலாட்டியது

இவைகளெல்லாம் ஒரு காலம்
என் வாலிபத்துக்கு இப்போது
கிளையுதிர் காலம்

இரண்டு முறை நான்
மரணத்தின் எல்லை வரை வந்து
மீண்டிருக்கிறேன்

மதிமயக்கும் மாலையில்
மங்கிய ஒளியில்
மார்போடு எனைத்தழுவி முத்தமிட்டாயே
அது முதல் தடவை

என் வாழ்க்கையை
என் வாலிபத்தை
என் உணர்வுகளை
என் உயிரை
இன்னொருவனுக்காக வாழ்த்தி
அரிசியால் அர்ச்சதை செய்துவிட்டு வந்தேனே
அது இரண்டாவது

இரண்டுமே மரணத்தின் மடிதான்
முன்னதுக்கும்
இப்போதைக்கும் இருக்கும்
வாழ்வு மாற்றத்தைப்போல
உண்மைக்கும் பொய்மைக்கும் உள்ள
முரண்பாடு போல

அப்போது நீ
நச்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தாய்
நான் எங்கெங்கு இதழ் பதிக்கலாம் என்று
யோசித்திருந்தேன்

இப்போது நீ
வரவு செலவுகளை
எண்ணிக்கொண்டிருக்கிறாய்
நான் மரணத்தின் வழிகளை யோசித்திருக்கிறேன்

இந்தப் பூவும்
ஒரு காலத்தில்
வித்துக்கு ஏங்கித் தவித்ததுதான்
இந்த மலரும்
ஒரு காலத்தில்
மயக்கும் மனத்தினை
கொலுவேற்றி இருந்ததுதான்

எனைக்கவர்ந்த வண்டு
எனை விட்டு அகலும் வரை
என் உயிர்த்தேனை உறுஞ்சிய வண்ணத்துப்பூச்சி
உதறிவிட்டுப் போகாதவரை

இப்போதும் இது பூதான்
வண்டுகள் வர வாசமும் இல்லை
வாடி உதிர
வழியும் இல்லை

இப்போதும் இது பூதான்
உபயோகப்படாமலே
செத்தொழியும்
காகிதப்பூ

அமரன்
06-04-2012, 08:33 PM
நீ....ண்ட பாதைதான்.
இரு மருங்கிலும் அடர்ந்து விரிந்த விருட்சங்களுடன்..
விருட்சங்களின் கிளைகளில் இருக்கும் பூக்கள் அழகுதான், காகிதப் பூவானாலும்..