PDA

View Full Version : மரங்களை வாழவைப்போம்

inban
11-02-2012, 10:23 AM
மரங்கள்
பூமியின் ஆடைகள்
அவை சரிகின்ற ஒவ்வொரு போதும்
பூமித்தாய்
துகிலுறியப்படுகிறாள்

மரங்கள்
வருண தேவனுக்கு
பூமி காட்டும் பச்சைக்கொடிகள்

மானுடத்தின்
பாவம் தீர்க்கவென்றே
பிறப்பெடுத்த
புண்ணிய வதிகள்

மலர்கள்
பூமிப்பெண் அணிந்த
ஆபரணங்கள்

உப்பு நீரினை
உண்ணும் நீராக்க
ஓயாது உழைக்கும் விஞ்ஞானிகாள்

சொல்லிவிடுங்கள்!
மரங்களின்
மகத்துவம் சொல்லி விடுங்கள்!!

மழையின் தாய்
மரங்கள் என்பதை..
காற்றின் இருதயம்
இலைகள் என்பதை..
உரத்துச் சொல்லுங்கள்

மனிதனே
மரங்களை வெட்டாதே!

உன் கோடாரியின்
ஒவ்வொரு சுழற்ச்சியும்
வருங்கால வம்சமத்தின்
கல்லறைக்கு கடைக்கால்

மரங்களை வாழ்வை!
மனிதனே
மனிதரையும் வாழ்வை!

காற்றில்லாமல் உயிர்களில்லை
கரைகளில்லாமல் நதிகளில்லை
மரங்களில்லாமல் மனிதன் இல்லை

மன்மதன்
11-02-2012, 10:30 AM
100 வது பதிவு , அருமையான பகிர்வு..

இன்னும் கவிதை விதைகளை தூவி மன்றத்தில் நிறைய கவிதை மரங்கள் வளர்க்க வாழ்த்துகள்....

inban
11-02-2012, 10:34 AM
100 வது பதிவு , அருமையான பகிர்வு..

இன்னும் கவிதை விதைகளை தூவி மன்றத்தில் நிறைய கவிதை மரங்கள் வளர்க்க வாழ்த்துகள்....

நன்றி ஆலோசகரே எனது பனி தொடரும் எப்போதும்

ஆதவா
11-02-2012, 02:26 PM
மரத்திற்கான கவிதை அருமை!! பூமியைக் காப்பாற்ற இறைவன் நமக்குக் கொடுத்த சான்ஸ்!!! மரங்களை வளர்!! நாம் வாழும் இடத்தை நாமே அழிக்கிறோம் என்பது வேதனைதான்...

மரங்கள் முழுவதையும் பெண்ணாகவே வர்ணித்திருக்கிறீர்களே? ஆண்களுக்கும் கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?

எளிமையான உவமைகளோடு அழகாக இருக்கிறது கவிதை

எனது அலுவலகத்தில் செடிகள் வைத்திருக்கிறேன்.. இரண்டு விஷயங்களுக்காக,
எபிப்ரம் ஆரம் எனும் மணிப்லாண்ட் செடி மனிதனுக்கு நெருங்கிய தோழன். அறையிலிருக்கும் கெட்ட காற்றுகளை எடுப்பதில் முன்னுக்கு நிற்கிறது அச்செடி. இன்னொன்று அது அழகுக்காகவும்!!

மரம் செடி கொடிகளுக்குள் வீடு கட்டவேண்டும் என்பது எனது ஆசை!!!

inban
11-02-2012, 03:17 PM

ஆண் சார்ந்த உவமைகளோடு மரங்களைப் பாட கொஞ்சம் கற்றுக்கொடுங்கள்
மரங்களின் நளினம் பெண்மைக்கானது.
வேண்டுமானால் யாரேனும் கவிதாயினிகள் ஆண்மை சார்ந்த உவமையோடு கவிபாடட்டும்.

மற்றபடி உங்களின் வீடுகட்டும் ஆசை
விரைவில் நிறைவேறட்டும்.

நன்றிகள் பல..

ஆதவா
11-02-2012, 03:33 PM
ஆண் சார்ந்த உவமைகளோடு மரங்களைப் பாட கொஞ்சம் கற்றுக்கொடுங்கள்
மரங்களின் நளினம் பெண்மைக்கானது.
வேண்டுமானால் யாரேனும் கவிதாயினிகள் ஆண்மை சார்ந்த உவமையோடு கவிபாடட்டும்.

மற்றபடி உங்களின் வீடுகட்டும் ஆசை
விரைவில் நிறைவேறட்டும்.

நன்றிகள் பல..

///ஆண் சார்ந்த உவமைகளோடு மரங்களைப் பாட கொஞ்சம் கற்றுக்கொடுங்கள்///

நீங்கள் நன்றாக உவமை அமைத்து பாடுகிறீர்கள்... நான் ஏதாவது சொல்லப்போயி எடக்குமுடக்கு ஆகிவிடும்!! (தெரியலைங்க்றத எவ்வளவு பெருமையா சொல்லவேண்டியிருக்கு பாருங்களேன்)

நான் முயற்சி பண்ணீனது!!

புங்கையின் கைகள்
அலெக்ஸை நினைவு படுத்தின
மரத்திற்கும் அவனுக்குமுண்டான உறவில்
மரக்கைகளின் விளிம்பில்
காய்ந்தும் நினைவுப்படத்தில்
அலெக்ஸின் இரத்தம்.
புங்கை விரல்கள் கிழித்த
அலென் ஷோலி சட்டை
வேம்பின் பழக்கொட்டை
வைத்தடித்த கைமுட்டி
இளமுருங்கையின் உடலேறி
ஒடிந்து விழுந்த இடுப்பு
சீனிப்புளியங்காவை கல்லெறிந்து
தெறித்த அம்புஜா அக்காவின் மண்டை
அலெக்ஸுக்கும் மரத்திற்கும்
உண்டான உறவில்..
சரிந்து விழுந்து கிடக்கிறது
இத்தனை ஆண்டும் வளர்த்த
எங்கள் வீட்டு மா மரம்!

----------------------------
அந்த வேம்பைப் பிடுங்கியெறிவது
அவ்வளவு சுலபமன்று
எத்தனை முயன்றும்
நினைவை விட்டு வெளியேறாத
அவனைப் போல...

இது ரொம்பவே சுமார் டைப்புத்தான்... :rolleyes:
---------------------

விழுதுகளின் கெட்டியைப் போன்றது
ஆணின் வலிமை
தெரிந்து கொள்ள
கொஞ்சம் இழுத்துப் பார்!!

படு கேவலமா இருக்கோ??? :eek:

யோசிச்சா ஆணுக்கு அவ்வளவா வரமாட்டேங்குது..

நீங்களே முயற்சி பண்ணலாம்னு நினைக்கிறேன். நான் ஜகா வாங்கறேன்.

inban
11-02-2012, 04:16 PM

உண்மையில் முதலாவது கவிதை அபாரமாக இருக்கிறது.
அவசரத்துக்கே உரித்தான சிற்ச சில குறைபாடுகள் அதில் இருப்பினும் நீங்கள் ஒரு நல்ல ஆசுகவி என்பதை அவற்றால் மறைத்துவிட முடியாது.

பிறிதொரு சமயத்தில் நானும் முயலுவேன்
[எப்படி ஜகா வாங்குறான் பாருங்க]

ஸ்ரீசரண்
12-02-2012, 03:00 AM
நல்லதொரு கவிதைப் பதிவு...

அபாரம்..........

கலையரசி
12-02-2012, 04:46 AM
மரந்தான், மரந்தான்
எல்லாம் மரந்தான்
மறந்தான், மறந்தான்
மனிதன் மறந்தான்,”
என்ற வைரமுத்துவின் கவிதை வரிகள் எனக்கு நினைவுக்கு வந்தன. சமுதாய அக்கறையோடு கூடிய நல்ல பதிவு. இன்பனுக்குப் பாராட்டுக்கள்.

inban
12-02-2012, 05:04 AM
மரங்களின் மேல் அக்ககரை கொண்டு
பாராட்டுவோருக்கு நன்றி