PDA

View Full Version : சாதிச் சண்டைகள்.......



Nanban
22-12-2003, 05:14 AM
சாதிச் சண்டைகள்.......
சாதிகளை முறிப்போம்
சமரசம் காண்போம்
சங்கே முழங்கு

கூட்டம் முடித்து
அலுவலகம் திரும்பினான்.

ஆர அமர்ந்து
வந்திருக்கும் சிற்றிதழ்கள்
வாசித்தான்.

ஒன்று கூறியது -
நவீனத்துவம் அறியாத கூட்டமே
அம்புலிக்கு எழுதப் போ.

சூடாகி முறுக்கேறியது உடல்.

அடுத்த இதழ் -
மரபு உதறிய மைந்தனே
திருந்தி வா -
மேய்ப்பவனாக
கை விரித்து அழைக்கும்

மற்றுமொன்று பேசியது
தமிழை விற்கும் கூட்டமே
விலகிப் போ....

கொதித்து எழுந்தான் -
தன் இதழ் வழி
பிறரைச் சாட.....

இலக்கிய இதழ்கள்
எழுத்துகளில் சாதிப் பிரித்து
வெட்டு குத்து யுத்தம்
நடத்துகின்றன.

இலக்கிய சாதிச் சண்டைகளை
இவர்கள் எப்போது முடிப்பார்கள்
தவித்தது -
அடிபட்டுக் கிடக்கும் மொழி.

இளசு
22-12-2003, 05:39 AM
பல "சாதி"ப் பூக்களையும்
தொடுத்து தினம்
மாலை போடும் உங்களைப்
போன்றவர்களால்
தொடர்ந்து நடக்கும் மொழி..

வாழ்த்துகள் நண்பன்..

பாரதி
22-12-2003, 07:29 AM
என்ன ஆச்சரியம்..!? இலக்கிய சண்டைகள் குறித்து மேலும் ஒரு கவிதை... எப்படியோ மனிதசாதிக்காக படைக்கப்பட்ட மொழி மேலும் வளம் பெற்றால் சரி.

Nanban
22-12-2003, 08:15 AM
பாரதிக்கும், இளசுவிற்கும் நன்றி.......

இது, இளசுவின் கவிதையைப் படித்து, எழுதப்பட்ட கருத்து தான். நன்றாக வந்திருப்பதாக நான் கருதவே தனித் தலைப்பாக்கிக் கொடுத்து விட்டேன். மேலும், இளசுவின் கவிதைக்கும் கீழே ஒரு நீண்ட கருத்து....... அதையும் படியுங்கள்........

இக்பால்
22-12-2003, 10:43 AM
பரவாயில்லை நண்பனே.

அமரன்
29-10-2007, 09:57 PM
சாதிக்கத் துடிக்காது
முனைப்புடன் சாதிச்சண்டை இட்டு
சதித்ததாக காட்ட
துடிப்புடன் எழுதும்??????
கபடதாரிகளை சாடும் கவி.

உச்சந்தலையில்
ஆழமாக அடித்த ஆணி.

நேசம்
30-10-2007, 02:53 AM
இலக்கிய சாதி சண்டையாக இருந்து விடு போகட்டும். தமிழ் வளர்ந்தால் சந்தோஷம். நல்ல கவிதை நன்பன் அவர்களே