PDA

View Full Version : இல்லறத்தின் வெள்ளிவிழா...!!



சிவா.ஜி
10-02-2012, 05:25 PM
இலக்கின்றி இருந்தவனுக்கு
விளக்காய் வந்து என்
வாழ்க்கையில் வெளிச்சம் காட்டியவள்
என்னோடு இணைந்து
இருபத்தியைந்து ஆண்டுகளாகிறது
வெள்ளிவிழா ஆண்டில் காலம் எங்களுக்கு
சொல்லிக்கொடுத்த உத்தி...
உள்ளத்தை உள்ளத்தால் அறியென்பது
என் நினைப்பு அவள் செயல்
அவள் நினைப்பு என் செயல்...!
தூரதேசம் வசிக்கும் என் மனதின்
பாரம் நீக்கியவள் அவள்
தாரம் என்பதிலும் மேலாய் எனக்குத்
தாய்மைக் காட்டியவள் அவள்...
விருந்தினனாய் வந்துபோகும் என்னை
பிள்ளைகள் மனதில்,
அமர்ந்தவனாய் ஆக்கிய அன்னை
எத்தனை ஆண்டுகள் காலம்
எங்களுக்காய் விட்டுவைத்திருக்கிறதோ
அத்தனை ஆண்டுகளும் எங்களை இந்த
அன்பே ஆள வேண்டும்.....
என்னை அவள் சுமந்து
அவளை நான் சுமந்து
இன்னும் வரும் வாழ்வை வாழ வேண்டும்....!!!

(இன்று11-02-1012 எங்கள் வெள்ளிவிழா திருமண ஆண்டில் என்னவளுக்காய் இக்கவிதை சமர்ப்பணம்)

susibala.k
10-02-2012, 05:52 PM
மதிப்பிற்குரியவருக்கு , வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !!! வாழ்த்துக்களே வாழவைக்கும் என்ற கருத்தில் எனக்குள்ள தீவிர நம்பிக்கையின் பேரில் வாழ்க வளமுடன் என வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்கவளமுடன் !!!

சிவா.ஜி
10-02-2012, 06:13 PM
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பாலா.

மதி
10-02-2012, 09:56 PM
அட்டகாசமான கவிதை.. அண்ணிக்கு இதை விட என்ன வேண்டும்..? வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் அண்ணிக்கு.. .. :)

ஜானகி
11-02-2012, 12:27 AM
நல்லறமாய் இல்லறம் தழைக்க ஆசிகளும் வாழ்த்துக்களும்...வாழ்க பல்லாண்டு அன்பெனும் தென்றல் இதமாய் வருட....

M.Jagadeesan
11-02-2012, 01:16 AM
இல்லறத்தின் வெள்ளிவிழாக் காணும் சிவா.ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். கவிதை மிகவும் அருமை!

கீதம்
11-02-2012, 04:46 AM
அன்பின் சமர்ப்பணம் கவிதை முழுவதும் அர்ப்பணம்.

மனம் நிறைத்த மனைவிக்கு இதைவிடவும் மகத்தான பரிசு வேறு என்ன இருக்க முடியும்?

அன்பான வாழ்த்துக்கள் அண்ணா, தங்களுக்கும் அண்ணிக்கும்.

என்றென்றும் இருவரும் அன்பின் ஆளுமைக்குள் அகப்பட்டு வாழ வாழ்த்துகிறேன்.

சிவா.ஜி
11-02-2012, 05:06 AM
ரொம்ப நன்றி மதி. இந்த நாள்ல வீட்ல இருக்க முடியலையேங்கறதுதான் கொடுமை.

சிவா.ஜி
11-02-2012, 05:07 AM
மிக்க நன்றி ஜானகி அவர்களே.

சிவா.ஜி
11-02-2012, 05:08 AM
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜகதீசன்.

சிவா.ஜி
11-02-2012, 05:09 AM
ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க தங்கையே அன்பின் ஆளுமையைத்தான் இருவருமே விரும்புகிறோம்.

மிக்க நன்றிம்மா கீதம்.

செல்வா
11-02-2012, 12:44 PM
இனிய வாழ்த்துக்கள் அண்ணா...!

மன்றமும் மன்றத்தில் வாழும் தமிழும் உங்களை வாழ்த்துகிறது...!

சிவா.ஜி
11-02-2012, 02:08 PM
ரொம்ப நன்றி செல்வா.

ஆதவா
11-02-2012, 02:11 PM
வாவ்.... வாழ்த்துகள் அண்ணா.. 25 வருடங்கள் சந்தோஷமான வாழ்வை இன்னும் 250 வருடங்களுக்கு மேலும் தொடரவேண்டும்!!! (தலைமுறை தலைமுறையாய்..)
அதற்கான வாழ்த்துப்பா அருமை!!! இதை அவர்களுக்குப் படிக்கக் கொடுங்கள்!

அன்புடன்
ஆதவா

சிவா.ஜி
11-02-2012, 02:14 PM
ரொம்ப நன்றி ஆதவா. ம்...அவங்களுக்கும் படிச்சுக் காட்டனும்...அலைபேசியிலத்தான்...ஹி..ஹி...!!

vasikaran.g
13-02-2012, 11:03 AM
இலக்கின்றி இருந்தவனுக்கு
விளக்காய் வந்து என்
வாழ்க்கையில் வெளிச்சம் காட்டியவள்
என்னோடு இணைந்து
இருபத்தியைந்து ஆண்டுகளாகிறது
வெள்ளிவிழா ஆண்டில் காலம் எங்களுக்கு
சொல்லிக்கொடுத்த உத்தி...
உள்ளத்தை உள்ளத்தால் அறியென்பது
என் நினைப்பு அவள் செயல்
அவள் நினைப்பு என் செயல்...!
தூரதேசம் வசிக்கும் என் மனதின்
பாரம் நீக்கியவள் அவள்
தாரம் என்பதிலும் மேலாய் எனக்குத்
தாய்மைக் காட்டியவள் அவள்...
விருந்தினனாய் வந்துபோகும் என்னை
பிள்ளைகள் மனதில்,
அமர்ந்தவனாய் ஆக்கிய அன்னை
எத்தனை ஆண்டுகள் காலம்
எங்களுக்காய் விட்டுவைத்திருக்கிறதோ
அத்தனை ஆண்டுகளும் எங்களை இந்த
அன்பே ஆள வேண்டும்.....
என்னை அவள் சுமந்து
அவளை நான் சுமந்து
இன்னும் வரும் வாழ்வை வாழ வேண்டும்....!!!

(இன்று11-02-1012 எங்கள் வெள்ளிவிழா திருமண ஆண்டில் என்னவளுக்காய் இக்கவிதை சமர்ப்பணம்)
கவிதை நன்று. நீங்களும் உங்கள் மனைவியும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன் .

வசிகரன்.க

சிவா.ஜி
13-02-2012, 12:03 PM
ரொம்ப நன்றி வசிகரன்.