PDA

View Full Version : இப்படியும் வற்றிவிடுமா.....!!!



சிவா.ஜி
10-02-2012, 03:00 PM
இப்படியும் வற்றிவிடுமா என்
கற்பனையின் ஊற்று
சொற்படிக்கேட்ட சிந்தையில் இன்று
உருப்படியாய் ஒன்றும் உதிப்பதில்லையே
வெற்றுக்காதிதத்தை எத்தனை நேரம்தான்
உற்றுப்பார்ப்பது.....
சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாய்
முட்டிப்பார்த்தாலும் மூளைக்கு எதுவும்
கிட்டவில்லையே.....
பறக்கும் பட்சி
கறக்கும் மாடு
வெறுக்கும் காதலி
சறுக்கும் அதிர்ஷ்டம்....குப்பை
பொறுக்கும் பையன்
உருக்கும் வெய்யில்.....
எதுவுமேத் தூண்டவில்லையே சிந்தையை....
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் இயலாமல்
வெறுத்துப்போய்க் கிறுக்கிய இதையேக்
கவிதையென வைக்கிறேன்........!!!

கீதம்
11-02-2012, 04:59 AM
கிறுக்கல்களுக்குள் ஒளிந்திருக்கிறது
குழந்தையின் ஓவியம்.
மனம் சுருக்கவேண்டாம்,
அடைமழைபோல் திடுமென வரும்,
கவிமழை!

அடைபட்டிருக்கும் கவியூற்றும்
கண்திறக்கும் அந்நாளில்
கவிக்காலமும் கார்காலமாகும்!
கவலையற்று நனையலாம்
கவிவேட்கைத் தணிக்க நாங்களும்!

காத்திருக்கிறோம் அண்ணா.

அனுராகவன்
11-02-2012, 09:16 AM
கவிதை எழுத என்ன தேவை...
எழுதுகோல்...
கண்ணீர்....

ஆதவா
11-02-2012, 12:15 PM
வாங்க வாங்க....
உங்களுக்காகத்தான் காத்திட்டு இருக்கோம்...

என்றும் உங்கள் ரசிகர்கள் நாங்கள்,
ஆதவா..

தாமரை
12-02-2012, 08:52 AM
இதென்ன பெரியாறா? காவிரியா? பாலாறா?

அதெல்லாம் மழை வந்து மண் குளிர்ந்தால் தானே ஊறும்

மன்மதன்
12-02-2012, 10:31 AM
கற்பனை ஊற்று வற்றி விட்டது
என்பதை பொய்த்து விட்டன
அடுத்தடுத்த வரிகள்..!!

சிவா.ஜி
14-02-2012, 09:16 PM
நன்றிம்மா கீதம். வருவோம்ல.....!!!

சிவா.ஜி
14-02-2012, 09:18 PM
ஆதவா.....தாமரை....மழை பெய்யும்......ஊற்று திறக்கும்.....ஹா...ஹா..!!!

அமரன்
14-02-2012, 09:19 PM
வாங்கய்யா... நீங்களுமாய்யா...

வருதே இல்ல என்பதை சொல்ல வந்திட்டுதே..

இனி தடை இராது.

கொட்டட்டும்..

சிவா.ஜி
14-02-2012, 09:19 PM
நன்றி மன்மதன்......இன்னும் வரிகள் மின்னி வருமா....சிந்தையை தட்டி விடுகிறேன்....வரும்போலத்தான் தெரியுது.....ஹி....ஹி..!!!

சிவா.ஜி
14-02-2012, 09:20 PM
ஆமா பாஸ். மன்றம் தொடர்ந்து வந்தாலே வரிகள் வரிசையில் வரும் போல......கம்பன் வீட்டுக் கட்டுத்தறியாய்......

Dr.சுந்தரராஜ் தயாளன்
13-03-2012, 02:58 PM
நல்ல கருத்தாழம்...அருமை :)

சிவா.ஜி
13-03-2012, 08:03 PM
மிக்க நன்றி ஐயா.