PDA

View Full Version : வறட்சி



M.Jagadeesan
10-02-2012, 02:25 AM
மலரைக் காணோம்; வண்டைக் காணோம்
சோலை மட்டும் இருக்குது
சோலை மட்டும் இருக்குது

நிலவைக் காணோம்; மீனைக் காணோம்
வானம் மட்டும் இருக்குது
வானம் மட்டும் இருக்குது.

கடவுள் இல்லை; பக்தன் இல்லை
கோயில் மட்டும் இருக்குது
கோயில் மட்டும் இருக்குது.

எதுகை இல்லை மோனை இல்லை
கவிதை மட்டும் இருக்குது
கவிதை மட்டும் இருக்குது.

நீரைக் காணோம்; மணலைக் காணோம்
ஆறு மட்டும் இருக்குது
ஆறு மட்டும் இருக்குது

துண்டைக் காணோம்; துணியைக் காணோம்
உடம்பு மட்டும் இருக்குது
உடம்பு மட்டும் இருக்குது.

வாய்மை இல்லை; நேர்மை இல்லை
மனிதன் மட்டும் இருக்கிறான்
மனிதன் மட்டும் இருக்கிறான்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
01-04-2012, 04:24 PM
மனிதன் மனிதனாக இல்லையே ஐயா ....அதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது :)

கீதம்
02-04-2012, 12:48 AM
அழகான தேர்ந்த உவமைகள் மூலம் மனிதனிடத்தில் காணப்படும் குறையை சொல்லாமல் சொல்லி கவிதையை நிறை செய்துவிட்டீர்கள். பாராட்டுகள் ஐயா.