PDA

View Full Version : நட்பு



inban
09-02-2012, 03:44 PM
தென்றல் மலரோடு நட்பு பூண்டது
மலர் தாலாட்டு பெற்றது
தென்றல் புனிதமானது

மரம் பறவையோடு நட்பு பூண்டது
பறவை ஆசனம் பெற்றது
மரம் கானத்தில் லயித்தது

பூமி சூரியனோடு நட்பு பூண்டது
பூமி கோயிலானது
சூரியன் தெய்வமானது

நண்பர்களே
நட்ப்பில்லாத வாழ்வென்பது
மணமில்லா மலரினைப் போன்றது

நட்பு மனக்காயங்களுக்கு
மருந்திடுகின்றது
கசந்திடும் வாழ்விலே
வசந்தத்தை கொணர்கிறது
நட்பில்லா நபரொருவன்
வேரில்லா மரமாகிறான்

நட்பில்லா மனிதனொருவன்
ஒளி இல்லா
வானமாகிறான்

நட்பிலாமல் உலகமில்லை
நட்பில்லாமல் வானமில்லை
நட்பில்லாமல் மனிதரில்லை

நண்பர்களே
நட்பு பூணுங்கள்

நட்பு நீர் போன்றது
அறிவு அல்லிக்கொடி போன்றது
நட்பின்மட்டம் கூடக் கூட
அறிவு ஓங்கிஉயரட்டும்.

ஆதவா
09-02-2012, 04:30 PM
பூமி சூரியனோடு நட்பு பூண்டது
பூமி கோயிலானது
சூரியன் தெய்வமானது

கோவிலை விட்டுட்டு ரொம்ப தூ.....ரத்தில இருக்கே கடவுள்???

நட்பு இல்லாத இடமே இல்லை இல்லையா?
நட்பு எழுதாத கவிஞனும் இல்லை!!

வாழ்த்துகள்

அமரன்
09-02-2012, 09:57 PM
ஒப்பிலா உறவு நட்பு..

அன்பு மேலீட்டால் ஒருவர் பலவாறு அழைக்கப்படுவது இயல்பு.

அப்பு, ராசா, செல்லம், குட்டி என அம்மா பிள்ளைகளைக் கொஞ்சுவது அதிலொன்று..

நட்பும் அப்படித்தான்,,

மச்சி, மாமு, டேய், எனப் பலவாறு அழக்கப்படுகிறது.

எனவே, ஒப்பிலா உறவு நட்பு என்பது சரியானது..

கவிதையும் அழகானது
நட்பைத் தாங்கி வந்திருப்பதால்..