PDA

View Full Version : புரியாத புதிர் !!!reena
09-02-2012, 03:22 PM
எத்தனை கடும்சொல் சுமந்தேன் ....
எத்தனை எத்தனை வலிகள் சுமந்தேன் ....
இத்தனையும் பொறுமையாய் தாங்கினேன் -பொறுமை பெரிதென எண்ணியதால் .....
ஆனால் ..................இப்பொழுதும் புரியாத புதிர் ....
அப்படி என்ன பாவம் செய்தேன் ???
பெண்ணாக பிறந்ததை தவிர ......

aasaiajiith
09-02-2012, 04:16 PM
"மங்கையராய் பிறந்திருக்க மா தவம் செய்திட வேண்டுமம்மா" ...
என மகா கவி பாரதியின் வரிகளையும் ,
திருவி.க, , பெரியார் ,கல்கி,பாரதிதாசன் , போன்ற
பெரும் பெண்மை போற்றிகளின் வழிவந்தவன்
விழி பிதுங்கி , மதி மயங்கி நிற்கின்றேன்
விதியே என ,பெண்ணாய் பிறந்தது புரியாத புதிரென,
பாவம் என புலம்பும் உன் புலம்பல் கேட்டு !

ஆதவா
09-02-2012, 04:28 PM
கடைசியில்
பெ க்கு பதில் ஆவென இருந்தாலும் பொருந்தும்!!!
விடுங்க ரீனா!!:)

அமரன்
09-02-2012, 09:36 PM
கவிதையைப் படித்து முடித்த நொடியில்
கவிதையின் தலைப்பு தலை தூக்குவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒவ்வொரு உயிரும்
தன் தன் மொழியில் இந்த மாதிரி வடிக்கக்கூடும்..

தொடருங்கள் ரீனா.

jayanth
10-02-2012, 02:38 AM
:mad:நம் முன்னோர் போற்றினர் பெண்களை அவர் பெண்மையை அன்று. தூற்றுகின்றார் இன்று பெண்களை பெண்களே. இன்று காலை The Times Of India செய்தித் தாளில் மேற்கு வங்க முதலமைச்சர் குமரி மம்தா பானர்ஜி மேற்கு வங்க மருத்துவ மனைகளில் குழந்தைகள் இறப்புப் பற்றி இப்படி கூறியிருகின்றார் அவர் கூறியதை ஆங்கிலத்தில் அப்படியே எழுதியிருகின்றேன்."Before spreading panic over infant deaths,remember that those mothers who lost their children had conceived during the previous government rule" பெற்றால்தான் தெரியும் பெண்மையின் மகத்துவம். அவருக்கு எங்கே தெரியப்போகிறது அவர்தான் "குமரி" ஆயிற்றே.:mad:

reena
10-02-2012, 10:12 AM
கடைசியில்
பெ க்கு பதில் ஆவென இருந்தாலும் பொருந்தும்!!!
விடுங்க ரீனா!!:)
ஆறுதலுக்கு நன்றி !!!

reena
10-02-2012, 10:17 AM
:mad:நம் முன்னோர் போற்றினர் பெண்களை அவர் பெண்மையை அன்று. தூற்றுகின்றார் இன்று பெண்களை பெண்களே. இன்று காலை The Times Of India செய்தித் தாளில் மேற்கு வங்க முதலமைச்சர் குமரி மம்தா பானர்ஜி மேற்கு வங்க மருத்துவ மனைகளில் குழந்தைகள் இறப்புப் பற்றி இப்படி கூறியிருகின்றார் அவர் கூறியதை ஆங்கிலத்தில் அப்படியே எழுதியிருகின்றேன்."Before spreading panic over infant deaths,remember that those mothers who lost their children had conceived during the previous government rule" பெற்றால்தான் தெரியும் பெண்மையின் மகத்துவம். அவருக்கு எங்கே தெரியப்போகிறது அவர்தான் "குமரி" ஆயிற்றே.:mad:
நாளிதழில் பெண்ண்களுக்கு நடுக்கும் கொடுமைகளை தினசெரி படிகின்றேன் நான் !!!
வருந்திகுறேன் கண்ணீர் வடிக்கிறேன்...வெறும் கண்ணீர் அல்ல !!!நண்பரே ... ரத்தகண்ணீர்

reena
10-02-2012, 10:18 AM
அதையும் கொஞ்சம் கவனிப்பீராக !!

aasaiajiith
10-02-2012, 10:34 AM
கண்ணீர், கண்ணீர் ,கண்ணீர்
பிறக்கும் போதும் கண்ணீர்
இறக்கும் போதும் கண்ணீர்
இறந்த பின்னரும் கண்ணீர்
இடைப்பட்ட காலத்திலாவது
உங்கள் கண்கள் பன்னீர் சொரிய வேண்டும் !
காலமெல்லாம் கண்ணீர் வடித்தது போதும் !

ஒரு வேலை தண்ணீரை போல்
விலைமதிப்பு ஆக்கினால்
கண்ணீர் வடிப்பது கட்டுப்படுமோ?:confused:

reena
10-02-2012, 01:01 PM

தண்ணீர் உயிரின் அமிர்தம் ....
கண்ணீர் பெண் (நான்) வாங்கி வந்த வரம் ...
ஆனால் என்(பெண் ) காண்ணீர்கும் விலை உண்டு .....
அதன் பெயர்தான் ...பொறுமை....!!!!.

susibala.k
10-02-2012, 01:10 PM
எத்தனை கடும்சொல் சுமந்தேன் ....
எத்தனை எத்தனை வலிகள் சுமந்தேன் ....
இத்தனையும் பொறுமையாய் தாங்கினேன் -பொறுமை பெரிதென எண்ணியதால் .....
ஆனால் ..................இப்பொழுதும் புரியாத புதிர் ....
அப்படி என்ன பாவம் செய்தேன் ???
பெண்ணாக பிறந்ததை தவிர ......

ஆணென்றும் பெண்ணென்றும் பெரிதாகப் பேதமில்லை
அப்பாவி ஆகிவிட்டால் எல்லாமும் பாதகமே !!!
கண்ணீர்தான் விடிவென்றால் காவிரியும் கங்கையாகும்
வற்றாத கண்ணீரும் காட்டாறாய்க் கரைமுட்டும் !!!
வாழ்ந்திடவே பிறப்பெடுத்தொம் , வாழ்ந்துதான் பார்ப்போமே !
துணிந்துசெல் மனமே !!! வானமும் வசப்படும் ,
இமயமும் எறும்பாகும் , எட்டிநின்றே வழிகொடுக்கும் !!!

அனுராகவன்
10-02-2012, 02:05 PM
கண்ணீர் வடிக்க நேரமில்லை...

reena
10-02-2012, 02:55 PM
துணிச்சல் இல்லாமல் பெண்கள் இவ்வுலகில் வாழ்வது அரிது ...
.நான் அதை நன்கு அறிவேன்...
பிரச்சனைகள் திசை நான்கும் தாக்க ....இளகிய மனம் படைத்த பெண்ணிற்கு ஆறுதல் ..
கொஞ்சம் கண்ணீர் மட்டும் ....அது இயல்பு !!!
அது கூடாது என்றல் ....
பெண்ணை இங்கனம் படைத்த இறைவனை கேளுங்கள் ......
கண்ணீர் துணிச்சலின்மையால் அல்ல .....
சுய ஆறுதலை தேடி மட்டுமே .....
கண்ணீர் தப்பில்லை !!!!!
(கண்ணீரை நியாயபடுத்தவில்லை.....ஆனால் அது தவறுமில்லை )

நன்றி !!!