PDA

View Full Version : அறியாமல் வந்த காதல் ....



reena
08-02-2012, 03:11 PM
என் வாழ்வினுள் நுழைந்தாய் - நான் அறிந்து ....
என் மனதினுள் நுழைந்தாய் - நன் அறியாமலே
இப்பொழுது ....என் மனதில் கலந்து ...என் ஜீவனாக மாறிவிட்டாய் .... என் மனதோடு வாழ்கிறாய் !!என்றும் என்னுள் என் உயிராக வாழ்வாயா ??? அறியாமல் வந்த என் அன்பு காதலே .....!!!!!

aasaiajiith
08-02-2012, 06:47 PM
"அறியாமல் வந்த என் அன்பு காதலே"

அடேங்கப்பா !

அறியாமல் வந்த காதலுக்கே
ஆர்பரிக்கும் அமோக மரியாதையா ?

"ஆசை"க்கே ஆசை வந்து விடும் போல !
ஆசைஎன்னவோ பேராசைதான் என்றாலும்
இந்த சிறு இதயத்திற்கு, அது மிகபெரும் ஆசை

ஓசையின்றி அம்மிகப்பெரும் வரம் கிடைக்கும் என்றால்
அப்பெரும் வரத்திற்கு சிறு பகரமாய்
சுவாசமாய் கருதும் ஆயுளை, உன் வசம் அர்பணித்து

உன் காதலனாய் வாழ்ந்து, உன் காதலனாய் மடிய தயார்
ஓர் நாள் பிறந்து ஒரே நாள் வாழ்ந்து மடியும் ஈசலைப்போல்.

reena
09-02-2012, 02:53 PM
அறிந்து வந்த காதலை விட ....
அறியாமல் வந்து மனதை ஆட்கொள்ளும் காதல் ...
காலத்தால் மறையாதது ,அழியாதது ......
காதல் மிகவும் அழகானது ...
அறியாமல் வந்த காதல் அழகானது மட்டுமல்ல மிகவும் அரிதானதும் ......ஒரு நாள் பிறந்து ஒரு நாள் வாழ்ந்து அந்த அரிதான ,அழகான காதலை உணர்வது முடியுமா என்ன ???

Dr.சுந்தரராஜ் தயாளன்
27-03-2012, 11:18 AM
"அறியாமல் வந்த என் அன்பு காதலே", வரிகள் அருமை. ஆயினும் எதற்காக இவ்வளவு தொடர் புள்ளிகள், தொடர் ஆச்சரியக்குறிகள், தொடர் கேள்விக்குறிகள் ? புரியவில்லை ரீன அவர்களே!:)

கௌதமன்
27-03-2012, 03:20 PM
இன்னும் எழுதுங்கள்....

உங்களை அறியாமலேயே கவிதை உங்கள் வசப்படும்.