PDA

View Full Version : அன்னை சிரித்தாள்..இளசு
21-12-2003, 08:37 PM
அன்னை சிரித்தாள்..

இதயத்தில் தொடங்கி
வாய் வழி கடந்து
செவி வழி நுழைந்து
ஓலை வீதி, அச்சு வீதி தாண்டி
இணைய வீதியில்
இன்றவள் உற்சவம்..

அன்னை ஒருத்திதான்..
ஆனால்
அவள் பிள்ளைகள்தான் காங்கிரஸ் ரகம்..

இரட்டைத்தாழ்ப்பாள் போட்ட
ஒட்டக்கூத்தன் கூத்துவரை
பார்த்துவிட்ட அன்னை அவள்..

அன்று திண்ணையில் அடித்துக்கொண்டவர்கள்
இன்று திண்ணை.காம்மில்...

நவீனமே, நவ இசமே - இது ஒரு கோஷ்டி..
எளியவளே, இனியவளே - இது ஒரு கோஷ்டி..

சுடலைமாடன் எல்லாம் சாமியில்லை - கீழ்த்தரம்..
அத்வைதம் ரேஞ்சுக்கு வா..
உலகத்தரம் உத்தரவாதம்..
ஏலே,மூதி.. கூரையேறி கோழி புடில்லே முதல்லே
வைகுண்டக்கனவு அப்பால வச்சுக்கல்லே..

அடக் குண்டுச்சட்டியே.. கிணற்றுத் தவளையே
அடக் கடல் பாசியே கறிக்குதவா சுரைக்காயே

வாழைப்பழச் சோம்பேறி..
கஷ்டப்பட்டுப் பறிச்சு உறிச்சு ருசி..
ஆட்டுக்கல் காலம் போச்சு
இன்ஸ்டண்ட் இட்லி மாவு கொடு

புரியாம எழுதறதுதான் பெரிய இலக்கியம்..புரிஞ்சுக்கோ
புரியறாப்ல எழுதற வரை நான் வர்ல..தெரிஞ்சுக்கோ

நீ பாடியது பிரச்சாரம்..
நீ தேடுவது விளம்பரம்..

வடத்தேர் கீழே கிடக்க
வார்த்தைப்பூக்களால் அர்ச்சனை...

அன்னையின் சமரசத்திட்டம் என்ன?
அன்றே சொன்னதுதான்
ஆற்றில் போடுங்கள் படைத்ததை..
அதோ கண்ணுக்கெட்டா கரை சொல்லும்..
எது இலக்கியம் என்று..

ஆறு - காலம் !
குறியீடு.
இல்லை உவமை

அடடா, சண்டை மீண்டும் ஆரம்பம்..

சலித்த அன்னை கண்ணில்..
நகராட்சிப் பள்ளியில்
தமிழ்த்தகுதரக் கணினியில்
தத்தித்தத்தி ஒரு பிஞ்சு தட்டச்சிய காட்சி..

" அம்மா இங்கே வா வா"

அன்னை சிரித்தாள்..

முத்து
21-12-2003, 10:27 PM
தொட்டுத் தொடரும் இந்தப்
ப()ட்டுப் பாரம்பரியம் மிக அருமை....

புதுக்கவிதைகள் வர ஆரம்பித்தவுடன்
ஒரு சாரார் சொன்னார்கள் ..

" நான் வந்தேன் .. அவள் வந்தான் .. இவன் போனான் .."
இப்படி சம்பந்தமேயில்லாமல்
ஒரு வரிக்கு ஒரு வார்த்தையை இட்டுக்
கவிதை என்று சொல்வது மட்டுமல்லால்
அதை எழுதியவன் பெரிய கவிஞன் என்றும் சொல்லிக்கொள்கிறான் ..
இலக்கணமில்லாமல் ஒரு கவிதையா.. ?
இது எப்படி இலக்கியமாகும் " ...

"அவர்கள் சொலவதில் கொஞ்சம் உண்மையிருக்கிறது"
சொன்னது ஒரு கூட்டம் ...

அடுத்தவனுக்கு எழுதும் சிறு கடிதமும்
சீட்டுக்கவியாகத்தான் எழுதவேண்டும் ..
எழுத்து என்பதே கற்றறிந்த பெரும்பண்டிதர்க்கு மட்டுமே
என்ற நிலை ஒரு வழியாய் அழிந்தது ..

புதுக்கவிதையும் , உரைநடை இலக்கியங்களும் வந்து
எழுத்தைப் படிப்பவன் அனைவருமே படைக்கவும் முடியும்
என்ற தமிழின் பொற்காலம்
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்.
ஒரு வழியாய் மலர்ந்தது.

ஆனால்
கொஞ்ச நாளிலேயே திரும்பவும் கூச்சல்கள் ...
இது இலக்கியம் இல்லை .. நீ இலக்கியவாதியில்லை ..
என்னுடைய செருப்பின் அளவுதான் உங்கள்
அத்தனை பேரின் காலளவும்
அடித்துச் சொன்னது ஒரு கூட்டம் ....

"..உனக்குப் பொருந்தும் சட்டை மற்றவனுக்கும் பொருந்தும்
என்று எதிர்பார்க்காதே "
விவேகானந்தன் அன்று சொன்னது
ஆனால் ...
இன்று எத்தனை பேருக்குப் புரிந்தது ..?

சிறுவர்களுக்குள் சண்டை ..
எங்க அம்மாதான் நல்லவங்க .. இல்லை இல்லை ..
எங்க அம்மாதான் ரொம்ப நல்ல்வங்க ....
என்னுடைய பேனா நல்லா எழுதும் .. இல்லை .... என்னுடையதுதான் ...
வளர்ந்த பின்னும் தொடர்கிறது ..
இதே சண்டைகள் ....

உலகம் உருண்டை ...
ஒரே திசையில் போய்க்கொண்டே இருந்தால்
திரும்பவும் அதே இடத்துக்குத்தான் வருவோமாம் ...
இது எல்லாவற்றுக்கும் பொருந்தும்தானோ ...?

கடுக்கன்இந்தக் காலம்..
ஆடையில்லாமல் அலைந்தது ஒரு காலம் ...
நிர்வாணம் புனிதமானது இக்காலத்தில் சில குரல்கள் ..

பார்க்கலாம் என்னதான் நடக்குமென்று ...
பார்த்துக் காலம் சிரிக்கிறது ... :lol:
அதற்கு இவையெல்லாம் புதிதில்லை என்றாலும் கூட ....

இளசு
21-12-2003, 10:39 PM
மிக்க நன்றி அறிவொளிரும் என் தம்பி முத்து.க்கு
பல தீர்க்க சிந்தனைகளில் உன்னை என் வழிகாட்டும் அண்ணனாய் வரித்தவன் நான்.

என் எண்ணம் இன்று மேலும் உறுதிப்பட்டுப்போனது..

பல முறை உன் ஆலோசனை கேட்டே செய்யப் பழக்கிவிட்டாய் என்னை.

விகடனில் ஆரம்பித்து
திண்ணைவரை வந்து சேறிறைக்கும் ஜெயமோகன்
அவருக்கு பதில் சொல்வதாய் மேலும் சேறடிக்கும் இளையபாரதி பற்றி
இளவல் இசாக் தந்த பதிவால் உண்மையில் மனம் நொந்தேன்..

இதையா தமிழ் இவர்களிடம் எதிர்பார்க்கிறது?

சட்டென அந்த வலியை இங்கே பதித்தேன்.

பதிலாய், மிகத்தெளிவாய் உன் பதில் கவிதை..

தஞ்சைத்தமிழனின் கருத்தே நம் கருத்தும்...

காலம் சொல்லும்..
அதுவரை ஆடாதடா ஆடாதடா மனுஷா..

முத்து
21-12-2003, 10:51 PM
அய்யோ ... அண்ணா .... :oops:
முற்றிய கதிர் நிலம் பார்த்துத் தாழுமாம் ...
பதர்கள் கொஞ்சமும் வளையாமல் நிற்குமாம் ..
நிறைகுடம் தழும்பாது ...
இதுதான் இப்போது சட்டென நினைவுக்கு வந்தது ...

பாரதி
22-12-2003, 12:38 AM
அந்தக் காலத்தில் கம்பன், வரிகளை கண்டுபிடிக்க முயன்று முடியாமல் மீண்டும் பாமரனைத் தேடிக் கண்டான்... அவன் கவிஞன்.

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்றான் வள்ளுவன். இங்கே எல்லோரும் காயைப் பறிப்பதிலும், எறிவதிலும் கவனமாக இருக்கிறார்கள். சரியாக சொன்னீர்கள் அண்ணா... காலம் பதில் சொல்லும்.
நல்லா இருக்கு அண்ணா...

kaathalan
22-12-2003, 01:48 AM
அங்கே ஆன்மீக அரசியல் பக்கங்களில் அலை மற்றும் இளசு அண்ணாக்களின் பெயர்களை பார்த்து விட்டு படிக்கப்போனால் "பெரிய தம்பி, சின்னத்தம்பி". கொஞ்சம் ஏமாற்றத்துடன் படித்தால் அவை மன இறுக்கத்தை குறைத்தாலும் உங்கள் தலைப்புக்கு ஏற்றப் பதில்களை காணமல் கொஞ்ச கோபத்துடன் இங்கே வந்தால் முத்து அண்ணாவுடன் சேர்ந்து முத்தான பதில்கள் எனது குழப்பத்துக்கு.

அருமையான பதில்களாகவும் படைப்புக்களாகவும் எனக்கு தென்படுகிறது இவைகள். கோடி நன்றிகள்.

இளசு
22-12-2003, 05:58 AM
தம்பி காதலனுக்கு

இந்த சர்ச்சைகள் தாண்டிய நிலைக்கு
நாம் மதிக்கும் எல்லா படைப்பாளிகளும் போய்
அவரவர் கடன் படைப்பதே - படைப்பது மட்டுமே
என்ற நிலை வரவேண்டும் என்பதே என் ஆதங்கம்.

கருத்துக்கு நன்றி..

இளசு
22-12-2003, 06:19 AM
நல்லா இருக்கு அண்ணா...

நன்றி தம்பிக்கு... :D

Nanban
22-12-2003, 08:07 AM
இந்தக் கவிதையைப் படித்ததும், பதிலாக QUICK REPLYயில் டைப் செய்து விட்டுப் பார்த்தால், அது நன்றாக வந்திருப்பதாகத் தோன்றவே, து தனித் தலைப்பாகப் பதிப்பிக்கப்பட்டு விட்டது.

எழுதுவது எல்லோருக்கும் உரித்தானது. வாசிப்பதை அவரவர் தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டும். மிக அதிகமான வாசகர்களுக்குப் புரியும் படி எழுதுபவர், மிக அதிக பயன் பெறுவர். மிக குறைந்த அளவிற்கு புரியும் வாசகர் உள்ள படைப்பாளிகள் குறைந்த பயன் பெறுவர். எந்த மாதிரி வாசகருக்கு எழுத வேண்டும் என்பது படைப்பாளியின் முடிவு. காசு எங்கு வரும் என்று பார்ப்பவர்கள் அந்த அளவிற்கு எழுதிப் பிழைக்கட்டும்.

இப்படி எழுதி விட்டுவிட்டால், என்ன நடக்கப் போகிறது?

ஒரு கட்டத்தில், எல்லோரும் பிழைக்கும் வழி தேடி விட்டால்? பின்னர், எல்லோருமே கீழிறங்கி விடக் கூடும். அப்புறம் நல்ல படைப்புகளே வரவில்லை என்றால், காலம் எந்தப் படைப்பை வைத்துக் கொள்ளப் போகிறது? ஒன்றும் இருக்காது......

காசை எதிர்பார்க்க மாட்டேன் - நல்ல தரமுள்ள எழுத்துகளை மட்டுமே எழுதுவேன் என்று அடம் பிடித்து தங்கள் வாழ்க்கையே தொலைத்து மொழிவளம் சேர்த்தவர்களால் மட்டுமே பிழைக்கும், இந்த மொழி. அந்த மாதிரி வந்தவர்கள் தானே - பாரதியும், புதுமைப் பித்தனும்?

இப்பொழுது கேள்வியே - வாழ்க்கையே தொலைத்து, தவமாக எழுத்தைத் தொழிலாகச் செய்யுங்கள். காலம், (நீங்கள் செத்து சுண்ணாம்பாகிப் போன பின்னர்) சொல்லும் ஒருநாள் - ஆஹா, இவர்கள் நல்ல படைப்புகளைச் செய்து விட்டார்கள் என்று. புகழ் வருகிறது; பணம் வருகிறது; ஆனால், இவற்றால் ஆன பயன்? தொலைந்த வாழ்க்கையை அவர்களுக்கு மீட்டுத் தருவது யார்? அவர்கள் பசி கொடுத்த வேதனையுடன் தானே செத்துப் போனார்கள்? அந்த வலியை இன்று கொடுப்பதின் மூலமாக இல்லையென்று செய்து விட முடியுமா?

ஒரு காலத்தில் மன்னர்கள் இருந்தனர் - இத்தகைய மொழி பேசும் கவிஞர்கள் புலவர்களைப் பார்த்துக் கொண்டனர். ஆனால், இன்று அரசிற்கு அது கடமையல்ல. ஒரு சில பரிசுகளை அறிவிக்கிறார்கள் - அத்தனை படைப்பாளிகளுக்கும் அது போய்ச் சேருவதில்லை. படைக்கும் தொழிலில் வாழ முடியாது வேறு தொழில் செய்து பிழைக்கப் போகலாம் என்று எல்லோரும் முடிவு செய்து விட்டால், பின்னர், படைப்புகள் எங்கிருந்து வரும்? படைப்பதை பொழுதுபோக்காகச் செய்பவர்களால், தரம் உயர்த்த முடியாது.

படைப்பதை முழுநேரமாக செய்தால் மட்டுமே இது சாத்தியம். இன்று நாம் பல நிறுவங்களில் வேலை செய்கிறோம் - ஒரு டிரெய்னியா வேலைக்குச் சேர்கிறோம் - பின்னர் பல தரப்பட்ட பயிற்சிகள் - வருடந்தோறும். அத்துடன் அனுபவமும் சேருகிறது. இதனால், கற்ற கல்வியுடன் இவை அனைத்தும் சேர்ந்து, நம் திறமைகளைக் கூர்மை பெறச் செய்கின்றன.
யாராவது ஒருவருக்கு இந்தப் பயிற்சிகள் கொடுக்கப் படவில்லை - தொடர்ந்து வேலை கிட்டவில்லை. அவ்வப் பொழுது கிடைக்கும் வேலைகளைச் செய்து வர வேண்டிய சூழ்நிலை. இத்தகையவரிடம் எத்தனைத் திறமைகள் இருந்தாலும்,
அது முழுவீச்சில் பயன் கொடுக்காது. அதுபோல ஒரு படைப்பாளியும், தொடர்ந்து பயிற்சி பெற வேண்டும். பல தரப்பட்ட இலக்கிய நூல்களையும் படிக்க வேண்டும். மரபு நூல்களையும் கூட. தன்னையொத்த பிற இலக்கியவாதிகளுடன் விவாதித்தல், தெளிவு பெறுதல், சிந்தித்தல், எழுதுதல், திருத்துதல் என்று அந்த உலகிலேயே முழுமனதுடன் உழன்று கொண்டிருந்தால் மட்டுமே, அவர்களுடைய திறன் கூர்மை பெறும். மேற்கண்ட செயல்களுக்கு யாரும் கூலி கொடுக்கப் போவதில்லை. ஆனால், அவர்கள் அந்த செயலில், தங்கள் வாழ்நாளைக் கழித்தாக வேண்டும். மற்றவர்கள் ஓடி, ஓடி பணம் சம்பாதிக்கும் காலத்தில், இவர்கள் காலம் பண சம்பாத்தியம் இன்றிப் போய்விடும். இப்படி கால நேரத்தை விரயம் செய்து, அவர்கள் வெளிவரச் செய்யும் படைப்பைக் காலம் கணித்துச் சொல்லட்டும் என்று நாம் விட்டுவிட்டால், பின்னர் எந்தக் காலத்தில் அவர்களும் தங்கள் வாழ்க்கையை வாழ்வது?

அவர்களும் ஆதரிக்கப்பட வேண்டும் - அவர்கள் வாழுக் காலத்திலேயே. கவிக்கோவும், சிவசங்கரியும் கலந்துரையாடிய பதிப்பு ஒன்று திசைகள் இதழில் வெளியாகியது. அதில் கவிக்கோ சொல்லிய விஷயம் ஒன்று - இறந்தகாலம் இறந்துவிட்டது; எதிர்காலம் என்னுடையதல்ல; நிகழுகின்ற இந்த கணம் மட்டும் தான் என்னுடையது; இதில் தான் நான் வாழ வேண்டும். இதுதான் உண்மை. காலம் பதில் சொல்லும் என்பது நம்முடைய பொறுப்பை நாம் தட்டிக் கழிப்பதாகும். ஒரு நிலை பாடு எடுக்க, பயந்து போய், காலம் பதில் தரும் என்று தப்பித்துக் கொண்டால், எந்தக் காலம் வந்து பதில் சொல்லும்? இன்றிலிருந்து ஒரு பத்து ஆண்டுகள்? ஒரு ஐம்பது ஆண்டுகள்? ஒரு நூறு ஆண்டுகள்? அப்படியானால், நாமும் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் படைக்கப்பட்ட இலக்கியங்களைத் தானே இன்று வாசித்து சிலாகித்துக் கொண்டிருக்க வேண்டும்? அந்தக் கால மத, தத்துவ, சமூக, அரசியல், பொருளாதாரக் கவலைகளைப் பற்றிய படைப்புகளைப் பற்றித் தானே பாராட்டிக் கொண்டிருக்க வேண்டும்? அன்றைய நிகழ்வுகளில் பாடம் கற்பது என்ற அளவில தான் அவைகளை நாம் சிலாகிக்கிறோம். மற்றபடிக்கு, இன்றைய பிரச்னைகளை அலசும் எழுத்துகளும் நமக்குத் தேவையாயிருக்கிறது. ஆனால், இன்று நமக்காக எழுதப்படுபவைகளை இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் கழித்து வருபவர்கள் தான் தரம் பிரிக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வாறு சரியாகும்? நமக்கு இன்று இருக்கும் அறிவைக் கொண்டு, இன்றைய தேதியிலே நல்லவைகளை இனம் காண முயல வேண்டும். இன்றைய தேதியிலேயே நாம், நம்மால் இயன்ற அளவிற்கு படைப்பாளிகளுக்கு ஊக்கம் தர வேண்டும். காலப் போக்கில் மாற்றங்கள் நிகழும் பொழுது, நாம் ஆதரித்த படைப்புகளிலிருந்து மேலும் சிறப்பான படைப்புகளை தேர்வு செய்யும் பணி மட்டும் தான் காலம் செய்வதாக இருக்க வேண்டும். (மொத்தமாக நம் தெரிவுகள் நிராகரிக்கப்படுமானால், கடவுள் தான் நம்மைக்காப்பாற்ற வேண்டும் - வருங்காலத்தில் மக்களுக்கு கிடைக்கும் அறிவும், தெளிவும் நம் வாழியாகத் தான் ப்போக வேண்டும் - அப்படி இருக்கையில் நம் தெரிவுகள் தவறாகப் போகும் என்று கணக்கிடுவது நம் அறிவின்மையைத் தான் காட்டும். அறிவற்ற நம்மால் நம் சந்ததிகளுக்கு சிறந்தவற்றைத் தெரிந்தெடுக்கும் தன்மையை மட்டும் எப்படிப் பெறுவார்கள் என்று புரியவில்லை)

காலம் என்ன செய்தாலும் செய்து கொள்ளட்டும். நாம் நம் கடமையைச் செய்து தான் ஆக வேண்டும். ஒன்றைத் தெரிவு செய்யும் பொழுது, அது நல்லதில்லை என்ற கருத்தும் வரத் தான் செய்யும். ஒருவர் சொல்லுகிறார் - இரண்டு புத்தகம் எழுத வேண்டும் அவர் இலக்கியவாதி அல்ல என்று நிறுவ என்கிறார். மற்றவர், மூன்று புத்தகம் எழுதுவேன் என்கிறார் அவர் இலக்கியவாதி என்று நிறுவ என்கிறார். இரு தரப்புமே எழுதி இருக்க வேண்டும் சரி தவறுகளை. இதைப் படிப்பவன் சரியான இலக்கியப் பாதை எது, இலக்கியத்தின் தன்மைகள் என்ன என்று புரிந்து கொண்டிருக்க முடியும். அறிவு வளம் ப்ற்றிருக்கும். பேரறிவாளர்களின் கூற்றின் படியே நாம் அணி பிரிந்து நிற்க வேண்டியதில்லாமல், நாமும் கூட ஒரு மதிப்பீட்டாளாராக உயர்ந்திருக்க முடியும் இந்த விவாதத்தின் இறுதிப் பயனாய். ஆனால் இரு தரப்புமே - இலக்கியத்தை விட்டு விட்டு, ஆர்யம் - திராவிடம் அரசியலுக்கும், சின்னவன் - பெரியவன் என்ற காலச் சர்ச்சைக்கும், தமிழ் - மலையாளம் என்று மொழிப் பிணக்கிற்கும் போய்விட்டனர். தனிநபர் ஸ்துதி அல்லது தாக்குதல் என்று போய் நின்று விட்டார்கள். எது இலக்கியம் என்ற சுவையான விவாதம் மறைந்து, நமக்கு கிடைக்கக் கூடிய அருமையான 5 திறனாய்வுப் புத்தகங்கள் கிடைக்காமலேப் போய்விட்டது. (இவர்=2, அவர்=3)

ஆனால், நாம் செய்ய வேண்டியது - கொஞ்சம் புத்தகங்கள் வாங்குவதற்கும் செலவு செய்ய வேண்டும் என்பது தான். ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் என்று. நம் பிரத்யேகத் தேவைகளுக்காக எத்தனையோ செலவு செய்யும் பொழுது கொஞ்சம் நல்ல எழுத்தாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் (நம் காலத்திலேயே) புத்தகம் வாங்குவதினால் நம் மொழிக்கு நாமும் சேவை செய்தவர்களாவோம். ராணி முத்து நாவல், நாவல் டைம் என்றல்லாது கொஞ்சமாவது தெரிந்து வாங்குவதைச் சொல்கிறேன். காலம் சொல்வதை நம் பிள்ளைகள் அல்லது பேரன்கள் கேட்கும் பொழுது, காலம் குறிப்பிட்ட படைப்புகள் நம் வீட்டு நூலகத்தில் இருக்கும் பொழுது, அவர்கள் பெருமைப்படுவர் - நம்மைப் பற்றி.

mania
22-12-2003, 09:45 AM
உங்கள் கவிதை விவாதத்தில் கலந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு தமிழ் அறிவு இல்லையே என்று வருத்தப்படுகிறேன் :roll: :roll:
அன்புடன்
மணியா

இக்பால்
22-12-2003, 10:58 AM
அன்னை சிரித்தார் என்பதைத் தவிர மற்ற எதுவும் என் அறிவுக்குள்
போகவில்லை. மறுபடியும் படித்துப் பார்க்கிறேன். தொடருங்கள்.
முத்து தம்பி கூட பரவாயில்லை.-அன்புடன் இக்பால்.

Nanban
24-12-2003, 07:18 AM
உங்கள் கவிதை விவாதத்தில் கலந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு தமிழ் அறிவு இல்லையே என்று வருத்தப்படுகிறேன் :roll: :roll:
அன்புடன்
மணியா

(திருட்டு முழி முழிக்க வேண்டாம். :roll: :roll:)

நான் சொன்னது சிம்பிள்:

நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவர்களின் புத்தகங்களை வாங்கிப்படியுங்கள் என்று தான்.

(உங்களால், வாசிக்க முடியவில்லையென்றால் யாராவது வாசிக்கும் விருப்பம் உள்ள அன்பர்களுக்குக் கொடுத்து விடவும்.....)

mania
24-12-2003, 09:20 AM
நண்பன் அவர்களுக்கு, நீங்கள் விளக்கியிருப்பது எனக்கு ஒரளவு (?) புரிகிறது. நான் சொன்னது மேலேயுள்ள கவிதைகள் பற்றி.
அன்புடன்
மணியா

Nanban
24-12-2003, 09:36 AM
திருட்டு முழிகள விலக்கிக் கொண்டது பற்றி நிறைய சந்தோஷம்.

கவிதையில் சொல்ல வந்திருப்பது - அவன் இலக்கியவாதி அல்ல என்று ஒவ்வொருவரும் கூச்சல் போடுவதைப் பற்றி கிண்டல் - satire. தான் ஒரு இலக்கியவாதி என்று ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்ளலாம். அதை நிரூபிக்கப் போராடலாம். ஆனால், நம்ம ஆட்கள், தான் இலக்கியவாதியோ இல்லையோ அடுத்தவன் இலக்கியவாதி அல்ல என்று நிரூபிப்பதில் தான் எத்தனை போட்டி போடுகிறார்கள்.

இதனாலயே பல ஞானபீட விருதுகளை இழந்திருக்கிறோம். பலருக்கு அதில் திருப்தி - குரூர திருப்தி. அந்த இழந்த எழுத்தாளர்களை யாருக்கும் தெரியாது என்பது தான் சோகம்.

இதைப் பார்த்தா ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது - நாழியில் போட்ட நண்டு போல.

என்ன தெரியுமா? நாழியில் (லிட்டர் மாதிரி ஒரு அளவை) நண்டுகளைப் போட்டு விட்டு, மூடி வைக்காமல் நீங்கள் போய் உங்கள் வேலையைப் பார்த்துட்டு, எப்ப வேண்டுமானாலும் வரலாம். ஒரு நண்டு கூட வெளியே போகாது. ஏன் தெரியுமா? ஒரு நண்டு மேலே ஏறினால், அடுத்த நண்டு, அதன் காலை இழுத்து கீழே போட்டு விடும். ஒன்று கூட மேலே ஏறி வெளியே போக முடியாது. அத்தனை பெருந்தன்மை நம்மளுக்கு.

என்னுடைய நண்பர் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். எதிரே வந்த முதலாம் ஆண்டு நண்பர் விஷ் பண்ண, இவரும் பதிலுக்கு, "என்ன டாக்டரே, சௌக்கியமா" என்று கேட்டுப் போனார். அவரிடத்தில் கேட்டேன் - "முதல் வருஷம் கூட முடிக்கல. அதற்குள்ளே டாக்டர் என்றே கூப்பிட ஆரம்பித்து விட்டீர்களே" என்ற பொழுது அவர் கூறியது - " அவருக்குள் தான் ஒரு மருத்துவர் என்ற நம்பிக்கை வரவேண்டும். அதனால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததுமே எல்லா மாணவர்களையுமே டாக்டர் என்று அழைப்போம்" என்று.

அதுபோல எழுத ஆரம்பித்த காலம் தொட்டே ஒருவர் எழுத்தாளர் என்றே அழைக்கப்பட வேண்டும். அவர் பெரிசா, சிறிசா என்றெல்லாம் பார்க்கக் கூடாது. எழுத்தாளர் என்றாலே இலக்கியத்தில் படைப்பவர் என்றும் அர்த்தம் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவதும், பெறாததும், தொடருவதும், தொடராததும் அவருடைய தனித்தன்மையைப் பொறுத்தது.

யாருக்கு யார் உரிமை கொடுத்தது - என்னைத் தவிர இலக்கியம் படைக்க ஆளில்லை என்று கூச்சல் போட?

நண்டுகள்........

முத்து
24-12-2003, 12:46 PM
அதுபோல எழுத ஆரம்பித்த காலம் தொட்டே ஒருவர் எழுத்தாளர் என்றே அழைக்கப்பட வேண்டும். அவர் பெரிசா, சிறிசா என்றெல்லாம் பார்க்கக் கூடாது. எழுத்தாளர் என்றாலே இலக்கியத்தில் படைப்பவர் என்றும் அர்த்தம் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவதும், பெறாததும், தொடருவதும், தொடராததும் அவருடைய தனித்தன்மையைப் பொறுத்தது.


நண்பன் அவர்களின் கருத்து நன்றாக இருக்கிறது ..
மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவரே டாக்டர் என்று அழைக்கப்பட வேண்டும் ..,
எழுத ஆரம்பித்த அனைவருமே எழுத்தாளர் ..
அவர் எழுதுவதும் இலக்கியம் ..
மிக நன்றாக இருக்கிறது ...
எழுதுபவருக்கு நிச்சயம் இது உற்சாகம அளிக்கும் ...

ஆனால் ..
மருத்துவப் படிப்பு முடித்துப் பல்லாண்டுகளாய் பலருக்கு
மருத்துவம் பார்த்துக்கொண்டிருப்பவரையே இவர்
மருத்துவர் இல்லை .. என்று சிலர் சொல்கிறார்களே ...
இதற்கு என்ன செய்பது .... :D

Nanban
12-01-2004, 06:58 AM
மருத்துவப் படிப்பு முடித்துப் பல்லாண்டுகளாய் பலருக்கு
மருத்துவம் பார்த்துக்கொண்டிருப்பவரையே இவர்
மருத்துவர் இல்லை .. என்று சிலர் சொல்கிறார்களே ...
இதற்கு என்ன செய்பது .... :D:

அறியாமை தான். அந்த அறியாமை இருள் நீங்கப் போராடுவது தான் நம் கடமை.........

தங்கவேல்
29-02-2008, 12:22 PM
ஆகா 2003 லேயே ஆரம்பித்து விட்டார்களா ? அடக்கருமமே....

யவனிகா
29-02-2008, 05:58 PM
ஆகா 2003 லேயே ஆரம்பித்து விட்டார்களா ? அடக்கருமமே....

இது சங்க காலத்திலேயே ஆரம்பித்தது தான்...
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமானது அந்தக்காலம்...
இந்தக்காலம் ஒண்ணுமில்லாத குப்பைகள் தான் கிடைக்குது சண்டையில்...
கவிஞர்களுக்குள் சண்டையும் தர்க்கமும் தவிர்க்கமுடியாதது...அதே நேரம் அதீதமாவது தான் வருத்தமளிக்கிறது.

சாலைஜெயராமன்
01-03-2008, 12:52 AM
குழந்தையின் மழலையை ரசிப்பதில்லையா. அதை ரசனை கெட்ட வக்ரபுத்தியுள்ளவர்கள் ஒதுக்கினால் வாழ்வில் ஒரு இன்பத்தை தொலைப்பதுபோல்தானே. இவர்களை அறிவடைந்தவர்கள் என்று எவ்வாறு ஏற்றுக் கொள்வது

சொல்ல வந்த செய்தியை நறுக்குத் தெரித்தாற்போல் நம் அன்னை மொழியில் வெகு ஜனங்களுக்குப் புரியும் பாணியில் சொல்லப்படுமானால் இதில் புதுக்கவிதை என்ன மரபுக் கவிதை என்ன. அன்னைத் தமிழின் இன்னொரு முகம்தானே புதுக்கவிதை,

தமிழின் இன்பத்தை உண்மையாகவே துய்க்க விருப்பமில்லாதவர்களிடையேதான் "தான் மட்டுமே இலக்கியங்களுக்குச் சொந்தக்காரர்" என்ற மனோபாவம் வந்துவிடுகிறது. அறிவு ஜீவிகளுக்கென்றே தாம் பிறந்துள்ளதுபோல் நினைத்துக்கொண்டு இந்த வக்கிரபுத்தி படைப்பாளிகள் தரும் பங்களிப்பை விட கருத்தாழமிக்க சில புதுக்கவிதை எவ்வளவோ மேல்.

இங்கே உலவும் நம் தமிழ்மன்றத்து உறவுகளின் சில பல படைப்புக்களைப் பார்த்தால் நிச்சயம் நாணிவிடுவார்கள் இந்த சர்ச்சைக் காரர்கள்.

திருவிளையாடல் வசனம்தான் னினைவுக்கு வருகிறது. புலவர்களுக்கிடையே போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்கக் கூடாது, இங்கே புலவர் என்பது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். இது பொறாமையின் வெளிப்பாடுதான்.

திரு இளசு அவர்களின் ஆதங்கமும். அன்னைத் தமிழின் அங்கலாய்ப்பும் அழகு தமிழில் அணிவகுத்ததற்கு பாராட்டுக்கள்.

நண்பன் அவர்களின் கருத்தாழமிக்க "எழுத முனைந்தாலே அவன் எழுத்தாளன் ஆகிறான், அதை அங்கீகரிப்பதும் அங்கீகரிக்காததும் வாசகர்கள் கையில்தான் உள்ளது". என்ற கருத்தைத் தாங்கிய வரிகள் அருமை. வெளிப்படையான சிந்தனைகளையும், கருத்துக்களையும் பாராட்டுகிறேன்,

தானேதான் இலக்கியவாதி மற்றையோர்கள் இரண்டாம்தரம்தான் என்னும் எண்ணத்தோடு சக எழுத்தாளர்களை வசைபாடுபவர்கள் தமிழினத் துரோகிகள்தானே தவிர படைப்புக் கர்த்தர்கள் அல்ல. தன் படைப்புகளால் ஆக்கமும் ஊக்கமும் தரத் தெரியாத சிறுமதிக் கூட்டத்தின் பிரதிநிதிகள்.

திரு ஜெயகாந்தன். திரு சுஜாதா காலங்களிலும் இப்படிப் பட்ட சர்ச்சைகள் உண்டுதான். ஆனால் தமிழை நேசித்ததில் இருவருமே நாகரீகத்தைக் கைக் கொண்டிருந்தனர்.

ஆனால் இன்று குழாயடிச் சண்டையாக்கியிருப்பது தமிழுக்கு இவர்கள் எந்தப் பணியும் ஆற்றவில்லை என்ற ஆற்றாமையைத்தான் தருகிறது.

வாழ்க தமிழ்.

சாலைஜெயராமன்
01-03-2008, 01:01 AM
தொட்டுத் தொடரும் இந்தப்
ப()ட்டுப் பாரம்பரியம் மிக அருமை....

கடுக்கன்இந்தக் காலம்..
ஆடையில்லாமல் அலைந்தது ஒரு காலம் ...
நிர்வாணம் புனிதமானது இக்காலத்தில் சில குரல்கள் ..

பார்க்கலாம் என்னதான் நடக்குமென்று ...
பார்த்துக் காலம் சிரிக்கிறது ... :lol:
அதற்கு இவையெல்லாம் புதிதில்லை என்றாலும் கூட ....

கால மாற்றத்தின் கோலங்கள். இணைய தளத்தில் தமிழ் பீடு நடை போட தமிழனின் பெருமைகள் தெரிய வர அனைத்திற்கும் காரணம் சிறந்த செய்திகளையும், பெரிய விஷயங்களையும் சுருங்கக் கூறும் ஆற்றல் மிக்க புதுக்கவிதைப் படைப்பாளிகளின் பங்களிப்பால்தான் என்றால் அதை மறுக்க இயலாது.

"காலத்திற்கு சர்ச்சைகள் புதியதல்ல" திரு முத்து அவர்களின் எண்ணத்தில் உதித்த இந்த வரிகள் நிறைகுடம் தளும்பாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

வேகமான இந்த யுகத்தில் பத்திரிக்கைத் துறையை இணையங்கள் ஆக்ரமித்துக் கொண்டதால் ஏற்பட்ட பொறாமையினால் இந்த சர்ச்சைகளின் மூலம் தம் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்களோ என எண்ண வைக்கிறது.

கணிணி இயக்கம், தொழில் நுட்பம் புரியாமை போன்றவைகளின் தாக்கம்தான் இரு சாரரிடையே ஏற்பட்டுள்ள அநாகரீகமான விமர்சன யுத்தம் என நினைக்கிறேன்.

நல்ல கவிதை தந்த திரு முத்துவிற்கு நன்றிகள் பல

பூமகள்
04-06-2008, 09:04 AM
பழைய சாதம்+வெங்காயம் ருசியா..
புது நூடில்ஸ் ருசியா..

அந்த கால சிவாஜி படம் சூப்பரா..
இந்த கால.. ரஜினி படம் சூப்பரா..

எப்போதும் இருக்கும்
அதே பழைய புதிய
முரண்பாடுகள்..

தமிழன்னையும் மாட்டிக் கொண்டதில் வியப்பில்லை..

ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது..

“சேரிக்கும் சேர வேண்டும்..
அதுக்கொரு பாட்டு படி…
எல்லாமே சங்கீதந்தா……
…..
…..
அம்மி மிதிச்சவ கும்மி அடிச்சவ
நாட்டுப் புறத்துல சொன்னதப்பா..”

அதில் சங்கீதத்துக்கு மொழி முக்கியமென வந்த பாடல்..

புரியும் படி இருப்பது தான் மக்கள் இலக்கியமாக கொள்ள முடியும்..
எளிமைப் படுத்துதல்.. அறிவினை மட்டுப்படுத்துதல் என்ற அர்த்தமல்ல..

இருவகையிலும்.. புரிவிக்கப்பட வேண்டும்..
முதல் முயற்சி… எளிய படைப்பு…

அடுத்த கட்ட பயணமாக..
பழாச்சுளை இலக்கிய தமிழ்…

இன்றும் பல கவிஞர்கள்…
விடாப்பிடிகளாக...
எளிமை விரும்பாமல்…

படைப்பு படிப்பவருக்குப் புரியாத பட்சத்தில்..
படைத்து என்ன பயன்??!!

புரியும் காலத்தை காலம் கொண்டு வரும் வரை..
படைப்பும் உறங்கிப் போகுமல்லவா??


அழகான படைப்பு… யுனிக்கோடாக்கிய நிர்வாகத்தாருக்கும்.. அழகிய படைப்பு படைத்த இளசு அண்ணாவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். J

kavitha
06-06-2008, 07:19 AM
படைப்பு படிப்பவருக்குப் புரியாத பட்சத்தில்..
படைத்து என்ன பயன்??!!
சரியாகச் சொன்னாய் பூ.
அதே சமயம், மூடிவைத்த பூவுக்குள்ளே என்ன வாசனையோ என்று திறக்க முயல்வதும் சுவை சேர்க்கும் விசயம் தானே. அதன் விளைவு தானே நமது விடுகதைகளும், இரட்டுறமொழிதலும். எழுதியது எதுவாக இருப்பினும் விளக்கம் அளிப்பது எழுதியவரின் கடமை.

ஒரு பழமொழி உண்டு... "நிறை குடம் தளும்பாது".

இந்தமாதிரி கோஷ்டி சண்டை நிகழும் இடம் என்றால் வந்த சுவடு கூட தெரியாமல் படித்துவிட்டு போய்விடவேண்டும். தெரிந்தவர்கள் என்றால் சமாதானத்திற்கு முயலலாம். குறைந்தபட்சம் நெய் ஊற்றாமல் இருப்பதே மாபெரும் புண்ணியம்.

பூமகள்
06-06-2008, 07:44 AM
மூடிவைத்த பூவுக்குள்ளே என்ன வாசனையோ என்று திறக்க முயல்வதும் சுவை சேர்க்கும் விசயம் தானே. அதன் விளைவு தானே நமது விடுகதைகளும், இரட்டுறமொழிதலும். எழுதியது எதுவாக இருப்பினும் விளக்கம் அளிப்பது எழுதியவரின் கடமை.ரொம்ப சரி கவி அக்கா..!:icon_b::icon_b:

குழந்தைகளுக்கு, குமிழிகள் உடைவதைப் பார்ப்பதினை விட ஆனந்தம்.. அதனைத் தன் பிஞ்சுக் கைகளால் உடைத்து மகிழ்வது தான்... அவ்வகையில்..

உள்ளார்ந்த செய்தியை ஊன்றிப் படித்து புரிந்து கொள்வதும் மிகப் பெரிய ஆனந்தம் தான்..!:icon_rollout:

ஆதவா
15-11-2008, 01:20 PM
அன்னைக்கு எப்போதுமே அழுகைதான் அண்ணா. இந்த கோஷ்டி தகராறில் நசுங்கி அழுபவள் அவளே!

படைப்பும் படைப்பு சார்ந்த உலகமும் படைப்பாளிகளின் உரிமையும் சொந்தமும் ஆகும். எளிமையும் கடினமுமாக படைப்பது அவரவர் திறம். நண்பன் சொன்ன அனைத்து கருத்துக்களும் உண்மை உண்மை உண்மை..

சில இதழ்கள் மூடி வைத்த கவிதைகளுக்காகவே வெளி வருகின்றன. அதைப் படிப்பவர்களும் அவ்வகையைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். எளிமை அவர்களுக்கு ஒவ்வாதது. எளிதில் சேர்ந்துவிட்டால் அது தரமான படைப்புக்கள் ஆகாதாம்.

மன்றத்தில் இருவகையிலும் கவிதை எழுதியிருக்கிறேன். இரட்டை சவாரியில் ஒருசமயம் ஒரு குதிரை வேகமாகப் போனாலும் மற்றொரு குதிரையும் சமாளிக்கும் அளவுக்கே எனது திறமையை வளர்த்து வைத்திருக்கிறேன். இரண்டு பக்கமும் எழுதுவதால் இவர்களிடும் சண்டையில் நசுங்கிட எனக்கு வாய்ப்பு குறைவாக இருக்கும்.. ஆனால் என் படைப்பு யாருக்குச் செல்லவேண்டும் என்று முடிவு செய்பவன் நானாக இருக்கவேண்டும். முற்றிலும் எளிமையாகவோ அல்லது கடினமாகவோ குழப்பி இருதரப்பினரையும் சுளிக்க வைப்பதைக் காட்டிலும் இரு தரப்பினரிடமும் நற்பெயர் எடுக்க விரும்புவதும் என் கடமையுமாகும்.

எனக்குப் பிந்தைய காலங்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.. காலம் என்னை என்ன செய்துவிடமுடியும்? இது ஒன்றும் படைப்பாளிக்குத் தொழில் அல்லவே!

ஒரு சிலர் வியாபாரத்தில் குறைந்த விலையும் நடுத்தர பொருளுமாக விற்கையில் சிலர் அதிக விலையும் உயர்தர பொருளுமாக விற்க, நுகர்வோர் எங்கே அதிகமாகிறார்கள் என்பதில் தான் அந்த வியாபாரிக்கு திருப்தி இருக்கிறது..

என் தாய்க்கு பல பிள்ளைகள்... எல்லாருமே ஒரு எண்ணத்தோடு ஒரு வண்ணத்தோடு இருக்க நினைப்பது அத்தாயின் தவறு.... அவ்வாறு நினைப்பவன் தவறு. அப்படி இருக்கவும் முடியாது.