PDA

View Full Version : நான்,அவர்கள்,அது..



PremM
05-02-2012, 10:54 AM
அவர்கள்,அது..
--------------------------
மர நிழல்களில் மாய்ந்து போகும் உயிர்கள்,
அதன் வேர்களில் தங்கிவிடுகின்றன..

முகவரி தேடாத முகங்களின்,
இறுதி அடையளங்கள் அவை..

ஊரோ பெயரோ தெரியாதபோதும்
அவர்களை முழுமையாய் நம்பிவிடுகின்றன..

மனிதர்களைப் போல் அல்ல மரங்கள்..

அவை தயக்கம் கொண்டு தள்ளி அமர்வதில்லை..
அவர்களின் மேல் வாடை பிடிப்பதில்லை..
நாகரிகம் அளந்து காற்று வீசுவதில்லை..
ரணங்களின் ஆழம் அறிந்து நிழல் தருவதில்லை.

அவர்களின் நீண்ட இரவுகளையும்,
கொடிய பகல்களையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது அம்மரங்கள்..


நான்,அவர்கள்.
-------------

அளந்தே அள்ளக்கூடிய சூத்திரம்
விரல்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன..

எங்கோ சேர வேண்டிய
கோப வசைகள் இவர்களின் மேல் இரைக்கப்படுகின்றன..

அதிவேக ராக்கெட்டின் தீப்பிழம்புகள்
அவர்களின் இதயம் கிழித்துப் போவதுண்டு..

இரைப்பையின் அளவை மிஞ்சாத அவர் தேடல் ஒலிகள்,
வாகன இரைச்சலின் நடுவே ஒர் உயிரின் இரைச்சல்..

அது உயிர் மீட்டும் இசை..
தடையில்லா சுவாசம் மீட்கப் போரடும் பேரொலி..

மரத்துப் போன புலன்களோ,
அதனை கடத்த மறுக்கின்றது..

காரணம் தேடும் மனமோ,
அதனை ஏற்க மறுக்கின்றது...

மரங்களெல்லம் மனிதர்களாய் மாற,
மனிதர்களெல்லம் மரங்களாய் மாற
நீட்சி பெறும் இவ்வுலகின் ஆயுள்..