PDA

View Full Version : நான் கடவுள்



சசிதரன்
05-02-2012, 06:17 AM
இன்றை இறுதி நாளென
பிரகடனம் செய்கிறேன்

உங்களுக்கான அத்தனை சுதந்திரமும்
எந்த நிபந்தனைகளுமின்றி
வழங்கப்படும்

அத்தனை கட்டுபாடுகளும்
தளர்த்தப்படும் இன்று
நீங்கள் உங்கள் முகமூடிகளை
கழற்றி விடுங்கள்

கடவுளோ சாத்தானோ
உங்கள் உண்மை முகங்கள் இன்று
கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது

மறைத்து வைத்திருக்கும்
வன்மங்களின் கூர்வாளை
தைரியமாய் பாய்ச்சுங்கள்

இன்று நடக்கும் அத்தனை செயல்களும்
குற்றங்களுக்கும் தண்டனைகளுக்கும்
உட்படாதவை என அறிவித்தாயிற்று

உங்கள் அனைவரையும்
கடவுளாக்கும் பொருட்டு
(நீங்கள் சாத்தான் என பிரகடனப்படுத்திக் கொண்டாலும் தடையில்லை)
இன்றை இறுதி நாளென
பிரகடனம் செய்கிறேன்